திருவசன வகைகள்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.

S.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை
கத்தோலிக்க
திருவிவிலியம்
அவர் மறுமொழியாக, ' மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர் ' என மறைநூலில் எழுதியுள்ளதே ' என்றார்.

மத்தேயு நற்செய்தி 4:4

பிரிவினைச்
சபை பைபிள்
அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.

மத்தேயு 4:4

Catholic
Bible
He said in reply, "It is written: 'One does not live by bread alone, but by every word that comes forth from the mouth of God.'"

Matthew 4:4

Protestant
Bible
But he answered and said, It is written, Man shall not live by bread alone, but by every word that proceedeth out of the mouth of God.

Matthew 4:4

திருவசன
கருத்து
சோதிக்கப்படுதல், இறை வார்த்தை
Verse
Category
Tempted, Gods Words

கத்தோலிக்க
திருவிவிலியம்
அப்பொழுது இயேசு அதனைப் பார்த்து, ' அகன்று போ, சாத்தானே, ' உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய் ' என்றும் மறைநூலில் எழுதியுள்ளது ' என்றார்.

மத்தேயு நற்செய்தி 4:10

பிரிவினைச்
சபை பைபிள்
அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.

மத்தேயு 4:10

Catholic
Bible
At this, Jesus said to him, "Get away, Satan! It is written: 'The Lord, your God, shall you worship and him alone shall you serve.'"

Matthew 4:10

Protestant
Bible
Then saith Jesus unto him, Get thee hence, Satan: for it is written, Thou shalt worship the Lord thy God, and him only shalt thou serve.

Matthew 4:10

திருவசன
கருத்து
சோதிக்கப்படுதல், இறை வார்த்தை
Verse
Category
Tempted, Gods Words

கத்தோலிக்க
திருவிவிலியம்
இயேசு அதனிடம், ' " உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்கவேண்டாம் " எனவும் எழுதியுள்ளதே ' என்று சொன்னார்.

மத்தேயு நற்செய்தி 4:7

பிரிவினைச்
சபை பைபிள்
அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே என்றார்.

மத்தேயு 4:7

Catholic
Bible
Jesus said unto him, It is written again, Thou shalt not tempt the Lord thy God.

Matthew 4:7

Protestant
Bible
Jesus answered him, "Again it is written, 'You shall not put the Lord, your God, to the test.'"

Matthew 4:7

திருவசன
கருத்து
சோதிக்கப்படுதல், இறை வார்த்தை
Verse
Category
Tempted, Gods Words

கத்தோலிக்க
திருவிவிலியம்
அதன்பின் இயேசு அலகையினால் சோதிக்கப்படுவதற்காகப் பாலை நிலத்திற்குத் தூய ஆவியால் அழைத்துச் செல்லப்பட்டார்

மத்தேயு நற்செய்தி 4:1

பிரிவினைச்
சபை பைபிள்
அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்.

மத்தேயு 4:1

Catholic
Bible
Then Jesus was led by the Spirit into the desert to be tempted by the devil.

Matthew 4:1

Protestant
Bible
Then was Jesus led up of the Spirit into the wilderness to be tempted of the devil.

Matthew 4:1

திருவசன
கருத்து
சோதிக்கப்படுதல்
Verse
Category
Tempted

கத்தோலிக்க
திருவிவிலியம்
ஏனெனில், நம் தலைமைக் குரு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல: மாறாக, எல்லா வகையிலும் நம்மைப்போலச் சோதிக்கப்பட்டவர்: எனினும் பாவம் செய்யாதவர்.

எபிரேயர் 4:15

பிரிவினைச்
சபை பைபிள்
நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.

எபிரெயர் 4:15

Catholic
Bible
For we do not have a high priest who is unable to sympathize with our weaknesses, but one who has similarly been tested in every way, yet without sin.

Hebrews 4:15

Protestant
Bible
For we have not an high priest which cannot be touched with the feeling of our infirmities; but was in all points tempted like as we are, yet without sin.

Hebrews 4:15

திருவசன
கருத்து
பாவம், சோதிக்கப்படுதல், அருள்(கிருபை)
Verse
Category
Sin, Tempted, Grace