திருவசன வகைகள்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.

S.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை
கத்தோலிக்க
திருவிவிலியம்
உங்கள் தலைமுடி எல்லாம் கூட எண்ணப்பட்டிருக்கின்றன. அஞ்சாதீர்கள்; சிட்டுக்குருவிகள் பலவற்றை விட நீங்கள் மேலானவர்கள்.

லூக்கா நற்செய்தி 12:7

பிரிவினைச்
சபை பைபிள்
உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது, ஆகையால் பயப்படாதிருங்கள், அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.

லூக்கா 12:7

Catholic
Bible
Even the hairs of your head have all been counted. Do not be afraid. You are worth more than many sparrows.

Luke 12:7

Protestant
Bible
But even the very hairs of your head are all numbered. Fear not therefore: ye are of more value than many sparrows.

Luke 12:7

திருவசன
கருத்து
பயம், ஆறுதல், நம்பிக்கை, உவமை
Verse
Category
Fear, Comfort, Hope, Parable

கத்தோலிக்க
திருவிவிலியம்
திராட்சைக் கொடி அவற்றிடம், தெய்வங்களையும் மானிடரையும் மகிழ்விக்கும் எனது திராட்சை இரசத்தை விட்டுவிட்டு மரங்கள்மேல் அசைந்தாட வருவேனா என்றது.

நீதித்தலைவர்கள் 9:13

பிரிவினைச்
சபை பைபிள்
அதற்குத் திராட்சச்செடி: தேவர்களையும் மனுஷரையும் மகிழப்பண்ணும் என் ரசத்தை நான் விட்டு மரங்களை அரசாளப்போவேனோ என்றது.

நியாயாதிபதிகள் 9:13

Catholic
Bible
But the vine answered them, ‘Must I give up my wine that cheers gods* and human beings, and go off to hold sway over the trees’

Judges 9:13

Protestant
Bible
And the vine said unto them, Should I leave my wine, which cheereth God and man, and go to be promoted over the trees

Judges 9:13

திருவசன
கருத்து
அறிவுரை, உவமை
Verse
Category
Advice, Parable

கத்தோலிக்க
திருவிவிலியம்
மரங்கள், தங்களுக்கு ஓர் அரசனைத் திருப்பொழிவு செய்யப் புறப்பட்டன. அவை ஒலிவ மரத்திடம், எங்களை அரசாளும் என்று கூறின

நீதித்தலைவர்கள் 9:8

பிரிவினைச்
சபை பைபிள்
விருட்சங்கள் தங்களுக்கு ஒரு ராஜாவை அபிஷேகம்பண்ணும்படி போய், ஒலிவமரத்தைப் பார்த்து: நீ எங்களுக்கு ராஜாவாயிரு என்றது.

நியாயாதிபதிகள் 9:8

Catholic
Bible
One day the trees went out to anoint a king over themselves. So they said to the olive tree, ‘Reign over us.’

Judges 9:8

Protestant
Bible
The trees went forth on a time to anoint a king over them; and they said unto the olive tree, Reign thou over us.

Judges 9:8

திருவசன
கருத்து
ஆசீர்வாதம், உவமை
Verse
Category
Blessings, Parable