திருவசன வகைகள்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.

S.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை
கத்தோலிக்க
திருவிவிலியம்
ஆண்டவர் யோசேப்புடன் இருந்தார். எனவே, அவர் சிறப்புற்றவராகத் தம் எகிப்தியத் தலைவனின் இல்லத்தில் வாழ்ந்து வந்தார்.

தொடக்கநூல் 39:2

பிரிவினைச்
சபை பைபிள்
கர்த்தர் யோசேப்போடே இருந்தார், அவன் காரியசித்தியுள்ளவனானான்; அவன் எகிப்தியனாகிய தன் எஜமானுடைய வீட்டிலே இருந்தான்.

ஆதியாகமம் 39:2

Catholic
Bible
But since the LORD was with him, Joseph got on very well and was assigned to the household of his Egyptian master.

Genesis 39:2

Protestant
Bible
And the LORD was with Joseph, and he was a prosperous man; and he was in the house of his master the Egyptian.

Genesis 39:2

திருவசன
கருத்து
பாதுகப்பு, கடவுளுடைய மனிதர்கள், இறைப் பிரசன்னம்
Verse
Category
Safe, Gods Men, God's Presence

கத்தோலிக்க
திருவிவிலியம்
ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் நீங்கள் செய்த அனைத்திலும் உங்களுக்கு ஆசி வழங்கியுள்ளார். இப் பெரும் பாலைநிலம் வழியாக நீங்கள் நடந்து வந்திருப்பதை அவர் அறிவார். இந்த நாற்பது ஆண்டுகளும் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களோடு இருந்துள்ளார். உங்களுக்கு எதுவுமே குறைவுபடவில்லை

இணைச்சட்டம் 2:7

பிரிவினைச்
சபை பைபிள்
உன் தேவனாகிய கர்த்தர் உன் கைக்கிரியைகளிளெல்லாம் உன்னை ஆசீர்வதித்து வருகிறார்; இந்தப் பெரிய வனாந்தரவழியாய் நீ நடந்துவருகிறதை அறிவார்; இந்த நாற்பது வருஷமும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருந்தார்; உனக்கு ஒன்றும் குறைவுபடவில்லை என்று சொல் என்றார்.

உபாகமம் 2:7

Catholic
Bible
The LORD, your God, has blessed you in all your undertakings; he has been concerned about your journey through this vast desert. It is now forty years that he has been with you, and you have never been in want.'

Deuteronomy 2:7

Protestant
Bible
For the LORD thy God hath blessed thee in all the works of thy hand: he knoweth thy walking through this great wilderness: these forty years the LORD thy God hath been with thee; thou hast lacked nothing.

Deuteronomy 2:7

திருவசன
கருத்து
ஆறுதல், உதவி, இறைப் பிரசன்னம், ஆசீர்வாதம்
Verse
Category
Comfort, Help, God's Presence, Blessings

கத்தோலிக்க
திருவிவிலியம்
எங்கள் கடவுளாகிய ஆண்டவரே! இப்பொழுது இவன் கையிலிருந்து எங்களைக் காத்தருளும். இதன் மூலம், நீர் ஒருவரே கடவுளாகிய ஆண்டவர் என்பதை உலகின் எல்லா அரசுகளும் அறிந்துகொள்ளும்.

2 அரசர்கள் 19:19

பிரிவினைச்
சபை பைபிள்
இப்போதும் எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே தேவனாகிய கர்த்தர் என்று பூமியின் ராஜ்யங்கள் எல்லாம் அறியும்படிக்கு, எங்களை அவன் கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் என்று விண்ணப்பம்பண்ணினான்.

2 இராஜாக்கள் 19:19

Catholic
Bible
Therefore, O LORD, our God, save us from the power of this man, that all the kingdoms of the earth may know that you alone, O LORD, are God."

2 Kings 19:19

Protestant
Bible
Now therefore, O LORD our God, I beseech thee, save thou us out of his hand, that all the kingdoms of the earth may know that thou art the LORD God, even thou only.

2 Kings 19:19

திருவசன
கருத்து
கடவுளின் பண்புகள், இறைப் பிரசன்னம், இறை வார்த்தை
Verse
Category
God Attributes, God's Presence, Gods Words

கத்தோலிக்க
திருவிவிலியம்
ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்: அவர் என் வலப்பக்கம் உள்ளார்: எனவே, நான் அசைவுறேன்.

திருப்பாடல்கள் 16:8

பிரிவினைச்
சபை பைபிள்
கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை.

சங்கீதம் 16:8

Catholic
Bible
I keep the LORD always before me; with the Lord at my right, I shall never be shaken.

Psalms 16:8

Protestant
Bible
I have set the LORD always before me: because he is at my right hand, I shall not be moved.

Psalms 16:8

திருவசன
கருத்து
அறிவுரை, ஆறுதல், இறைப் பிரசன்னம்
Verse
Category
Advice, Comfort, God's Presence

கத்தோலிக்க
திருவிவிலியம்
உமது பெயர் என்றும் மாட்சி பெறுவதாக! அப்பொழுது மாந்தர் படைகளின் ஆண்டவரே இஸ்ரயேலின் கடவுள் என்பர். உமது ஊழியன் தாவீதின் குடும்பமும் உம் திருமுன் நிலைத்திருக்கும்.

2 சாமுவேல் 7:26

பிரிவினைச்
சபை பைபிள்
அப்படியே சேனைகளின் கர்த்தர் இஸ்ரவேலின்மேல் தேவனானவர் என்று சொல்லி, உம்முடைய நாமம் என்றென்றைக்கும் மகிமைப்படுவதாக; உமது அடியானாகிய தாவீதின் வீடு உமக்கு முன்பாக நிலைநிற்பதாக.

2 சாமுவேல் 7:26

Catholic
Bible
Your name will be forever great, when men say, 'The LORD of hosts is God of Israel,' and the house of your servant David stands firm before you.

2 Samuel 7:26

Protestant
Bible
And let thy name be magnified for ever, saying, The LORD of hosts is the God over Israel: and let the house of thy servant David be established before thee.

2 Samuel 7:26

திருவசன
கருத்து
கடவுளின் பண்புகள், இறைப் பிரசன்னம்
Verse
Category
God Attributes, God's Presence