திருவசன வகைகள்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.

S.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை
கத்தோலிக்க
திருவிவிலியம்
தலைவராகிய ஆண்டவர் கூறுகின்றார்: இதோ! நாள்கள் வரப்போகின்றன! அப்போது நாட்டினுள் பஞ்சத்தை அனுப்புவேன்: அது உணவு கிடைக்காத பஞ்சமோ, நீரில்லாத வறட்சியோ அன்று: ஆண்டவரின் வாக்கு கிடைக்காத பஞ்சமே அது.

ஆமோஸ் 8:11

பிரிவினைச்
சபை பைபிள்
இதோ, நான் தேசத்தின்மேல் பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும்; ஆகாரக் குறைவினால் உண்டாகிய பஞ்சமல்ல, ஜலக்குறைவினால் உண்டாகிய தாகமுமல்ல, கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சத்தை அனுப்புவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

ஆமோஸ் 8:11

Catholic
Bible
Yes, days are coming, says the Lord GOD, when I will send famine upon the land: Not a famine of bread, or thirst for water, but for hearing the word of the LORD.

Amos 8:11

Protestant
Bible
Behold, the days come, saith the Lord GOD, that I will send a famine in the land, not a famine of bread, nor a thirst for water, but of hearing the words of the LORD:

Amos 8:11

திருவசன
கருத்து
இறை வார்த்தை, இறைவார்த்தை போதித்தல், பஞ்சம்
Verse
Category
Gods Words, Preaching Gospel, Famine

கத்தோலிக்க
திருவிவிலியம்
மேலும் அவர், உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்கு நீ அக்கறையுடன் செவி சாய்த்து, அவர் பார்வையில் நலமாகத் தோன்றுவதைச் செய்து, அவர் கட்டளைகளைப் பின்பற்றி, அவர் சட்டங்கள் அனைத்தையும் கைக்கொண்டால், நான் எகிப்திற்கு வரச்செய்த கொள்ளை நோய்களை உன்மேல் வரவிடமாட்டேன். ஏனெனில் நானே உன்னைக் குணமாக்கும் ஆண்டவர் என்றார்

விடுதலைப்பயணம் 15:26

பிரிவினைச்
சபை பைபிள்
நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்.

யாத்திராகமம் 15:26

Catholic
Bible
If you really listen to the voice of the LORD, your God," he told them, "and do what is right in his eyes: if you heed his commandments and keep all his precepts, I will not afflict you with any of the diseases with which I afflicted the Egyptians; for I, the LORD, am your healer

Exodus 15:26

Protestant
Bible
And said, If thou wilt diligently hearken to the voice of the LORD thy God, and wilt do that which is right in his sight, and wilt give ear to his commandments, and keep all his statutes, I will put none of these diseases upon thee, which I have brought upon the Egyptians: for I am the LORD that healeth thee.

Exodus 15:26

திருவசன
கருத்து
அறிவுரை, பஞ்சம், வாக்குறுதி
Verse
Category
Advice, Famine, Promise

கத்தோலிக்க
திருவிவிலியம்
வேலை செய்யாத கை வறுமையை வருவிக்கும்: விடாமுயற்சியுடையோரின் கையோ செல்வத்தை உண்டாக்கும்

நீதி மொழிகள் 10:4

பிரிவினைச்
சபை பைபிள்
சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்; சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும்.

நீதி மொழிகள் 10:4

Catholic
Bible
The slack hand impoverishes, but the hand of the diligent enriches.

The Proverbs 10:4

Protestant
Bible
He becometh poor that dealeth with a slack hand: but the hand of the diligent maketh rich.

The Proverbs 10:4

திருவசன
கருத்து
அறிவுரை, ஆறுதல், பஞ்சம்
Verse
Category
Advice, Comfort, Famine