திருவசன வகைகள்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.

S.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை
கத்தோலிக்க
திருவிவிலியம்
உன் கடவுளைச் சந்திக்கத் தயாராயிரு!

ஆமோஸ் 4:12

பிரிவினைச்
சபை பைபிள்
உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு

ஆமோஸ் 4:12

Catholic
Bible
prepare to meet your God, O Israel:

Amos 4:12

Protestant
Bible
prepare to meet thy God, O Israel

Amos 4:12

திருவசன
கருத்து
தீர்க்கதரிசிசன திருவசனம், கடவுளை காண, தயார் ஆகுதல்
Verse
Category
Prophetic Words, Seeing God, Preparing

கத்தோலிக்க
திருவிவிலியம்
உன்னை நீ ஒரு ஞானி என்று எண்ணிக்கொள்ளாதே: ஆண்டவருக்கு அஞ்சித் தீமையை அறவே விலக்கு

நீதி மொழிகள் 3:7

பிரிவினைச்
சபை பைபிள்
நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; கர்த்தருக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு.

நீதி மொழிகள் 3:7

Catholic
Bible
Be not wise in your own eyes, fear the LORD and turn away from evil;

The Proverbs 3:7

Protestant
Bible
Be not wise in thine own eyes: fear the LORD, and depart from evil.

The Proverbs 3:7

திருவசன
கருத்து
அறிவுரை, ஆசீர்வாதம், கடவுளை காண, இறை வார்த்தை
Verse
Category
Advice, Blessings, Seeing God, Gods Words

கத்தோலிக்க
திருவிவிலியம்
நம் தலைவர் மாண்புமிக்கவர்; மிகுந்த வல்லமையுள்ளவர்; அவர்தம் நுண்ணறிவு அளவிடற்கு அரியது.

திருப்பாடல்கள் 147:5

பிரிவினைச்
சபை பைபிள்
நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாயிருக்கிறார்; அவருடைய அறிவு அளவில்லாதது.

சங்கீதம் 147:5

Catholic
Bible
Great is our Lord, vast in power, with wisdom beyond measure.

Psalms 147:5

Protestant
Bible
Great is our Lord, and of great power: his understanding is infinite.

Psalms 147:5

திருவசன
கருத்து
போற்றுதல், கடவுளை காண
Verse
Category
Praise, Seeing God

கத்தோலிக்க
திருவிவிலியம்
பணியாளனின் கண்கள் தன் தலைவனின் கைதனை நோக்கியிருப்பதுபோல, பணிப்பெண்ணின் கண்கள் தன் தலைவியின் கைதனை நோக்கியிருப்பதுபோல, எம் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எமக்கு இரங்கும்வரை, எம் கண்கள் உம்மையே நோக்கியிருக்கும்.

திருப்பாடல்கள் 123:2

பிரிவினைச்
சபை பைபிள்
இதோ, வேலைக்காரரின் கண்கள் தங்கள் எஜமான்களின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், வேலைக்காரியின் கண்கள் தன் எஜமாட்டியின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு இரக்கஞ்செய்யும்வரைக்கும், எங்கள் கண்கள் அவரை நோக்கியிருக்கிறது.

சங்கீதம் 123:2

Catholic
Bible
Yes, like the eyes of a servant on the hand of his master, Like the eyes of a maid on the hand of her mistress, So our eyes are on the LORD our God, till we are shown favor.

Psalms 123:2

Protestant
Bible
Behold, as the eyes of servants look unto the hand of their masters, and as the eyes of a maiden unto the hand of her mistress; so our eyes wait upon the LORD our God, until that he have mercy upon us.

Psalms 123:2

திருவசன
கருத்து
ஆசீர்வாதம், அருள்(கிருபை), இரக்கம், கடவுளை காண
Verse
Category
Blessings, Grace, Mercy, Seeing God

கத்தோலிக்க
திருவிவிலியம்
உன் பணத்தை வைத்துத் துணிந்து கடல் வாணிபம் செய்: ஒருநாள் அது வட்டியோடு திரும்பிவரும்.

சபை உரையாளர் 11:1

பிரிவினைச்
சபை பைபிள்
உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள்மேல் போடு; அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனைக் காண்பாய்.

பிரசங்கி 11:1

Catholic
Bible
Cast your bread upon the waters; after a long time you may find it again.

Ecclesiastes 11:1

Protestant
Bible
Cast thy bread upon the waters: for thou shalt find it after many days.

Ecclesiastes 11:1

திருவசன
கருத்து
அறிவுரை, கடவுளை காண
Verse
Category
Advice, Seeing God