திருவசன வகைகள்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.

S.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை
கத்தோலிக்க
திருவிவிலியம்
எனவே கடவுளுக்குப் பணிந்து வாழுங்கள்: அலகையை எதிர்த்து நில்லுங்கள். அப்பொழுது அது உங்களிடமிருந்து ஓடிப்போகும்.

யாக்கோபு 4:7

பிரிவினைச்
சபை பைபிள்
ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.

யாக்கோபு 4:7

Catholic
Bible
So submit yourselves to God. Resist the devil, and he will flee from you.

James 4:7

Protestant
Bible
Submit yourselves therefore to God. Resist the devil, and he will flee from you.

James 4:7

திருவசன
கருத்து
கீழ்படிதல், பிசாசு, அறிவுரை
Verse
Category
Obedience, Devil, Advice

கத்தோலிக்க
திருவிவிலியம்
அலகையின் ஏமாற்று வழிகளை எதிர்த்து நிற்கும் வலிமை பெறும்படி கடவுள் அருளும் எல்லாப் படைக்கலன்களையும் அணிந்து கொள்ளுங்கள்.

எபேசியர் 6:11

பிரிவினைச்
சபை பைபிள்
நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.

எபேசியர் 6:11

Catholic
Bible
Put on the armor of God so that you may be able to stand firm against the tactics of the devil.

Ephesians 6:11

Protestant
Bible
Put on the whole armour of God, that ye may be able to stand against the wiles of the devil.

Ephesians 6:11

திருவசன
கருத்து
அறிவுரை, வலிமை , பிசாசு
Verse
Category
Advice, Brave, Devil

கத்தோலிக்க
திருவிவிலியம்
இறுதியாக, நீங்கள் ஆண்டவரோடு இணைந்து, அவர் தரும் வலிமையாலும் ஆற்றலாலும் வலுவூட்டப் பெறுங்கள். அலகையின் ஏமாற்று வழிகளை எதிர்த்து நிற்கும் வலிமை பெறும்படி கடவுள் அருளும் எல்லாப் படைக்கலன்களையும் அணிந்து கொள்ளுங்கள்

எபேசியர் 6:10

பிரிவினைச்
சபை பைபிள்
கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள். நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.

எபேசியர் 6:10

Catholic
Bible
Finally, draw your strength from the Lord and from his mighty power. Put on the armor of God so that you may be able to stand firm against the tactics of the devil.

Ephesians 6:10

Protestant
Bible
Finally, my brethren, be strong in the Lord, and in the power of his might. Put on the whole armour of God, that ye may be able to stand against the wiles of the devil.

Ephesians 6:10

திருவசன
கருத்து
பிசாசு, கடவுளின் கொடை, ஆறுதல்
Verse
Category
Devil, Gods Gift, Comfort

கத்தோலிக்க
திருவிவிலியம்
தீமை உங்களை வெல்லவிடாதீர்கள், நன்மையால் தீமையை வெல்லுங்கள்!

உரோமையர் 12:21

பிரிவினைச்
சபை பைபிள்
நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.

ரோமர் 12:21

Catholic
Bible
Do not be conquered by evil but conquer evil with good.

Romans 12:21

Protestant
Bible
Be not overcome of evil, but overcome evil with good.

Romans 12:21

திருவசன
கருத்து
ஆறுதல், பிசாசு
Verse
Category
Comfort, Devil

கத்தோலிக்க
திருவிவிலியம்
நற்செயல் செய்வோர் ஆள்வோருக்கு அஞ்ச வேண்டியதில்லை: தீச்செயல் செய்வோரே அஞ்ச வேண்டும். அதிகாரிகளுக்கு அஞ்சாமல் நீங்கள் வாழ விரும்பினால் நன்மை செய்யுங்கள்: அப்போது அவர்களிடமிருந்து உங்களுக்குப் பாராட்டுக் கிடைக்கும்.

உரோமையர் 13:3

பிரிவினைச்
சபை பைபிள்
மேலும் அதிகாரிகள் நற்கிரியைகளுக்கல்ல, துர்க்கிரியைகளுக்கே பயங்கரமாயிருக்கிறார்கள்; ஆகையால் நீ அதிகாரத்திற்குப் பயப்படாதிருக்கவேண்டுமானால், நன்மைசெய், அதினால் உனக்குப் புகழ்ச்சி உண்டாகும்.

ரோமர் 13:3

Catholic
Bible
For rulers are not a cause of fear to good conduct, but to evil.Do you wish to have no fear of authority Then do what is good and you will receive approval from it,

Romans 13:3

Protestant
Bible
For rulers are not a terror to good works, but to the evil. Wilt thou then not be afraid of the power do that which is good, and thou shalt have praise of the same:

Romans 13:3

திருவசன
கருத்து
ஆசீர்வாதம், அறிவுரை, பிசாசு, பயம்
Verse
Category
Blessings, Advice, Devil, Fear