திருவசன வகைகள்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.

S.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை
கத்தோலிக்க
திருவிவிலியம்
ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினம் நீங்கள். மண்ணிலுள்ள எல்லா மக்களினங்களிலும் உங்களையே தம் சொந்த மக்களாக கடவுளாகிய ஆண்டவர் தேர்ந்து கொண்டார்.

இணைச்சட்டம் 7:6

பிரிவினைச்
சபை பைபிள்
நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனம், பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்துகொண்டார்.

உபாகமம் 7:6

Catholic
Bible
For you are a people sacred to the LORD, your God; he has chosen you from all the nations on the face of the earth to be a people peculiarly his own.

Deuteronomy 7:6

Protestant
Bible
For thou art an holy people unto the LORD thy God: the LORD thy God hath chosen thee to be a special people unto himself, above all people that are upon the face of the earth.

Deuteronomy 7:6

திருவசன
கருத்து
ஆறுதல், கடவுளின் மக்கள்
Verse
Category
Comfort, Chosen People

கத்தோலிக்க
திருவிவிலியம்
அவருடைய அன்பர் மேன்மையடைந்து களிகூர்வராக! மெத்தைகளில் சாய்ந்து மகிழ்ந்து கொண்டாடுவராக!

திருப்பாடல்கள் 149:6

பிரிவினைச்
சபை பைபிள்
பரிசுத்தவான்கள் மகிமையோடே களிகூர்ந்து, தங்கள் படுக்கைகளின்மேல் கெம்பீரிப்பார்கள்.

சங்கீதம் 149:6

Catholic
Bible
Let the faithful rejoice in their glory, cry out for joy at their banquet,

Psalms 149:6

Protestant
Bible
Let the saints be joyful in glory: let them sing aloud upon their beds.

Psalms 149:6

திருவசன
கருத்து
ஆறுதல், கடவுளின் மக்கள், போற்றுதல்
Verse
Category
Comfort, Chosen People, Praise

கத்தோலிக்க
திருவிவிலியம்
நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல: அவை அனைத்தினின்றும் ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார்

திருப்பாடல்கள் 34:19

பிரிவினைச்
சபை பைபிள்
நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்.

சங்கீதம் 34:19

Catholic
Bible
Many are the troubles of the just, but the LORD delivers from them all.

Psalms 34:19

Protestant
Bible
Many are the afflictions of the righteous: but the LORD delivereth him out of them all.

Psalms 34:19

திருவசன
கருத்து
கடவுளின் மக்கள், கர்த்தருக்கு பயப்படுகிற பயம்
Verse
Category
Chosen People, God Fearing

கத்தோலிக்க
திருவிவிலியம்
அவர்கள் என்னை நோக்கி மன்றாடும்போது, அவர்களுக்குப் பதிலளிப்பேன்: அவர்களது துன்பத்தில் அவர்களோடு இருப்பேன்: அவர்களைத் தப்புவித்து அவர்களைப் பெருமைப்படுத்துவேன்

திருப்பாடல்கள் 91:15

பிரிவினைச்
சபை பைபிள்
அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்.

சங்கீதம் 91:15

Catholic
Bible
He will call upon me and I will answer; I will be with him in distress; I will deliver him and give him honor.

Psalms 91:15

Protestant
Bible
He shall call upon me, and I will answer him: I will be with him in trouble; I will deliver him, and honour him.

Psalms 91:15

திருவசன
கருத்து
ஆசீர்வாதம், கடவுளின் மக்கள், இரட்சிப்பு, ஜெபம்
Verse
Category
Blessings, Chosen People, Deliver, Prayer

கத்தோலிக்க
திருவிவிலியம்
எனவே நாம் இவ்வுடலில் குடியிருந்தாலும் அதிலிருந்து குடிபெயர்ந்தாலும் அவருக்கு உகந்தவராயிருப்பதே நம் நோக்கம்.

2 கொரிந்தியர் 5:9

பிரிவினைச்
சபை பைபிள்
அதினிமித்தமே நாம் சரீரத்தில் குடியிருந்தாலும் குடியிராமற்போனாலும் அவருக்குப் பிரியமானவர்களாயிருக்க நாடுகிறோம்.

2 கொரிந்தியர் 5:9

Catholic
Bible
Therefore, we aspire to please him, whether we are at home or away.

2 Corinthians 5:9

Protestant
Bible
Wherefore we labour, that, whether present or absent, we may be accepted of him.

2 Corinthians 5:9

திருவசன
கருத்து
அறிவுரை, ஆறுதல், கடவுளின் மக்கள்
Verse
Category
Advice, Comfort, Chosen People