திருவசன வகைகள்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.

S.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை
கத்தோலிக்க
திருவிவிலியம்
நம்பிக்கையோடு இறைவனிடம் வேண்டும்போது நோயுற்றவர் குணமாவார். ஆண்டவர் அவரை எழுப்பி விடுவார். அவர் பாவம் செய்திருந்தால் மன்னிப்புப் பெறுவார்.

யாக்கோபு 5:15

பிரிவினைச்
சபை பைபிள்
அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்.

யாக்கோபு 5:15

Catholic
Bible
and the prayer of faith will save the sick person, and the Lord will raise him up. If he has committed any sins, he will be forgiven.

James 5:15

Protestant
Bible
And the prayer of faith shall save the sick, and the Lord shall raise him up; and if he have committed sins, they shall be forgiven him.

James 5:15

திருவசன
கருத்து
பாவம், ஜெபம், நம்பிக்கை, பாவ மன்னிப்பு
Verse
Category
Sin, Prayer, Hope, Forgiven

கத்தோலிக்க
திருவிவிலியம்
நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்: அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார்

திருப்பாடல்கள் 34:17

பிரிவினைச்
சபை பைபிள்
நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார்.

சங்கீதம் 34:17

Catholic
Bible
When the just cry out, the LORD hears and rescues them from all distress.

Psalms 34:17

Protestant
Bible
The righteous cry, and the LORD heareth, and delivereth them out of all their troubles. .

Psalms 34:17

திருவசன
கருத்து
ஜெபம், போற்றுதல்
Verse
Category
Prayer, Praise

கத்தோலிக்க
திருவிவிலியம்
துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்: அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்: எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார்.

திருப்பாடல்கள் 34:4

பிரிவினைச்
சபை பைபிள்
நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்.

சங்கீதம் 34:4

Catholic
Bible
I sought the LORD, who answered me, delivered me from all my fears.

Psalms 34:4

Protestant
Bible
I sought the LORD, and he heard me, and delivered me from all my fears.

Psalms 34:4

திருவசன
கருத்து
ஜெபம், பயம்
Verse
Category
Prayer, Fear

கத்தோலிக்க
திருவிவிலியம்
தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார்.

திருப்பாடல்கள் 145:18

பிரிவினைச்
சபை பைபிள்
தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.

சங்கீதம் 145:18

Catholic
Bible
You, LORD, are near to all who call upon you, to all who call upon you in truth.

Psalms 145:18

Protestant
Bible
The LORD is nigh unto all them that call upon him, to all that call upon him in truth.

Psalms 145:18

திருவசன
கருத்து
அறிவுரை, ஆசீர்வாதம், ஜெபம்
Verse
Category
Advice, Blessings, Prayer

கத்தோலிக்க
திருவிவிலியம்
எனது பெயரைப் போற்றிடும் என் மக்கள் சிறுமையுற்று, தங்கள் பாவங்களிலிருந்து மனம் வருந்தி, இரந்து மன்றாடி, என் திருமுகத்தை நாடினால், வானகத்திலிருந்து அவர்களது மன்றாட்டுகளைக் கேட்டு அவர்கள் பாவங்களை மன்னிப்பேன்: அவர்களது நாட்டுக்கு நலன் அளிப்பேன்.

2 குறிப்பேடு 7:14

பிரிவினைச்
சபை பைபிள்
என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்.

2 நாளாகமம் 7:14

Catholic
Bible
and if my people, upon whom my name has been pronounced, humble themselves and pray, and seek my presence and turn from their evil ways, I will hear them from heaven and pardon their sins and revive their land.

2 Chronicles 7:14

Protestant
Bible
If my people, which are called by my name, shall humble themselves, and pray, and seek my face, and turn from their wicked ways; then will I hear from heaven, and will forgive their sin, and will heal their land.

2 Chronicles 7:14

திருவசன
கருத்து
பாவம், ஜெபம், கடவுளுடைய மனிதர்கள், ஆறுதல்
Verse
Category
Sin, Prayer, Gods Men, Comfort