திருவசன வகைகள்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.

S.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை
கத்தோலிக்க
திருவிவிலியம்
வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப்போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள்

மத்தேயு நற்செய்தி 2:11

பிரிவினைச்
சபை பைபிள்
அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்.

மத்தேயு 2:11

Catholic
Bible
and on entering the house they saw the child with Mary his mother. They prostrated themselves and did him homage. Then they opened their treasures and offered him gifts of gold, frankincense, and myrrh.

Matthew 2:11

Protestant
Bible
And when they were come into the house, they saw the young child with Mary his mother, and fell down, and worshipped him: and when they had opened their treasures, they presented unto him gifts; gold, and frankincense, and myrrh.

Matthew 2:11

திருவசன
கருத்து
கிறிஸ்து பிறப்பு, கடவுளுக்கு கொடுத்தல்
Verse
Category
Chrismas, Giving to God

கத்தோலிக்க
திருவிவிலியம்
அப்பொது சாமுவேல் கூறியது: ஆண்டவருக்கு மகிழ்ச்சி தருவது எரி பலிகள் பிற பலிகள் வெலுத்துவதா அவரது குரலுக்கு கீழ்ப்படிவதா கீழ்படிதல் பலியைவிடச் சிறந்தது. கீழ்படிதல் ஆட்டுக் கிடாய்களின் கொழுப்பை விட மேலானது

1 சாமுவேல் 15:22

பிரிவினைச்
சபை பைபிள்
அதற்குச் சாமுவேல்: கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்.

1 சாமுவேல் 15:22

Catholic
Bible
But Samuel said: "Does the LORD so delight in holocausts and sacrifices as in obedience to the command of the LORD Obedience is better than sacrifice, and submission than the fat of rams.

1 Samuel 15:22

Protestant
Bible
And Samuel said, Hath the LORD as great delight in burnt offerings and sacrifices, as in obeying the voice of the LORD Behold, to obey is better than sacrifice, and to hearken than the fat of rams.

1 Samuel 15:22

திருவசன
கருத்து
அறிவுரை, கடவுளுக்கு கொடுத்தல், கீழ்படிதல்
Verse
Category
Advice, Giving to God, Obedience

கத்தோலிக்க
திருவிவிலியம்
அவை ஆண்டவரின் பெயரைப் போற்றட்டும்: ஏனெனில், அவரது கட்டளையின்படி எல்லாம் படைக்கப்பட்டன:

திருப்பாடல்கள் 148:5

பிரிவினைச்
சபை பைபிள்
அவைகள் கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவது; அவர் கட்டளையிட அவைகள் சிருஷ்டிக்கப்பட்டது.

சங்கீதம் 148:5

Catholic
Bible
Let them all praise the LORD'S name; for the LORD commanded and they were created,

Psalms 148:5

Protestant
Bible
Let them praise the name of the LORD: for he commanded, and they were created.

Psalms 148:5

திருவசன
கருத்து
கடவுளுக்கு கொடுத்தல், வழிபாடு, போற்றுதல்
Verse
Category
Giving to God, Worship, Praise

கத்தோலிக்க
திருவிவிலியம்
ஒவ்வொருவரும் தம்முள் தீர்மானித்தபடியே கொடுக்கட்டும். மனவருத்தத்தோடோ கட்டாயத்தினாலோ கொடுக்கவேண்டாம். முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர்.

2 கொரிந்தியர் 9:7

பிரிவினைச்
சபை பைபிள்
அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.

2 கொரிந்தியர் 9:7

Catholic
Bible
Each must do as already determined, without sadness or compulsion, for God loves a cheerful giver.

2 Corinthians 9:7

Protestant
Bible
Every man according as he purposeth in his heart, so let him give; not grudgingly, or of necessity: for God loveth a cheerful giver.

2 Corinthians 9:7

திருவசன
கருத்து
கடவுளுக்கு கொடுத்தல்
Verse
Category
Giving to God

கத்தோலிக்க
திருவிவிலியம்
வறுமையுற்ற இறைமக்களோடு உங்களிடமுள்ளதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; விருந்தோம்பலில் கருத்தாய் இருங்கள்.

உரோமையர் 12:13

பிரிவினைச்
சபை பைபிள்
பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவிசெய்யுங்கள்; அந்நியரை உபசரிக்க நாடுங்கள்.

ரோமர் 12:13

Catholic
Bible
Contribute to the needs of the holy ones,j exercise hospitality.

Romans 12:13

Protestant
Bible
Distributing to the necessity of saints; given to hospitality.

Romans 12:13

திருவசன
கருத்து
அறிவுரை, ஆசீர்வாதம், கடவுளுக்கு கொடுத்தல்
Verse
Category
Advice, Blessings, Giving to God