திருவசன வகைகள்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.

S.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை
கத்தோலிக்க
திருவிவிலியம்
ஓ மானிடா, நல்லது எது என அவர் உனக்குக் காட்டியிருக்கின்றாரே! நேர்மையைக் கடைப்பிடித்தலையும், இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும் உன் கடவுளுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்து கொள்வதையும் தவிர வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார்

மீக்கா 6:8

பிரிவினைச்
சபை பைபிள்
மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.

மீகா 6:8

Catholic
Bible
You have been told, O man, what is good, and what the LORD requires of you: Only to do the right and to love goodness, and to walk humbly with your God.

Micah 6:8

Protestant
Bible
He hath showed thee, O man, what is good; and what doth the LORD require of thee, but to do justly, and to love mercy, and to walk humbly with thy God

Micah 6:8

திருவசன
கருத்து
அறிவுரை, அருள்(கிருபை), தாழ்ச்சி
Verse
Category
Advice, Grace, Humble

கத்தோலிக்க
திருவிவிலியம்
உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்: நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார்.

திருப்பாடல்கள் 34:18

பிரிவினைச்
சபை பைபிள்
நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்

சங்கீதம் 34:18

Catholic
Bible
The LORD is close to the brokenhearted, saves those whose spirit is crushed.

Psalms 34:18

Protestant
Bible
The LORD is nigh unto them that are of a broken heart; and saveth such as be of a contrite spirit.

Psalms 34:18

திருவசன
கருத்து
ஆறுதல், கடவுளின் பண்புகள், தாழ்ச்சி
Verse
Category
Comfort, God Attributes, Humble

கத்தோலிக்க
திருவிவிலியம்
முழு மனத்தோடு ஆண்டவரை நம்பு: உன் சொந்த அறிவாற்றலைச் சார்ந்து நில்லாதே

நீதி மொழிகள் 3:5

பிரிவினைச்
சபை பைபிள்
உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து,

நீதி மொழிகள் 3:5

Catholic
Bible
Trust in the LORD with all your heart, on your own intelligence rely not;

The Proverbs 3:5

Protestant
Bible
Trust in the LORD with all thine heart; and lean not unto thine own understanding.

The Proverbs 3:5

திருவசன
கருத்து
அறிவுரை, இறை வார்த்தை, தாழ்ச்சி, கீழ்படிதல், ஞானம்
Verse
Category
Advice, Gods Words, Humble, Obedience, Wisdom

கத்தோலிக்க
திருவிவிலியம்
ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார்: தாழ்நிலையிலுள்ள அவர்களுக்கு வெற்றியளித்து மேன்மைப் படுத்துவார்.

திருப்பாடல்கள் 149:4

பிரிவினைச்
சபை பைபிள்
கர்த்தர் தம்முடைய ஜனத்தின்மேல் பிரியம் வைக்கிறார்; சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்.

சங்கீதம் 149:4

Catholic
Bible
For the LORD takes delight in his people, honors the poor with victory.

Psalms 149:4

Protestant
Bible
For the LORD taketh pleasure in his people: he will beautify the meek with salvation.

Psalms 149:4

திருவசன
கருத்து
அறிவுரை, அருள்(கிருபை), தாழ்ச்சி
Verse
Category
Advice, Grace, Humble

கத்தோலிக்க
திருவிவிலியம்
ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்:

பிலிப்பியர் 2:19

பிரிவினைச்
சபை பைபிள்
இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,

பிலிப்பியர் 2:19

Catholic
Bible
that at the name of Jesus every knee should bend, of those in heaven and on earth and under the earth,

Philippians 2:19

Protestant
Bible
That at the name of Jesus every knee should bow, of things in heaven, and things in earth, and things under the earth;

Philippians 2:19

திருவசன
கருத்து
தாழ்ச்சி, ஜெபம்
Verse
Category
Humble, Prayer