திருவசன வகைகள்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.

S.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை
கத்தோலிக்க
திருவிவிலியம்
அவர் சுளகைத் தம் கையில் கொண்டு கோதுமையையும் பதரையும் பிரித்தெடுப்பார்; தம் கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; ஆனால், பதரை அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார் ' என்றார்.

மத்தேயு நற்செய்தி 3:12

பிரிவினைச்
சபை பைபிள்
தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது; அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார் என்றான்.

மத்தேயு 3:12

Catholic
Bible
His winnowing fan is in his hand. He will clear his threshing floor and gather his wheat into his barn, but the chaff he will burn with unquenchable fire.

Matthew 3:12

Protestant
Bible
Whose fan is in his hand, and he will thoroughly purge his floor, and gather his wheat into the garner; but he will burn up the chaff with unquenchable fire.

Matthew 3:12

திருவசன
கருத்து
நரகம், இறுதி தீர்ப்பு
Verse
Category
Hell, Judgement

கத்தோலிக்க
திருவிவிலியம்
ஏற்கெனவே மரங்களின் வேரருகே கோடரி வைத்தாயிற்று. நற்கனி தராத மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டுத் தீயில் போடப்படும்

மத்தேயு நற்செய்தி 3:10

பிரிவினைச்
சபை பைபிள்
இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது. ஆகையால் நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்.

மத்தேயு 3:10

Catholic
Bible
Even now the ax lies at the root of the trees. Therefore every tree that does not bear good fruit will be cut down and thrown into the fire.

Matthew 3:10

Protestant
Bible
And now also the ax is laid unto the root of the trees: therefore every tree which bringeth not forth good fruit is hewn down, and cast into the fire.

Matthew 3:10

திருவசன
கருத்து
இறுதி தீர்ப்பு, நரகம்
Verse
Category
Judgement, Hell

கத்தோலிக்க
திருவிவிலியம்
முன்குறித்து வைத்த தீர்ப்பை அவர்களிடம் நிறைவேற்றுவார்கள்: இத்தகைய மேன்மை ஆண்டவர் தம் அன்பர் அனைவருக்கும் உரித்தானது. அல்லேலூயா!

திருப்பாடல்கள் 149:9

பிரிவினைச்
சபை பைபிள்
இந்தக் கனம் அவருடைய பரிசுத்தவான்கள் யாவருக்கும் உண்டாகும். (அல்லேலூயா.)

சங்கீதம் 149:9

Catholic
Bible
To execute the judgments decreed for them-- such is the glory of all God's faithful. Hallelujah!

Psalms 149:9

Protestant
Bible
To execute upon them the judgment written: this honour have all his saints. Praise ye the LORD.

Psalms 149:9

திருவசன
கருத்து
அறிவுரை, போற்றுதல், வழிபாடு, இறுதி தீர்ப்பு
Verse
Category
Advice, Praise, Worship, Judgement

கத்தோலிக்க
திருவிவிலியம்
இளையோரே! இளமைப் பருவம் மகிழ்ச்சியோடிருப்பதற்கே. இளமையின் நாள்களில் உள்ளக் களிப்புடனிருங்கள். மனம் விரும்புவதைச் செய்யுங்கள்: கண்களின் நாட்டத்தை நிறைவேற்றுங்கள். ஆனால், நீங்கள் செய்கிற ஒவ்வொரு செயலுக்கும் உரிய தீர்ப்பைக் கடவுள் வழங்குவார் என்பதை மறவாதீர்கள்.

சபை உரையாளர் 11:9

பிரிவினைச்
சபை பைபிள்
வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி.

பிரசங்கி 11:9

Catholic
Bible
Rejoice, O young man, while you are young and let your heart be glad in the days of your youth. Follow the ways of your heart, the vision of your eyes; Yet understand that as regards all this God will bring you to judgment.

Ecclesiastes 11:9

Protestant
Bible
Rejoice, O young man, in thy youth; and let thy heart cheer thee in the days of thy youth, and walk in the ways of thine heart, and in the sight of thine eyes: but know thou, that for all these things God will bring thee into judgment.

Ecclesiastes 11:9

திருவசன
கருத்து
அறிவுரை, இறுதி தீர்ப்பு
Verse
Category
Advice, Judgement

கத்தோலிக்க
திருவிவிலியம்
இதோ! அவர் மேகங்கள் சூழ வருகின்றார். அனைவரும் அவரைக் காண்பர்: அவரை ஊடுருவக் குத்தியோரும் காண்பர்: அவர்பொருட்டு மண்ணுலகின் குலத்தார் அனைவரும் மாரடித்துப் புலம்புவர். இது உண்மை, ஆமென்!

திருவெளிப்பாடு 1:7

பிரிவினைச்
சபை பைபிள்
இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும் ஆமென்.

வெளிப்படுத்தின விசேஷம் 1:7

Catholic
Bible
Behold, he cometh with the clouds, and every eye shall see him, and they also that pierced him. And all the tribes of the earth shall bewail themselves because of him. Even so. Amen.

Revelation 1:7

Protestant
Bible
Behold, he cometh with clouds; and every eye shall see him, and they also which pierced him: and all kindreds of the earth shall wail because of him. Even so, Amen.

Revelation 1:7

திருவசன
கருத்து
உடன்படிக்கை , இறை வார்த்தை, இறுதி தீர்ப்பு
Verse
Category
Covenant, Gods Words, Judgement