திருவசன வகைகள்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.

S.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை
கத்தோலிக்க
திருவிவிலியம்
அதுமுதல் இயேசு, ' மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது ' எனப் பறைசாற்றத் தொடங்கினார்.

மத்தேயு நற்செய்தி 4:17

பிரிவினைச்
சபை பைபிள்
அதுமுதல் இயேசு: மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.

மத்தேயு 4:17

Catholic
Bible
From that time on, Jesus began to preach and say, "Repent, for the kingdom of heaven is at hand."

Matthew 4:17

Protestant
Bible
From that time Jesus began to preach, and to say, Repent: for the kingdom of heaven is at hand.

Matthew 4:17

திருவசன
கருத்து
இறைவார்த்தை போதித்தல், மனம் மாறுதல்
Verse
Category
Preaching Gospel, Repent

கத்தோலிக்க
திருவிவிலியம்
எனவே ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ!

2 கொரிந்தியர் 5:17

பிரிவினைச்
சபை பைபிள்
இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.

2 கொரிந்தியர் 5:17

Catholic
Bible
So whoever is in Christ is a new creation: the old things have passed away; behold, new things have come.

2 Corinthians 5:17

Protestant
Bible
Therefore if any man be in Christ, he is a new creature: old things are passed away; behold, all things are become new.

2 Corinthians 5:17

திருவசன
கருத்து
மனம் மாறுதல், வாக்குறுதி
Verse
Category
Repent, Promise

கத்தோலிக்க
திருவிவிலியம்
உமது முகத்தை எனக்கு மறைக்காதிரும்; நீர் சினங்கொண்டு அடியேனை விலக்கிவிடாதிரும்; நீரே எனக்குத் துணை; என் மீட்பராகிய கடவுளே, என்னைத் தள்ளிவிடாதேயும்; என்னைக் கைவிடாதிரும்.

திருப்பாடல்கள் 27:9

பிரிவினைச்
சபை பைபிள்
உமது முகத்தை எனக்கு மறையாதேயும்; நீர் கோபத்துடன் உமது அடியேனை விலக்கிப்போடாதேயும்; நீரே எனக்குச் சகாயர்; என் இரட்சிப்பின் தேவனே, என்னை நெகிழவிடாமலும் என்னைக் கைவிடாமலும் இரும்.

சங்கீதம் 27:9

Catholic
Bible
Do not hide your face from me; do not repel your servant in anger. You are my salvation; do not cast me off; do not forsake me, God my savior!

Psalms 27:9

Protestant
Bible
Hide not thy face far from me; put not thy servant away in anger: thou hast been my help; leave me not, neither forsake me, O God of my salvation.

Psalms 27:9

திருவசன
கருத்து
ஆறுதல், மீட்பு, மனம் மாறுதல்
Verse
Category
Comfort, Salvation, Repent