1000 ஸ்தோத்திரங்கள்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.

701. எம்மை நினைக்கிற கர்த்தாவே ஸ்தோத்திரம்
702. எங்களை எழுந்து நிமிர்ந்து நிற்க செய்கிறவரே ஸ்தோத்திரம்
703. எங்களை நிமிர்ந்து நடக்கப் பண்ணின கர்த்தாவே ஸ்தோத்திரம்
704. எங்களை உமது சமுகத்தின் மகிழ்ச்சியினால் பூரிப்பாக்குகிறீர் ஸ்தோத்திரம்
705. உமது பேரின்ப நதியினால் எமது தாகத்தை தீர்க்கிறீர் ஸ்தோத்திரம்
706. பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி இரட்சிக்கிறீர் ஸ்தோத்திரம்
707. எங்கள் சத்துருக்களை மிதித்துப் போடுகிறீர் ஸ்தோத்திரம்
708. எங்கள் சத்துருக்களினின்று இரட்சித்து எங்களை பகைக்கிறவர்களை வெட்கப்படுத்துகிறீர் ஸ்தோத்திரம்
709. வெள்ளியைப் படமிடுவது போல எங்களை படமிட்டீரே (படமிடுகிறவரே) ஸ்தோத்திரம்
710. எங்கள் நுகத்தடியை முறித்த கர்த்தரே ஸ்தோத்திரம்
711. உமக்கு பயப்படுகிற சிறியோரையும் பெரியோரையும் ஆசீர்வதிக்கிறவரே ஸ்தோத்திரம்
712. எங்களையும் எங்கள் பிள்ளைகளையும் வர்த்திக்கப் பண்ணுகிறவரே ஸ்தோத்திரம்
713. உமது அடியாரின் பிள்ளைகள் தாபரித்திருப்பார்கள் ஆகவே உமக்கு ஸ்தோத்திரம்
714. உமது அடியார்ன் சந்ததி உமக்கு முன்பாக நிலை பெற்றிருக்கும் ஆகவே ஸ்தோத்திரம்
715. உம்முடைய கிருபை உமக்கு பயந்தவர்கள் மேலும் உம்முடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள் மேலும் என்றென்றைக்குமுள்ளது, ஆகவே ஸ்தோத்திரம்
716. பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, உமக்கு பயப்படுகிறவர்கள் மேல் உம்முடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருப்பதற்காய் ஸ்தோத்திரம்
717. தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குவது போல் கர்த்தர் தமக்கு பயந்தவர்களுக்கு இரங்குகிறீர், ஆகவே ஸ்தோத்திரம்
718. எங்களுடைய பாவங்களுக்குத் தக்கதாய் செய்யாமலிருப்பதற்காய் ஸ்தோத்திரம்
719. எங்களுடைய அக்கிரமங்களுக்குத்தக்கதாய் சரிக் கட்டாமலுமிருப்பதற்காய் ஸ்தோத்திரம்
720. மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரமாய் நீர் எம்முடைய பாவங்களை எம்மை விட்டு விலக்கினதற்காய் ஸ்தோத்திரம்
721. எங்களுக்காக எங்கள் கிரியைகளையெல்லாம் நடத்தி வருகிறவரே ஸ்தோத்திரம்
722. தம்முடைய ஜனத்திற்கு பெலனையும் சத்துவத்தையும் அளிப்பவரே ஸ்தோத்திரம்
723. தமது ஜனத்திற்கு சமாதானம் அருளி, ஆசீர்வதிப்பவரே ஸ்தோத்திரம்
724. தம்முடைய ஜனத்தின் மேல் பிரியம் வைத்திருக்கிறீர், ஆகவே ஸ்தோத்திரம்
725. தம்முடைய ஜனத்திற்காய் ஒரு கொம்பை ஆயத்தப்படுத்தி இருப்பதற்காய் ஸ்தோத்திரம்
726. தமது மந்தையை விசாரி்க்கிறவரே ஸ்தோத்திரம்
727. தமது மந்தையை யுத்தத்திலே சிறந்த குதிரையாய் நிறுத்துகிறவரே ஸ்தோத்திரம்
728. வல்லமையுள்ள உம் சத்தத்திற்காக ஸ்தோத்திரம்
729. மகத்துவமுள்ள உம் சத்தத்திற்காக ஸ்தோத்திரம்
730. கேதுரு மரங்களை முறிக்கும் உம் சத்தத்திற்காக ஸ்தோத்திரம்
731. அக்கினி ஜீவாலையை பிளக்கும் சத்தத்திற்காக ஸ்தோத்திரம்
732. வனாந்தரத்தை அதிரப் பண்ணும் சத்தத்திற்காக ஸ்தோத்திரம்
733. பெண்மான்களை ஈனும்படி செய்யும் சத்தத்திற்காக ஸ்தோத்திரம்
734. இரட்சிக்கும் உமது வலதுகரத்திற்காக, உமது பயத்திற்காக ஸ்தோத்திரம்
735. தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும் படி பூமியெங்கும் உலாவிக் கொண்டிருக்கும் உம் கண்களுக்காக ஸ்தோத்திரம்
736. உம்முடைய முகப் பிரகாசத்துக்காக ஸ்தோத்திரம்
737. கொள்ளையுள்ள பர்வதங்களைப் பார்க்கிலும் பிரகாசமுள்ளவரே ஸ்தோத்திரம்
738. வானத்தையும் பூமியையும் நிரப்பகிறவரே ஸ்தோத்திரம்
739. எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்பகிறவரே ஸ்தோத்திரம்
740. தாம் அபிஷேகம் பண்ணினவனுக்கு அடைக்கலமானவரே ஸ்தோத்திரம்
741. உண்மையானவனை தற்காப்பவரே ஸ்தோத்திரம்
742. இடும்ப செய்கிறவனுக்கு பூரணமாய் பதிலளிக்கிறவரே ஸ்தோத்திரம்
743. இருதயங்களை உருவாக்கி செயல்களை எல்லாம் கவனிக்கிறவரே ஸ்தோத்திரம்
744. அவனவன் செய்கைக்குத் தக்கதாய் பலனளிக்கிறவரே ஸ்தோத்திரம்
745. தமக்கு பயந்தவர்களைச் சூழ பாளயமிறங்கி விடுவிக்கிறவரே ஸ்தோத்திரம்
746. உமது நாமத்துக்கு பயப்படுகிறவர்களின் சுதந்தரத்தை எனக்குத் தந்ததற்காய் ஸ்தோத்திரம்
747. நொறுங்குண்ட இருதய முள்ளவர்களுக்கு சமீபமாயிருக்கும் கர்த்தரே ஸ்தோத்திரம்
748. நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறிர் ஸ்தோத்திரம்
749. நீரே காரியத்தை வாய்க்கப் பண்ணுகிறீர் ஸ்தோத்திரம்
750. வல்லமை தேவனுடையது என விளம்பினீர் ஸ்தோத்திரம்
751. ஜெபத்தைக் கேட்கிறவரே உமக்கு ஸ்தோத்திரம்
752. மாம்சமான யாவரும் உம்மி்டத்தில் வருவார்கள் ஆகவே உமக்கு ஸ்தோத்திரம்
753. முழங்கால யாவும் முடங்கும் நாவு யாவும் தேவன் என்று அறிக்கைபண்ணும் ஆகவே உமக்கு ஸ்தோத்திரம்
754. கர்த்தாவே உமது கிரியைகளினால் பூமி திருப்தியாயிருக்கிறது ஸ்தோத்திரம்
755. பூமி உம்முடைய பொருட்களினால் நிறைந்திருக்கிறது ஸ்தோத்திரம்
756. கர்த்தாவே, நீர் பூமியின் ரூபத்தை பதிதாக்குகிறீர் ஸ்தோத்திரம்
757. தேவரீர், நீர் பூமியை விசாரித்து அதற்கு நீர் பாய்ச்சுகிறீர் ஸ்தோத்திரம்
758. தண்ணீர் நிறைந்த தேவ நதியினால் பூமியைச் செழிப்பாக்குகிறீர் ஸ்தோத்திரம்
759. பூமியின் பயிரை ஆசீர்வதிக்கிறீர் ஸ்தோத்திரம்
760. பூமி உம்முடைய காருணியத்தால் நிறைந்திருக்கிறதற்காக ஸ்தோத்திரம்
761. உன்னதமானவருடைய வலக்கரத்தில் உள்ள வருஷங்களுக்காக ஸ்தோத்திரம்
762. வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர் ஸ்தோத்திரம்
763. உம்முடைய பாதைகள் நெய்யாய்ப் பொழிவதற்காக ஸ்தோத்திரம்
764. உம்மிடத்தில் உள்ள ஜீவ ஊற்றுக்காக ஸ்தோத்திரம்
765. மகா ஆழமாக இருக்கும் உம் நியாயங்களுக்காக ஸ்தோத்திரம்
766. மகா ஆழமான உம் யோசனைகளுக்காக ஸ்தோத்திரம்
767. ஆராய்ந்து முடியாத உம் மகத்துவத்திற்காக ஸ்தோத்திரம்
768. மகத்துவமுள்ள உம் கிரியைகளுக்காக ஸ்தோத்திரம்
769. பர்வதங்கள் போலிருக்கும் உம் நீதிக்காக ஸ்தோத்திரம்
770. வானத்துக்கும் பூமிக்கும் மேலான உம் மகிமைக்காக ஸ்தோத்திரம்
771. வானங்களில் விளங்கும் உம் கிருபைக்காக ஸ்தோத்திரம்
772. மேகங்கள் பரியந்தம் எட்டுகிற சத்தியத்திற்காக ஸ்தோத்திரம்
773. மனுபத்திரர் வந்தடையும் உம் செட்டைகளின் நிழலுக்காக ஸ்தோத்திரம்
774. ஆயிரம் பதினாயிரமான தேவனுடைய இரதங்களுக்காக ஸ்தோத்திரம்
775. மேகங்களை இரதமாக்கி காற்றின் செட்டைகளின் மேல் செல்லுகிறவரே ஸ்தோத்திரம்
776. வானங்களை திரையைப் போல் விரித்திருப்பவரே ஸ்தோத்திரம்
777. நட்சத்திரங்களையெல்லாம் எண்ணி அவைகளைப் பேரிட்டு அழைக்கிறவரே ஸ்தோத்திரம்
778. உமது அறிவு அளவில்லாதது ஆண்டவரே ஸ்தோத்திரம்
779. உம்முடைய காருணியம் பெரியது ஆண்டவரே ஸ்தோத்திரம்
780. உமது செளந்தரியம் பெரியது ஆண்டவரே ஸ்தோத்திரம்
781. உம்முடைய இரக்கங்கள் மகா பெரியது ஸ்தோத்திரம்
782. உமது கிருபை பெரியது ஆண்டவரே ஸ்தோத்திரம்
783. பகற்காலத்தில் கிருபையைக் கட்டளையிடுவதற்காய் ஸ்தோத்திரம்
784. ஜீவனைப்பார்க்கிலும் உமது கிருபை நல்லது, ஆகவே ஸ்தோத்திரம்
785. கிருபையையும் மகிமையை அருளுபவரே ஸ்தோத்திரம்
786. தேவனே உமது கிருபை எவ்வளவு அருமையானது ஸ்தோத்திரம்
787. தேவனே உமது கிருபை என்றுமுள்ளது ஸ்தோத்திரம்
788. நாங்கள் நிர்மூலமாகாமலிருப்பது உம் கிருபையே ஸ்தோத்திரம்
789. காலைதோறும் உம் கிருபைகள் பதியவைகளாயிருப்பதற்காய் ஸ்தோத்திரம்
790. கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டுகிறவரே ஸ்தோத்திரம்
791. தேவரீர் நீர் செய்த உபகாரங்களுக்காக ஸ்தோத்திரம்
792. கர்த்தாவே நீர் மகிமையையும் மகத்துவத்தையும் அணிந்து கொண்டிருக்கிறீர் ஸ்தோத்திரம்
793. நீர் பராக்கிரமத்தை அணிந்து அதை கச்சையாக கட்டிக் கொண்டிருக்கிறீர் ஸ்தோத்திரம்
794. ஒளியை வஸ்திரமாக தரித்துக் கொண்டிருக்கிறீர் ஸ்தோத்திரம்
795. தம்முடைய தூதர்களை காற்றுகளாகச் செய்பவரே ஸ்தோத்திரம்
796. தவனமுள்ள ஆத்துமாவை திருப்தியாக்குபவரே ஸ்தோத்திரம்
797. பசியுள்ள ஆத்துமாவை நன்னையால் நிரப்பகிறவரே ஸ்தோத்திரம்
798. தமது வசனத்தை அனுப்பி குணமாக்குகிறவரே ஸ்தோத்திரம்
799. கர்த்தாவே உமது வேதத்தில் உள்ள அதிசயங்களுக்காக ஸ்தோத்திரம்
800. சிறுமையிலும் எனக்கு ஆறுதலாயிருந்த உம் வசனத்திற்காக ஸ்தோத்திரம்