திருவசன வகைகள்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.

S.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை
கத்தோலிக்க
திருவிவிலியம்
அங்கு அவர் நாசரேத்து எனப்படும் ஊருக்குச் சென்று அங்குக் குடியிருந்தார். இவ்வாறு, ' நசரேயன் என அழைக்கப்படுவார் ' என்று இறைவாக்கினர்கள் உரைத்தது நிறைவேறியது

மத்தேயு நற்செய்தி 2:23

பிரிவினைச்
சபை பைபிள்
நாசரேத்து என்னும் ஊரிலே வந்து வாசம் பண்ணினான். நசரேயன் என்னப்படுவார் என்று, தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.

மத்தேயு 2:23

Catholic
Bible
He went and dwelt in a town called Nazareth, so that what had been spoken through the prophets might be fulfilled, "He shall be called a Nazorean."

Matthew 2:23

Protestant
Bible
And he came and dwelt in a city called Nazareth: that it might be fulfilled which was spoken by the prophets, He shall be called a Nazarene.

Matthew 2:23

திருவசன
கருத்து
கிறிஸ்து பிறப்பு, தீர்க்கதரிசிசன திருவசனம்
Verse
Category
Chrismas, Prophetic Words

கத்தோலிக்க
திருவிவிலியம்
காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர் மேல் சுடரொளி உதித்துள்ளது.

மத்தேயு நற்செய்தி 4:16

பிரிவினைச்
சபை பைபிள்
ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.

மத்தேயு 4:16

Catholic
Bible
the people who sit in darkness have seen a great light, on those dwelling in a land overshadowed by death light has arisen."

Matthew 4:16

Protestant
Bible
The people which sat in darkness saw great light; and to them which sat in the region and shadow of death light is sprung up.

Matthew 4:16

திருவசன
கருத்து
தீர்க்கதரிசிசன திருவசனம், கிறிஸ்து பிறப்பு
Verse
Category
Prophetic Words, Chrismas

கத்தோலிக்க
திருவிவிலியம்
ஏனெனில், யூதா நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை; ஏனெனில், என் மக்களாகிய இஸ்ரயேலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார் என்று இறைவாக்கினர் எழுதியுள்ளார் ' என்றார்கள்

மத்தேயு நற்செய்தி 2:6

பிரிவினைச்
சபை பைபிள்
யூதேயா தேசத்திலுள்ள பெத்லகேமே, யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல; என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்தில் இருந்து புறப்படுவார் என்று, தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது என்றார்கள்

மத்தேயு 2:6

Catholic
Bible
And thou Bethlehem, in the land of Juda, art not the least among the princes of Juda: for out of thee shall come a Governor, that shall rule my people Israel.

Matthew 2:6

Protestant
Bible
'And you, Bethlehem, land of Judah, are by no means least among the rulers of Judah; since from you shall come a ruler, who is to shepherd my people Israel.'"

Matthew 2:6

திருவசன
கருத்து
கிறிஸ்து பிறப்பு, தீர்க்கதரிசிசன திருவசனம்
Verse
Category
Chrismas, Prophetic Words

கத்தோலிக்க
திருவிவிலியம்
ஏரோது இறக்கும்வரை அங்கேயே இருந்தார். இவ்வாறு, ' எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன் ' என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறியது

மத்தேயு நற்செய்தி 2:15

பிரிவினைச்
சபை பைபிள்
ஏரோதின் மரணபரியந்தம் அங்கே இருந்தான். எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன் என்று, தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தரால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.

மத்தேயு 2:15

Catholic
Bible
He stayed there until the death of Herod, that what the Lord had said through the prophet might be fulfilled, "Out of Egypt I called my son."

Matthew 2:15

Protestant
Bible
And was there until the death of Herod: that it might be fulfilled which was spoken of the Lord by the prophet, saying, Out of Egypt have I called my son.

Matthew 2:15

திருவசன
கருத்து
கிறிஸ்து பிறப்பு, தீர்க்கதரிசிசன திருவசனம்
Verse
Category
Chrismas, Prophetic Words

கத்தோலிக்க
திருவிவிலியம்
அப்பொழுது ' ராமாவிலே ஒரு குரல் கேட்கிறது; ஒரே புலம்பலும் பேரழுகையுமாய் இருக்கிறது; இராகேல் தன் குழந்தைகளுக்காக அழுது கொண்டிருக்கிறார்;ஆறுதல் பெற அவர் மறுக்கிறார்; ஏனெனில் அவர் குழந்தைகள் அவரோடு இல்லை ' என்று இறைவாக்கினர் எரேமியா உரைத்தது நிறைவேறியது

மத்தேயு நற்செய்தி 2:17

பிரிவினைச்
சபை பைபிள்
புலம்பலும் அழுகையும் மிகுந்த துக்கங்கொண்டாடலுமாகிய கூக்குரல் ராமாவிலே கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, அவைகள் இல்லாதபடியால் ஆறுதலடையாதிருக்கிறாள் என்று, எரேமியா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது அப்பொழுது நிறைவேறிற்று

மத்தேயு 2:17

Catholic
Bible
A voice was heard in Ramah, sobbing and loud lamentation; Rachel weeping for her children, and she would not be consoled, since they were no more.

Matthew 2:17

Protestant
Bible
In Rama was there a voice heard, lamentation, and weeping, and great mourning, Rachel weeping for her children, and would not be comforted, because they are not.

Matthew 2:17

திருவசன
கருத்து
கிறிஸ்து பிறப்பு, தீர்க்கதரிசிசன திருவசனம்
Verse
Category
Chrismas, Prophetic Words