திருவசன வகைகள்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.

S.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை
கத்தோலிக்க
திருவிவிலியம்
உங்கள் தலைமுடி எல்லாம் கூட எண்ணப்பட்டிருக்கின்றன. அஞ்சாதீர்கள்; சிட்டுக்குருவிகள் பலவற்றை விட நீங்கள் மேலானவர்கள்.

லூக்கா நற்செய்தி 12:7

பிரிவினைச்
சபை பைபிள்
உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது, ஆகையால் பயப்படாதிருங்கள், அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.

லூக்கா 12:7

Catholic
Bible
Even the hairs of your head have all been counted. Do not be afraid. You are worth more than many sparrows.

Luke 12:7

Protestant
Bible
But even the very hairs of your head are all numbered. Fear not therefore: ye are of more value than many sparrows.

Luke 12:7

திருவசன
கருத்து
பயம், ஆறுதல், நம்பிக்கை, உவமை
Verse
Category
Fear, Comfort, Hope, Parable

கத்தோலிக்க
திருவிவிலியம்
ஆகவே, எதை உண்போம் எதைக் குடிப்போம் எதை அணிவோம் எனக் கவலை கொள்ளாதீர்கள்.

மத்தேயு நற்செய்தி 6:31

பிரிவினைச்
சபை பைபிள்
ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படாதிருங்கள்.

மத்தேயு 6:31

Catholic
Bible
So do not worry and say, 'What are we to eat' or 'What are we to drink' or 'What are we to wear'

Matthew 6:31

Protestant
Bible
Therefore take no thought, saying, What shall we eat or, What shall we drink or, Wherewithal shall we be clothed

Matthew 6:31

திருவசன
கருத்து
அறிவுரை, பயம், இறை வார்த்தை, தீர்க்கதரிசிசன திருவசனம்
Verse
Category
Advice, Fear, Gods Words, Prophetic Words

கத்தோலிக்க
திருவிவிலியம்
ஆண்டவர்பற்றிய அச்சமே ஞானத்தின் தொடக்கம்: அவர்தம் கட்டளைகளைக் கடைப்பிடிப்போர் நல்லறிவுடையோர்: அவரது புகழ் என்றென்றும் நிலைத்துள்ளது.

திருப்பாடல்கள் 111:10

பிரிவினைச்
சபை பைபிள்
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய கற்பனைகளின்படி செய்கிற யாவருக்கும் நற்புத்தியுண்டு; அவர் புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும்.

சங்கீதம் 111:10

Catholic
Bible
The fear of the LORD is the beginning of wisdom; prudent are all who live by it. Your praise endures forever.

Psalms 111:10

Protestant
Bible
The fear of the LORD is the beginning of wisdom: a good understanding have all they that do his commandments: his praise endureth for ever.

Psalms 111:10

திருவசன
கருத்து
பயம், ஞானம்
Verse
Category
Fear, Wisdom

கத்தோலிக்க
திருவிவிலியம்
கடவுளுக்கு அஞ்சி நடப்போரே! அனைவரும் வாரீர்! கேளீர்! அவர் எனக்குச் செய்ததனை எடுத்துரைப்பேன்

திருப்பாடல்கள் 66:16

பிரிவினைச்
சபை பைபிள்
தேவனுக்குப் பயந்தவர்களே, நீங்கள் எல்லாரும் வந்து கேளுங்கள்; அவர் என் ஆத்துமாவுக்குச் செய்ததைச் சொல்லுவேன்

சங்கீதம் 66:16

Catholic
Bible
Come and hear, all you who fear God, while I recount what has been done for me.

Psalms 66:16

Protestant
Bible
Come and hear, all ye that fear God, and I will declare what he hath done for my soul.

Psalms 66:16

திருவசன
கருத்து
பயம், கற்பித்தல்
Verse
Category
Fear, Teaching

கத்தோலிக்க
திருவிவிலியம்
ஆண்டரைப் பற்றிய அச்சம் தூயது: அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை: அவை முற்றிலும் நீதியானவை

திருப்பாடல்கள் 19:9

பிரிவினைச்
சபை பைபிள்
கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாயிருக்கிறது.

சங்கீதம் 19:9

Catholic
Bible
The fear of the LORD is pure, enduring forever. The statutes of the LORD are true, all of them just;

Psalms 19:9

Protestant
Bible
The fear of the LORD is clean, enduring for ever: the judgments of the LORD are true and righteous altogether.

Psalms 19:9

திருவசன
கருத்து
பயம், போற்றுதல்
Verse
Category
Fear, Praise