திருவசன வகைகள்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.

S.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை
கத்தோலிக்க
திருவிவிலியம்
ஆண்டவர் உம்மை எல்லாத் தீமையினின்றும் பாதுகாப்பார்: அவர் உம் உயிரைக் காத்திடுவார்.

திருப்பாடல்கள் 121:7

பிரிவினைச்
சபை பைபிள்
கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார்.

சங்கீதம் 121:7

Catholic
Bible
The LORD will guard you from all evil, will always guard your life.

Psalms 121:7

Protestant
Bible
The LORD shall preserve thee from all evil: he shall preserve thy soul.

Psalms 121:7

திருவசன
கருத்து
ஆறுதல், பாதுகப்பு
Verse
Category
Comfort, Safe

கத்தோலிக்க
திருவிவிலியம்
ஆண்டவரே என் ஆயர்: எனக்கேதும் குறையில்லை

திருப்பாடல்கள் 23:1

பிரிவினைச்
சபை பைபிள்
கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார், நான் தாழ்ச்சியடையேன்.

சங்கீதம் 23:1

Catholic
Bible
The LORD is my shepherd; there is nothing I lack.

Psalms 23:1

Protestant
Bible
The LORD is my shepherd; I shall not want.

Psalms 23:1

திருவசன
கருத்து
ஆறுதல், நம்பிக்கை, பாதுகப்பு
Verse
Category
Comfort, Hope, Safe

கத்தோலிக்க
திருவிவிலியம்
என்றுமே இல்லாதவாறு சாவை ஒழித்துவிடுவார்: என் தலைவராகிய ஆண்டவர் எல்லா முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைத்து விடுவார்: தம்மக்களுக்கு ஏற்பட்ட நிந்தையை இம்மண்ணுலகில் அகற்றிவிடுவார்: ஏனெனில், ஆண்டவரே இதை உரைத்தார்.

எசாயா 25:8

பிரிவினைச்
சபை பைபிள்
அவர் மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; கர்த்தரே இதைச் சொன்னார்.

ஏசாயா 25:8

Catholic
Bible
he will destroy death forever. The Lord GOD will wipe away the tears from all faces; The reproach of his people he will remove from the whole earth; for the LORD has spoken

Isaiah 25:8

Protestant
Bible
He will swallow up death in victory; and the Lord GOD will wipe away tears from off all faces; and the rebuke of his people shall he take away from off all the earth: for the LORD hath spoken it.

Isaiah 25:8

திருவசன
கருத்து
ஆறுதல், உதவி, இரக்கம், பாதுகப்பு
Verse
Category
Comfort, Help, Mercy, Safe

கத்தோலிக்க
திருவிவிலியம்
ஆண்டவர் யோசேப்புடன் இருந்தார். எனவே, அவர் சிறப்புற்றவராகத் தம் எகிப்தியத் தலைவனின் இல்லத்தில் வாழ்ந்து வந்தார்.

தொடக்கநூல் 39:2

பிரிவினைச்
சபை பைபிள்
கர்த்தர் யோசேப்போடே இருந்தார், அவன் காரியசித்தியுள்ளவனானான்; அவன் எகிப்தியனாகிய தன் எஜமானுடைய வீட்டிலே இருந்தான்.

ஆதியாகமம் 39:2

Catholic
Bible
But since the LORD was with him, Joseph got on very well and was assigned to the household of his Egyptian master.

Genesis 39:2

Protestant
Bible
And the LORD was with Joseph, and he was a prosperous man; and he was in the house of his master the Egyptian.

Genesis 39:2

திருவசன
கருத்து
பாதுகப்பு, கடவுளுடைய மனிதர்கள், இறைப் பிரசன்னம்
Verse
Category
Safe, Gods Men, God's Presence

கத்தோலிக்க
திருவிவிலியம்
ஆண்டவர் துணைநின்று அவர்களை விடுவிக்கின்றார்: பொல்லாரிடமிருந்து அவர்களை விடுவிக்கின்றார்: அவரிடம் அடைக்கலம் புகுந்ததால், அவர்களை மீட்கின்றார்.

திருப்பாடல்கள் 37:40

பிரிவினைச்
சபை பைபிள்
கர்த்தர் அவர்களுக்கு உதவிசெய்து, அவர்களை விடுவிப்பார்; அவர்கள் அவரை நம்பியிருக்கிறபடியால், அவர்களைத் துன்மார்க்கருடைய கைக்குத் தப்புவித்து இரட்சிப்பார்.

சங்கீதம் 37:40

Catholic
Bible
The LORD helps and rescues them, rescues and saves them from the wicked, because in God they take refuge.

Psalms 37:40

Protestant
Bible
And the LORD shall help them, and deliver them: he shall deliver them from the wicked, and save them, because they trust in him.

Psalms 37:40

திருவசன
கருத்து
பாதுகப்பு, வாக்குறுதி, நம்பிக்கை
Verse
Category
Safe, Promise, Hope