எஸ்தர் முன்னுரை

'எஸ்தர்' என்னும் இந்நூலில் இடம் பெற்றுள்ள நிகழ்ச்சிகள் பாரசீகப் பேரரசர் அகஸ்வேரின் குளிர்கால அரண்மனையில் நடைபெற்றவை. எஸ்தர் என்னும யூதப் பெண், தன் மக்கள்பால் கொண்டிருந்த பேரன்பினால், அவர்கள் தங்கள் எதிரிகளால் அழிக்கப்படாதவாறு, மிகுந்த துணிவுடன் செயல்பட்டதை இந்நூல் விளக்குகிறது. 'பூரிம்' என்ற யூதப் பெருவிழாவின் பொருளும் அதன் பின்னணியும் இதில் விளக்கப்படுகின்றன. கிரேக்க மொழி பெயர்ப்பில் இந்நூல் இன்னும் விரிவாகக் காணப்படுகிறது. நூலின் பிரிவுகள் எஸ்தர் அரசி ஆதல் 1:1 - 2:23 ஆமானின் சதிகள் 3:1 - 5:14 ஆமான் கொல்லப்படல் 6:1 - 7:10 யூதர் தங்கள் எதிரிகளை முறியடித்தல் 8:1 - 10:3