1000 ஸ்தோத்திரங்கள்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.

601. எனக்கு பொல்லப்ப தேடுகிறவர்கள் வெட்கி இலச்சை அடைந்தபடியால் ஸ்தோத்திரம்
602. எனனை என் சத்துருக்களிலும் ஞானமுள்ளவனாக்குகிறதற்காய் ஸ்தோத்திரம்
603. என்னை உம் பேரில் நம்பிக்கையாயிருக்கப் பண்ணினீரே ஸ்தோத்திரம்
604. என்னைப் பல்லுள்ள இடங்களில் மேய்க்கிறீர் ஸ்தோத்திரம்
605. அமர்ந்த தண்ணீர்களண்டையில் என்னைக் கொண்டு போய் விடுகிறவரே ஸ்தோத்திரம்
606. என் ஆத்துமாவைத் தேற்றுகிறவரே ஸ்தோத்திரம்
607. என்னை நீதியின் பாதையில் நடத்துகிறவரே ஸ்தோத்திரம்
608. நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் தேவரீர் எனனோடு கூட இருக்கிறீர் ஸ்தோத்திரம்
609. என்னைத் தேற்றும் உம் கோலுக்காக தடிக்காக ஸ்தோத்திரம்
610. என் சத்துருக்கள் முன்பாக எனக்கொரு பந்தியை ஆயத்தப்படுத்தினீர் ஸ்தோத்திரம்
611. என் தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணுகிறீர் ஸ்தோத்திரம்
612. என் பாத்திரத்தை நிரம்பி வழியச் செய்கிறீர் ஸ்தோத்திரம்
613. என் ஜீவனுள்ள நாளெல்லாம் என்னைத் தொடரும் உம் நன்மைக்காக, கிருபைக்காக ஸ்தோத்திரம்
614. என் கண்களுக்கு முன்பாக இருக்கும் உம் கிருபைக்காக ஸ்தோத்திரம்
615. நான் பெற்ற சகாயத்திற்காக ஸ்தோத்திரம்
616. என் காலங்கள் உமது கரத்திலிருப்பதற்காக ஸ்தோத்திரம்
617. தீங்கு நாளில் என்னைத் தமது கூடார மறைவில் மறைத்து ஒளித்து வைப்பதற்காக ஸ்தோத்திரம்
618. மனுஷனுடைய அகங்காரத்துக்கு உமது சமுகத்தின் மறைவில் என்னை மறைக்கிறதற்காய் ஸ்தோத்திரம்
619. என்னை விடுவிக்கிறவரே ஸ்தோத்திரம்
620. நீர் என்னை குணமாக்கினீர் ஸ்தோத்திரம்
621. என்னை உயிரோடு காத்தீர் ஸ்தோத்திரம்
622. என் தகப்பனும் என் தாயும் கைவிட்டாலும் என்னை சேர்த்துக்கொள்கிற கர்த்தாவே ஸ்தோத்திரம்
623. என் இருதயத்தை ஸ்திரப் படுத்துகிற கர்த்தரே ஸ்தோத்திரம்
624. நீர் என்னைத் தூக்கி எடுத்த படியால் உமக்கு ஸ்தோத்திரம்
625. உளையான சேற்றினின்று தூக்கினீரே ஸ்தோத்திரம்
626. பயங்கரமான குழியினின்று என்னைத் தூக்கி விடுகிறவரே ஸ்தோத்திரம்
627. மரண வாசல்களிலிருந்து என்னைத் தூக்கி விடுகிறவரே ஸ்தோத்திரம்
628. என் ஆத்துமாவை பாதாளத்திலிருந்து ஏறப்பண்ணினீர் ஸ்தோத்திரம்
629. என் ஆத்துமாவை தாழ்ந்த பாதாளத்திற்கு தப்பவித்தீர் ஸ்தோத்திரம்
630. என் ஆத்துமாவை மரணத்திற்கு தப்பவித்தீர் ஸ்தோத்திரம்
631. என் ஆத்துமாவில் பெலன் தந்து என்னை தைரியப்படுத்தினீர் ஸ்தோத்திரம்
632. என் ஆத்துமாவை எல்லா இக்கட்டுக்கும் நீங்கலாக்கி மீட்கிறவரே ஸ்தோத்திரம்
633. என் பாவங்கள் மூடப்பட்டதற்காக ஸ்தோத்திரம்
634. என் மீறுதலை மன்னித்தீரே ஸ்தோத்திரம்
635. என் அக்கிரமங்களை எண்ணாதிருக்கிறீரே ஸ்தோத்திரம்
636. என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீரே ஸ்தோத்திரம்
637. என் பாவங்களையெல்லாம் உமது முதுகுக்குப் பின்னாக எறிந்தவிட்டதற்காக ஸ்தோத்திரம்
638. என் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, என் நோய்களையெல்லாம் குணமாக்கினீரே ஸ்தோத்திரம்
639. என் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டீரே ஸ்தோத்திரம்
640. என்னை கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டினதற்காய் ஸ்தோத்திரம்
641. பது எண்ணெயால் என்னை அபிஷேகம் பண்ணுகிறீர் ஸ்தோத்திரம்
642. நள்மையால் என் வாயை திருப்தியாக்குகிறீர் ஸ்தோத்திரம்
643. என் வாயில் தேவனைத் துதிக்கும் பதுப்பாட்டைத் தந்தீர் ஸ்தோத்திரம்
644. இரட்சண்யப் பாடல்கள் என்னைச் சூழ்ந்து கொள்ளும் படிச் செய்கிறீர் ஸ்தோத்திரம்
645. என் பலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணினீர் ஸ்தோத்திரம்
646. என் இரட்டைக் களைந்து போட்டு மகிழ்ச்சியெனும் கட்டினால் இடைக்கட்டினீர் ஸ்தோத்திரம்
647. அன்பின் கயிறுகளால் (என்னை) கட்டி இழுப்பவரே ஸ்தோத்திரம்
648. என் மேல் நினைவாயிருப்பதற்காய் ஸ்தோத்திரம்
649. என்னை ஏற்றுக் கொள்பவரே ஸ்தோத்திரம்
650. என்னை ஆதரிப்பவரே ஸ்தோத்திரம்
651. தேவரீர் என் பட்சத்திலிருக்கிறீர் ஸ்தோத்திரம்
652. பயங்கரமான பராக்கிரமசாலியாய் என்னோடிருக்கும் கர்த்தரே ஸ்தோத்திரம்
653. என்னுடைய எல்லாப் பயத்துக்கும் நீங்கலாக்கி விட்டவரே ஸ்தோத்திரம்
654. என் இருதயத்தின் வேண்டுதல்களை எனக்கு அருள் செய்பவரே ஸ்தோத்திரம்
655. உமது இடதுகை என் தலைகீழிருப்பதற்காய் ஸ்தோத்திரம்
656. உமது வலதுகரம் என்னை அணைத்துக் கொள்வதற்காய் ஸ்தோத்திரம்
657. உமது வலதுகரம் நீதியால் நிறைந்திருப்பதற்காய் ஸ்தோத்திரம்
658. நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறவரே ஸ்தோத்திரம்
659. நீதியைப் பேசி யதார்த்த மானவைகளை அறிவிக்கும் கர்த்தரே ஸ்தோத்திரம்
660. என் நீதியை வெளிச்சத்தைப் போலவும் என் நியாயத்தை பட்டப் பகலைப் போலவும் விளங்கப் பண்ணுவீர் ஸ்தோத்திரம்
661. என் பொருத்தனைகளைக் கேட்டதற்காய் ஸ்தோத்திரம்
662. என் ஜெபத்தைத் தள்ளாமலிருந்த தேவனே ஸ்தோத்திரம்
663. தமது கிருபையை என்னைவிட்டு விலக்காமலிருந்த தேவனே ஸ்தோத்திரம்
664. கிருபையினால் என்னைச் சந்திக்கும் தேவனே ஸ்தோத்திரம்
665. என் தாயின் வயிற்றில் என்னைச் சந்திக்கும் தேவனே ஸ்தோத்திரம்
666. நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால் ஸ்தோத்திரம்
667. நான் உருவாக்கப்பட்ட் போது என் எலும்பகள் உமக்கு மறைவாயிருக்கவில்லை ஸ்தோத்திரம்
668. என் கருவை உம் கண்கள் கண்டதே ஸ்தோத்திரம்
669. கர்ப்பத்தில் உற்பவித்தது முதல் உம்மால் ஆதரிக்கப்பட்டேன் ஸ்தோத்திரம்
670. என் தாயின் வயிற்றிலிருந்து என்னை எடுத்தவர் நீரே ஸ்தோத்திரம்
671. என் சிறு வயது முதல் எனக்கு போதித்து வந்தீர் ஸ்தோத்திரம்
672. என் நோக்கம் நீரே கர்த்தாவே ஸ்தோத்திரம்
673. என் அலைச்சல்களை தேவரீர் எண்ணியிருக்கிறீர் ஸ்தோத்திரம்
674. என் மேன்மையை பெருகப் பண்ணி என்னை மறுபடியும் தேற்றுவீர் ஸ்தோத்திரம்
675. உம்முடைய ஆலோசனையின் படி என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக் கொள்வீர் ஸ்தோத்திரம்
676. என் காலைத் தள்ளாடவொட்டீர் ஸ்தோத்திரம்
677. என்னைக் காக்கிறவர் உறங்கமாட்டீர் ஸ்தோத்திரம்
678. பகலிலே வெயிலாகிலும் இரவிலே நிலவாகிலும் என்னை சேதப்படுத்துவதில்லை ஸ்தோத்திரம்
679. கர்த்தர் என்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பீர் ஸ்தோத்திரம்
680. கர்த்தர் என் ஆத்துமாவை காப்பீர் ஸ்தோத்திரம்
681. என் போக்கையும் என் வரத்தையும் என்றென்றைக்கும் காப்பீர் ஸ்தோத்திரம்
682. என் வழிகளெல்லாம் உமக்குத் தெரியும் ஸ்தோத்திரம்
683. எனக்கு முன்பாக கடந்து போகிறவரே ஸ்தோத்திரம்
684. கர்த்தாவே நீர் என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர் ஸ்தோத்திரம்
685. என் உட்காருதலையும் எழுந்திருக்குதலையும் அறிந்திருக்கிறீர் ஸ்தோத்திரம்
686. என் நினைவுகளை தூரத்திலிருந்து அறிகிறீர் ஸ்தோத்திரம்
687. என் நாவில் சொல் பிறவா முன்னே அதை நீர் அறிந்திருக்கிறீர் ஸ்தோத்திரம்
688. நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழ்ந்திருக்கிறீர் ஸ்தோத்திரம்
689. நான் துன்பத்தின் நடுவே நடந்தாலும் என்னை உயிர்ப்பிப்பீர் ஸ்தோத்திரம்
690. என் ஆவி என்னில் தியங்கும் போது என் பாதையை அறிந்திருக்கிறீர் ஸ்தோத்திரம்
691. முற்பறத்திலும் பிற்பறத்திலும் என்னை நெருக்கி உமது கரத்தை என் மேல் வைக்கிறீர் ஸ்தோத்திரம்
692. என்னை வெகுவாய்த் தண்டித்தும் சாவுக்கு என்னை ஒப்பக் கொடாததற்காய் ஸ்தோத்திரம்
693. விரோதிகளுடைய பற்களுக்கு எம்மை ஒப்பக்கொடாததற்காய் ஸ்தோத்திரம்
694. நான் கூப்பிட்ட நாளில் எனக்கு மறுஉத்தரவு அருளினீர் ஸ்தோத்திரம்
695. உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள் அவைகளுக்காய் ஸ்தோத்திரம்
696. என் வாசல்களின் தாழ்ப்பாள்களை பலப்படுத்தி, என்னிடத்தில் உள்ள என் பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறதற்காய் ஸ்தோத்திரம்
697. என் எல்லைகளை சமாதானமுள்ளவைகளாக்குவதற்காய் ஸ்தோத்திரம்
698. உச்சிதமான கோதுமையினால் என்னைத் திருப்தியாக்குபவரே ஸ்தோத்திரம்
699. எங்கள் மன விருப்பத்தின்படி எங்களுக்கு தந்தருள்பவரே ஸ்தோத்திரம்
700. எங்களுடைய தாழ்வில் எங்களை நினைத்தவரே ஸ்தோத்திரம்