திருவசன வகைகள்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.

S.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை
கத்தோலிக்க
திருவிவிலியம்
ஆண்டவர் யோசேப்புடன் இருந்தார். எனவே, அவர் சிறப்புற்றவராகத் தம் எகிப்தியத் தலைவனின் இல்லத்தில் வாழ்ந்து வந்தார்.

தொடக்கநூல் 39:2

பிரிவினைச்
சபை பைபிள்
கர்த்தர் யோசேப்போடே இருந்தார், அவன் காரியசித்தியுள்ளவனானான்; அவன் எகிப்தியனாகிய தன் எஜமானுடைய வீட்டிலே இருந்தான்.

ஆதியாகமம் 39:2

Catholic
Bible
But since the LORD was with him, Joseph got on very well and was assigned to the household of his Egyptian master.

Genesis 39:2

Protestant
Bible
And the LORD was with Joseph, and he was a prosperous man; and he was in the house of his master the Egyptian.

Genesis 39:2

திருவசன
கருத்து
பாதுகப்பு, கடவுளுடைய மனிதர்கள், இறைப் பிரசன்னம்
Verse
Category
Safe, Gods Men, God's Presence

கத்தோலிக்க
திருவிவிலியம்
அவர், பையன்மேல் கை வைக்காதே: அவனுக்கு எதுவும் செய்யாதே: உன் ஒரே மகனையும் எனக்குப் பலியிட நீ தயங்கவில்லை என்பதிலிருந்து நீ கடவுளுக்கு அஞ்சுபவன் என்று இப்போது நான் அறிந்து கொண்டேன் என்றார்.

தொடக்கநூல் 22:12

பிரிவினைச்
சபை பைபிள்
அப்பொழுது அவர்: பிள்ளையாண்டான்மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே; நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக்கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார்.

ஆதியாகமம் 22:12

Catholic
Bible
"Do not lay your hand on the boy," said the messenger. "Do not do the least thing to him. I know now how devoted you are to God, since you did not withhold from me your own beloved son."

Genesis 22:12

Protestant
Bible
And he said, Lay not thine hand upon the lad, neither do thou any thing unto him: for now I know that thou fearest God, seeing thou hast not withheld thy son, thine only son from me.

Genesis 22:12

திருவசன
கருத்து
கர்த்தருக்கு பயப்படுகிற பயம் , கடவுளுடைய மனிதர்கள்
Verse
Category
God Fearing, Gods Men

கத்தோலிக்க
திருவிவிலியம்
மீண்டும் அச்சத்திற்கு உள்ளாக்கும் மனப்பான்மையை நீங்கள் பெற்றுக்கொள்ளவில்லை: மாறாகக் கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக் கொண்டீர்கள். அதனால் நாம், அப்பா, தந்தையே என அழைக்கிறோம்.

உரோமையர் 8:15

பிரிவினைச்
சபை பைபிள்
அந்தப்படி, திரும்பவும்பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்.

ரோமர் 8:15

Catholic
Bible
For you did not receive a spirit of slavery to fall back into fear, but you received a spirit of adoption, through which we cry, "Abba, Father!"

Romans 8:15

Protestant
Bible
For ye have not received the spirit of bondage again to fear; but ye have received the Spirit of adoption, whereby we cry, Abba, Father.

Romans 8:15

திருவசன
கருத்து
பயம், கடவுளுடைய மனிதர்கள்
Verse
Category
Fear, Gods Men

கத்தோலிக்க
திருவிவிலியம்
யாக்கோபே, உன்னைப் படைத்தவரும் இஸ்ரயேலே, உன்னை உருவாக்கிய வருமான ஆண்டவர் இப்போது இவ்வாறு கூறுகிறார்: அஞ்சாதே, நான் உன்னை மீட்டுக் கொண்டேன்: உன் பெயரைச் சொல்லி உன்னை அழைத்தேன்: நீ எனக்கு உரியவன்.

எசாயா 43:1

பிரிவினைச்
சபை பைபிள்
இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும், இஸ்ரவேலே உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்.

ஏசாயா 43:1

Catholic
Bible
But now, thus says the LORD, who created you, O Jacob, and formed you, O Israel: Fear not, for I have redeemed you; I have called you by name: you are mine.

Isaiah 43:1

Protestant
Bible
But now thus saith the LORD that created thee, O Jacob, and he that formed thee, O Israel, Fear not: for I have redeemed thee, I have called thee by thy name; thou art mine.

Isaiah 43:1

திருவசன
கருத்து
ஆறுதல், ஆசீர்வாதம், இறை வார்த்தை, பயம், கடவுளுடைய மனிதர்கள்
Verse
Category
Comfort, Blessings, Gods Words, Fear, Gods Men

கத்தோலிக்க
திருவிவிலியம்
எனது பெயரைப் போற்றிடும் என் மக்கள் சிறுமையுற்று, தங்கள் பாவங்களிலிருந்து மனம் வருந்தி, இரந்து மன்றாடி, என் திருமுகத்தை நாடினால், வானகத்திலிருந்து அவர்களது மன்றாட்டுகளைக் கேட்டு அவர்கள் பாவங்களை மன்னிப்பேன்: அவர்களது நாட்டுக்கு நலன் அளிப்பேன்.

2 குறிப்பேடு 7:14

பிரிவினைச்
சபை பைபிள்
என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்.

2 நாளாகமம் 7:14

Catholic
Bible
and if my people, upon whom my name has been pronounced, humble themselves and pray, and seek my presence and turn from their evil ways, I will hear them from heaven and pardon their sins and revive their land.

2 Chronicles 7:14

Protestant
Bible
If my people, which are called by my name, shall humble themselves, and pray, and seek my face, and turn from their wicked ways; then will I hear from heaven, and will forgive their sin, and will heal their land.

2 Chronicles 7:14

திருவசன
கருத்து
பாவம், ஜெபம், கடவுளுடைய மனிதர்கள், ஆறுதல்
Verse
Category
Sin, Prayer, Gods Men, Comfort