திருவசன வகைகள்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.

S.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை
கத்தோலிக்க
திருவிவிலியம்
இயேசு, ' இப்பொழுது விட்டுவிடும். கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவதுதான் முறை ' எனப் பதிலளித்தார். அதற்கு யோவானும் இணங்கினார்.

மத்தேயு நற்செய்தி 3:15

பிரிவினைச்
சபை பைபிள்
இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான்.

மத்தேயு 3:15

Catholic
Bible
And Jesus answering said unto him, Suffer it to be so now: for thus it becometh us to fulfil all righteousness. Then he suffered him.

Matthew 3:15

Protestant
Bible
And Jesus answering said unto him, Suffer it to be so now: for thus it becometh us to fulfil all righteousness. Then he suffered him.

Matthew 3:15

திருவசன
கருத்து
இரக்கம், உதவி
Verse
Category
Mercy, Help

கத்தோலிக்க
திருவிவிலியம்
என்றுமே இல்லாதவாறு சாவை ஒழித்துவிடுவார்: என் தலைவராகிய ஆண்டவர் எல்லா முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைத்து விடுவார்: தம்மக்களுக்கு ஏற்பட்ட நிந்தையை இம்மண்ணுலகில் அகற்றிவிடுவார்: ஏனெனில், ஆண்டவரே இதை உரைத்தார்.

எசாயா 25:8

பிரிவினைச்
சபை பைபிள்
அவர் மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; கர்த்தரே இதைச் சொன்னார்.

ஏசாயா 25:8

Catholic
Bible
he will destroy death forever. The Lord GOD will wipe away the tears from all faces; The reproach of his people he will remove from the whole earth; for the LORD has spoken

Isaiah 25:8

Protestant
Bible
He will swallow up death in victory; and the Lord GOD will wipe away tears from off all faces; and the rebuke of his people shall he take away from off all the earth: for the LORD hath spoken it.

Isaiah 25:8

திருவசன
கருத்து
ஆறுதல், உதவி, இரக்கம், பாதுகப்பு
Verse
Category
Comfort, Help, Mercy, Safe

கத்தோலிக்க
திருவிவிலியம்
அதற்கு அவர்கள், ஆண்டவராகிய இயேசுவின் மேல் நம்பிக்கை கொள்ளும்: அப்பொழுது நீரும் உம் வீட்டாரும் மீட்படைவீர்கள் என்றார்கள்.

திருத்தூதர் பணிகள் 16:31

பிரிவினைச்
சபை பைபிள்
அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி,

அப்போஸ்தலருடைய நடபடிகைகள் 16:31

Catholic
Bible
And they said, "Believe in the Lord Jesus and you and your household will be saved."

Acts of Apostles 16:31

Protestant
Bible
And they said, Believe on the Lord Jesus Christ, and thou shalt be saved, and thy house.

Acts of Apostles 16:31

திருவசன
கருத்து
அறிவுரை, ஆறுதல், நம்பிக்கை, இரக்கம்
Verse
Category
Advice, Comfort, Hope, Mercy

கத்தோலிக்க
திருவிவிலியம்
அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார்

லூக்கா நற்செய்தி 1:50

பிரிவினைச்
சபை பைபிள்
அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது

லூக்கா 1:50

Catholic
Bible
His mercy is from age to age to those who fear him.

Luke 1:50

Protestant
Bible
And his mercy is on them that fear him from generation to generation.

Luke 1:50

திருவசன
கருத்து
அருள்(கிருபை), இரக்கம்
Verse
Category
Grace, Mercy

கத்தோலிக்க
திருவிவிலியம்
ஆண்டவர் எளியோர்க்கு ஆதரவளிக்கின்றார்; பொல்லாரையோ தரைமட்டும் தாழ்த்துகின்றார்.

திருப்பாடல்கள் 147:6

பிரிவினைச்
சபை பைபிள்
கர்த்தர் சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார்; துன்மார்க்கரைத் தரைமட்டும் தாழ்த்துகிறார்.

சங்கீதம் 147:6

Catholic
Bible
The LORD sustains the poor, but casts the wicked to the ground.

Psalms 147:6

Protestant
Bible
The LORD sustains the poor, but casts the wicked to the ground.

Psalms 147:6

திருவசன
கருத்து
ஆசீர்வாதம், இரக்கம்
Verse
Category
Blessings, Mercy