திருவசன வகைகள்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.

S.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை
கத்தோலிக்க
திருவிவிலியம்
காற்றைப் பிடிக்க முயல்வது போன்ற பயனற்ற உழைப்பு இரு கை நிறைய இருப்பதைவிட மன அமைதி ஒரு கையளவு இருப்பதே மேல்.

சபை உரையாளர் 4:6

பிரிவினைச்
சபை பைபிள்
வருத்தத்தோடும் மனச்சஞ்சலத்தோடும் இரண்டு கைப்பிடியும் நிறையக்கொண்டிருப்பதைப் பார்க்கிலும், அமைச்சலோடு ஒருகைப்பிடி நிறையக் கொண்டிருப்பதே நலம்.

பிரசங்கி 4:6

Catholic
Bible
Better is one handful with tranquility than two with toil and a chase after wind!

Ecclesiastes 4:6

Protestant
Bible
Better is an handful with quietness, than both the hands full with travail and vexation of spirit.

Ecclesiastes 4:6

திருவசன
கருத்து
அறிவுரை, மன அமைதி
Verse
Category
Advice, Peace of Mind

கத்தோலிக்க
திருவிவிலியம்
அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம்.

யோவான் நற்செய்தி 14:27

பிரிவினைச்
சபை பைபிள்
சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.

யோவான் 14:27

Catholic
Bible
Peace I leave with you; my peace I give to you. Not as the world gives do I give it to you. Do not let your hearts be troubled or afraid.

John 14:27

Protestant
Bible
Peace I leave with you, my peace I give unto you: not as the world giveth, give I unto you. Let not your heart be troubled, neither let it be afraid.

John 14:27

திருவசன
கருத்து
மன அமைதி
Verse
Category
Peace of Mind

கத்தோலிக்க
திருவிவிலியம்
ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனெனில் நாளையக் கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும. அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்.

மத்தேயு நற்செய்தி 37:4

பிரிவினைச்
சபை பைபிள்
ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும்

மத்தேயு 37:4

Catholic
Bible
Do not worry about tomorrow; tomorrow will take care of itself. Sufficient for a day is its own evil.

Matthew 37:4

Protestant
Bible
Take therefore no thought for the morrow: for the morrow shall take thought for the things of itself. Sufficient unto the day is the evil thereof.

Matthew 37:4

திருவசன
கருத்து
இறை வார்த்தை, மன அமைதி, அறிவுரை
Verse
Category
Gods Words, Peace of Mind, Advice

கத்தோலிக்க
திருவிவிலியம்
அவர் உன் எல்லைப்புறங்களில் அமைதி நிலவச் செய்கின்றார்; உயர்தரக் கோதுமை வழங்கி உன்னை நிறைவடையச் செய்கின்றார்.

திருப்பாடல்கள் 147:14

பிரிவினைச்
சபை பைபிள்
அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி, உச்சிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்.

சங்கீதம் 147:14

Catholic
Bible
Brought peace to your borders, and filled you with finest wheat.

Psalms 147:14

Protestant
Bible
He maketh peace in thy borders, and filleth thee with the finest of the wheat.

Psalms 147:14

திருவசன
கருத்து
ஆசீர்வாதம், மன அமைதி
Verse
Category
Blessings, Peace of Mind

கத்தோலிக்க
திருவிவிலியம்
உடைந்த உள்ளத்தோரைக் குணப்படுத்துகின்றார்; அவர்களின் காயங்களைக் கட்டுகின்றார்.

திருப்பாடல்கள் 147:3

பிரிவினைச்
சபை பைபிள்
இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.

சங்கீதம் 147:3

Catholic
Bible
Heals the brokenhearted, binds up their wounds

Psalms 147:3

Protestant
Bible
He healeth the broken in heart, and bindeth up their wounds.

Psalms 147:3

திருவசன
கருத்து
அறிவுரை, மன அமைதி, இரக்கம்
Verse
Category
Advice, Peace of Mind, Mercy