திருவசன வகைகள்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.

S.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை
கத்தோலிக்க
திருவிவிலியம்
ஆனால் இப்போது நான் இந்த நிலையில் இருப்பது கடவுளின் அருளால்தான்.

1 கொரிந்தியர் 15:10

பிரிவினைச்
சபை பைபிள்
ஆகிலும் நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன்;

1 கொரிந்தியர் 15:10

Catholic
Bible
But by the grace of God I am what I am,

1 Corinthians 15:10

Protestant
Bible
But by the grace of God I am what I am:

1 Corinthians 15:10

திருவசன
கருத்து
அருள்(கிருபை)
Verse
Category
Grace

கத்தோலிக்க
திருவிவிலியம்
தளரா மனமுடையோர் பேறுபெற்றோர் என்கிறோம். யோபுவின் தளரா மனத்தைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். இறுதியில் ஆண்டவர் என்ன செய்தார் என்பதும் உங்களுக்குத் தெரியும். ஏனெனில், ஆண்டவர் மிகுந்த பரிவுள்ளமும் இரக்கமும் கொண்டவர்.

யாக்கோபு 5:11

பிரிவினைச்
சபை பைபிள்
இதோ, பொறுமையாயிருக்கிறவர்களைப் பாக்கியவான்களென்கிறோமே! யோபின் பொறுமையைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே

யாக்கோபு 5:11

Catholic
Bible
Indeed we call blessed those who have persevered. You have heard of the perseverance of Job, and you have seen the purpose of the Lord, because "the Lord is compassionate and merciful

James 5:11

Protestant
Bible
Behold, we count them happy which endure. Ye have heard of the patience of Job, and have seen the end of the Lord; that the Lord is very pitiful, and of tender mercy

James 5:11

திருவசன
கருத்து
அறிவுரை, ஆசீர்வாதம், அருள்(கிருபை), கடவுளின் பண்புகள்
Verse
Category
Advice, Blessings, Grace, God Attributes

கத்தோலிக்க
திருவிவிலியம்
வானங்களே, மகிழ்ந்து பாடுங்கள்: மண்ணுலகே, களிகூரு: மலைகளே, அக்களித்து ஆர்ப்பரியுங்கள்: ஆண்டவர் தம் மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளார்: சிறுமையுற்ற தம் மக்கள்மீது இரக்கம் காட்டியுள்ளார்.

எசாயா 49:13

பிரிவினைச்
சபை பைபிள்
வானங்களே, கெம்பீரித்துப்பாடுங்கள்; பூமியே, களிகூரு; பர்வதங்களே, கெம்பீரமாய் முழங்குங்கள்; கர்த்தர் தம்முடைய ஜனத்துக்கு ஆறுதல் செய்தார்; சிறுமைப்பட்டிருக்கிற தம்முடையவர்கள் மேல் இரக்கமாயிருப்பார்.

ஏசாயா 49:13

Catholic
Bible
Sing out, O heavens, and rejoice, O earth, break forth into song, you mountains. For the LORD comforts his people and shows mercy to his afflicted.

Isaiah 49:13

Protestant
Bible
Sing, O heavens; and be joyful, O earth; and break forth into singing, O mountains: for the LORD hath comforted his people, and will have mercy upon his afflicted.

Isaiah 49:13

திருவசன
கருத்து
ஆறுதல், அருள்(கிருபை), கடவுளின் பண்புகள்
Verse
Category
Comfort, Grace, God Attributes

கத்தோலிக்க
திருவிவிலியம்
ஓ மானிடா, நல்லது எது என அவர் உனக்குக் காட்டியிருக்கின்றாரே! நேர்மையைக் கடைப்பிடித்தலையும், இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும் உன் கடவுளுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்து கொள்வதையும் தவிர வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார்

மீக்கா 6:8

பிரிவினைச்
சபை பைபிள்
மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.

மீகா 6:8

Catholic
Bible
You have been told, O man, what is good, and what the LORD requires of you: Only to do the right and to love goodness, and to walk humbly with your God.

Micah 6:8

Protestant
Bible
He hath showed thee, O man, what is good; and what doth the LORD require of thee, but to do justly, and to love mercy, and to walk humbly with thy God

Micah 6:8

திருவசன
கருத்து
அறிவுரை, அருள்(கிருபை), தாழ்ச்சி
Verse
Category
Advice, Grace, Humble

கத்தோலிக்க
திருவிவிலியம்
ஆகையால் இனி நீங்கள் அடிமைகளல்ல: பிள்ளைகள்தாம்: பிள்ளைகளாகவும் உரிமைப்பேறு உடையவர்களாகவும் இருக்கிறீர்கள். இது கடவுளின் செயலே

கலாத்தியர் 4:7

பிரிவினைச்
சபை பைபிள்
ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்; நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய்.

கலாத்தியர் 4:7

Catholic
Bible
So you are no longer a slave but a child, and if a child then also an heir, through God.

Galatians 4:7

Protestant
Bible
Wherefore thou art no more a servant, but a son; and if a son, then an heir of God through Christ.

Galatians 4:7

திருவசன
கருத்து
கடவுளின் கொடை, அருள்(கிருபை)
Verse
Category
Gods Gift, Grace