திருவசன வகைகள்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.

S.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை
கத்தோலிக்க
திருவிவிலியம்
அவர் கலிலேயப் பகுதி முழுவதும் சுற்றி வந்தார்; அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்.

மத்தேயு நற்செய்தி 4:23

பிரிவினைச்
சபை பைபிள்
பின்பு, இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கிச் சொஸ்தமாக்கினார்.

மத்தேயு 4:23

Catholic
Bible
He went around all of Galilee, teaching in their synagogues, proclaiming the gospel of the kingdom, and curing every disease and illness among the people.

Matthew 4:23

Protestant
Bible
And Jesus went about all Galilee, teaching in their synagogues, and preaching the gospel of the kingdom, and healing all manner of sickness and all manner of disease among the people.

Matthew 4:23

திருவசன
கருத்து
இறைவார்த்தை போதித்தல்
Verse
Category
Preaching Gospel

கத்தோலிக்க
திருவிவிலியம்
அதுமுதல் இயேசு, ' மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது ' எனப் பறைசாற்றத் தொடங்கினார்.

மத்தேயு நற்செய்தி 4:17

பிரிவினைச்
சபை பைபிள்
அதுமுதல் இயேசு: மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.

மத்தேயு 4:17

Catholic
Bible
From that time on, Jesus began to preach and say, "Repent, for the kingdom of heaven is at hand."

Matthew 4:17

Protestant
Bible
From that time Jesus began to preach, and to say, Repent: for the kingdom of heaven is at hand.

Matthew 4:17

திருவசன
கருத்து
இறைவார்த்தை போதித்தல், மனம் மாறுதல்
Verse
Category
Preaching Gospel, Repent

கத்தோலிக்க
திருவிவிலியம்
இயேசு அவர்களைப் பார்த்து, ' என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன் ' என்றார்.

மத்தேயு நற்செய்தி 4:19

பிரிவினைச்
சபை பைபிள்
என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார்.

மத்தேயு 4:19

Catholic
Bible
And he saith unto them, Follow me, and I will make you fishers of men.

Matthew 4:19

Protestant
Bible
And he saith unto them, Follow me, and I will make you fishers of men.

Matthew 4:19

திருவசன
கருத்து
இறைவார்த்தை போதித்தல்
Verse
Category
Preaching Gospel

கத்தோலிக்க
திருவிவிலியம்
தலைவராகிய ஆண்டவர் கூறுகின்றார்: இதோ! நாள்கள் வரப்போகின்றன! அப்போது நாட்டினுள் பஞ்சத்தை அனுப்புவேன்: அது உணவு கிடைக்காத பஞ்சமோ, நீரில்லாத வறட்சியோ அன்று: ஆண்டவரின் வாக்கு கிடைக்காத பஞ்சமே அது.

ஆமோஸ் 8:11

பிரிவினைச்
சபை பைபிள்
இதோ, நான் தேசத்தின்மேல் பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும்; ஆகாரக் குறைவினால் உண்டாகிய பஞ்சமல்ல, ஜலக்குறைவினால் உண்டாகிய தாகமுமல்ல, கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சத்தை அனுப்புவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

ஆமோஸ் 8:11

Catholic
Bible
Yes, days are coming, says the Lord GOD, when I will send famine upon the land: Not a famine of bread, or thirst for water, but for hearing the word of the LORD.

Amos 8:11

Protestant
Bible
Behold, the days come, saith the Lord GOD, that I will send a famine in the land, not a famine of bread, nor a thirst for water, but of hearing the words of the LORD:

Amos 8:11

திருவசன
கருத்து
இறை வார்த்தை, இறைவார்த்தை போதித்தல், பஞ்சம்
Verse
Category
Gods Words, Preaching Gospel, Famine

கத்தோலிக்க
திருவிவிலியம்
இதன் பொருட்டே நான் இவ்வாறு துன்புற்று வருகிறேன்: எனினும் வெட்கமுறுவதில்லை. ஏனெனில், நான் யாரிடம் நம்பிக்கை கொண்டுள்ளேன் என அறிவேன். அவர் என்னிடம் ஒப்படைத்ததை இறுதிநாள்வரை காத்திட வல்லவர் என்கிற உறுதியான நம்பிக்கை எனக்கு உண்டு

2 திமொத்தேயு 1:12

பிரிவினைச்
சபை பைபிள்
அதினிமித்தம் நான் இந்தப் பாடுகளையும் அனுபவிக்கிறேன்; ஆயினும், நான் வெட்கப்படுகிறதில்லை; ஏனென்றால், நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னாரென்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறேன்.

2 தீமோத்தேயு 1:12

Catholic
Bible
On this account I am suffering these things; but I am not ashamed, for I know him in whom I have believed and am confident that he is able to guard what has been entrusted to me until that day.

2 Timothy 1:12

Protestant
Bible
For the which cause I also suffer these things: nevertheless I am not ashamed: for I know whom I have believed, and am persuaded that he is able to keep that which I have committed unto him against that day.

2 Timothy 1:12

திருவசன
கருத்து
இறைவார்த்தை போதித்தல், நம்பிக்கை, கடவுளின் பண்புகள்
Verse
Category
Preaching Gospel, Hope, God Attributes