திருவசன வகைகள்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.

S.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை
கத்தோலிக்க
திருவிவிலியம்
தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்: எருசலேமில் நீங்கள் தேற்றப்படுவீர்கள்.

எசாயா 66:13

பிரிவினைச்
சபை பைபிள்
ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள்

ஏசாயா 66:13

Catholic
Bible
As a mother comforts her son, so will I comfort you; in Jerusalem you shall find your comfort.

Isaiah 66:13

Protestant
Bible
As one whom his mother comforteth, so will I comfort you; and ye shall be comforted in Jerusalem.

Isaiah 66:13

திருவசன
கருத்து
ஆறுதல்
Verse
Category
Comfort

கத்தோலிக்க
திருவிவிலியம்
ஆண்டவர் உம்மை எல்லாத் தீமையினின்றும் பாதுகாப்பார்: அவர் உம் உயிரைக் காத்திடுவார்.

திருப்பாடல்கள் 121:7

பிரிவினைச்
சபை பைபிள்
கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார்.

சங்கீதம் 121:7

Catholic
Bible
The LORD will guard you from all evil, will always guard your life.

Psalms 121:7

Protestant
Bible
The LORD shall preserve thee from all evil: he shall preserve thy soul.

Psalms 121:7

திருவசன
கருத்து
ஆறுதல், பாதுகப்பு
Verse
Category
Comfort, Safe

கத்தோலிக்க
திருவிவிலியம்
ஆண்டவர், எனது பிரசன்னம் உன்னோடு செல்லும். நான் உனக்கு இளைப்பாறுதல் அளிப்பேன் என்று கூற,

விடுதலைப்பயணம் 33:14

பிரிவினைச்
சபை பைபிள்
அதற்கு அவர்: என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றார்.

யாத்திராகமம் 33:14

Catholic
Bible
"I myself," the LORD answered, "will go along, to give you rest."

Exodus 33:14

Protestant
Bible
And he said, My presence shall go with thee, and I will give thee rest.

Exodus 33:14

திருவசன
கருத்து
ஆறுதல்
Verse
Category
Comfort

கத்தோலிக்க
திருவிவிலியம்
ஏனெனில், நான் உன்னோடு இருக்கிறேன். எவரும் உனக்குத் தீங்கிழைக்கப் போவதில்லை.

திருத்தூதர் பணிகள் 18:10

பிரிவினைச்
சபை பைபிள்
நான் உன்னுடனேகூட இருக்கிறேன், உனக்குத் தீங்குசெய்யும்படி ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை;

அப்போஸ்தலருடைய நடபடிகைகள் 18:10

Catholic
Bible
for I am with you. No one will attack and harm you

Acts of Apostles 18:10

Protestant
Bible
For I am with thee, and no man shall set on thee to hurt thee:

Acts of Apostles 18:10

திருவசன
கருத்து
ஆறுதல், நம்பிக்கை
Verse
Category
Comfort, Hope

கத்தோலிக்க
திருவிவிலியம்
ஆண்டவர் மேல் உன் கவலையைப் போட்டுவிடு: அவர் உனக்கு ஆதரவளிப்பார்: அவர் நேர்மையாளரை ஒருபோதும் வீழ்ச்சியுற விடமாட்டார்.

திருப்பாடல்கள் 55:22

பிரிவினைச்
சபை பைபிள்
கர்த்தர்மேல் உன் பாரத்தைவைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.

சங்கீதம் 55:22

Catholic
Bible
Cast your care upon the LORD, who will give you support. God will never allow the righteous to stumble.

Psalms 55:22

Protestant
Bible
Cast thy burden upon the LORD, and he shall sustain thee: he shall never suffer the righteous to be moved

Psalms 55:22

திருவசன
கருத்து
ஆறுதல்
Verse
Category
Comfort