திருவசன வகைகள்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.

S.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை
கத்தோலிக்க
திருவிவிலியம்
நம்பிக்கையோடு இறைவனிடம் வேண்டும்போது நோயுற்றவர் குணமாவார். ஆண்டவர் அவரை எழுப்பி விடுவார். அவர் பாவம் செய்திருந்தால் மன்னிப்புப் பெறுவார்.

யாக்கோபு 5:15

பிரிவினைச்
சபை பைபிள்
அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்.

யாக்கோபு 5:15

Catholic
Bible
and the prayer of faith will save the sick person, and the Lord will raise him up. If he has committed any sins, he will be forgiven.

James 5:15

Protestant
Bible
And the prayer of faith shall save the sick, and the Lord shall raise him up; and if he have committed sins, they shall be forgiven him.

James 5:15

திருவசன
கருத்து
பாவம், ஜெபம், நம்பிக்கை, பாவ மன்னிப்பு
Verse
Category
Sin, Prayer, Hope, Forgiven

கத்தோலிக்க
திருவிவிலியம்
கிறிஸ்து இரத்தம் சிந்தி தம் அருள்வளத்திற்கு ஏற்ப நமக்கு மீட்பு அளித்துள்ளார்: இம்மீட்பால் குற்றங்களிலிருந்து நாம் மன்னிப்புப் பெறுகிறோம்.

எபேசியர் 1:7

பிரிவினைச்
சபை பைபிள்
அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே, இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.

எபேசியர் 1:7

Catholic
Bible
In whom we have redemption through his blood, the remission of sins, according to the riches of his grace,

Ephesians 1:7

Protestant
Bible
In him we have redemption through his blood, the forgiveness of our trespasses, according to the riches of his grace,

Ephesians 1:7

திருவசன
கருத்து
அருள்(கிருபை), பாவ மன்னிப்பு
Verse
Category
Grace, Forgiven

கத்தோலிக்க
திருவிவிலியம்
ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள். ஒருவரைப்பற்றி ஒருவருக்கு ஏதாவது முறையீடு இருந்தால் மன்னியுங்கள். ஆண்டவர் உங்களை மன்னித்தது போல நீங்களும் மன்னிக்க வேண்டும்.

கொலோசையர் 3:13

பிரிவினைச்
சபை பைபிள்
ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.

கொலோசெயர் 3:13

Catholic
Bible
bearing with one another and forgiving one another, if one has a grievance against another; as the Lord has forgiven you, so must you also do

Colossians 3:13

Protestant
Bible
Forbearing one another, and forgiving one another, if any man have a quarrel against any: even as Christ forgave you, so also do ye.

Colossians 3:13

திருவசன
கருத்து
அறிவுரை, பாவ மன்னிப்பு
Verse
Category
Advice, Forgiven