திருவசன வகைகள்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.

S.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை
கத்தோலிக்க
திருவிவிலியம்
அவர், பையன்மேல் கை வைக்காதே: அவனுக்கு எதுவும் செய்யாதே: உன் ஒரே மகனையும் எனக்குப் பலியிட நீ தயங்கவில்லை என்பதிலிருந்து நீ கடவுளுக்கு அஞ்சுபவன் என்று இப்போது நான் அறிந்து கொண்டேன் என்றார்.

தொடக்கநூல் 22:12

பிரிவினைச்
சபை பைபிள்
அப்பொழுது அவர்: பிள்ளையாண்டான்மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே; நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக்கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார்.

ஆதியாகமம் 22:12

Catholic
Bible
"Do not lay your hand on the boy," said the messenger. "Do not do the least thing to him. I know now how devoted you are to God, since you did not withhold from me your own beloved son."

Genesis 22:12

Protestant
Bible
And he said, Lay not thine hand upon the lad, neither do thou any thing unto him: for now I know that thou fearest God, seeing thou hast not withheld thy son, thine only son from me.

Genesis 22:12

திருவசன
கருத்து
கர்த்தருக்கு பயப்படுகிற பயம் , கடவுளுடைய மனிதர்கள்
Verse
Category
God Fearing, Gods Men

கத்தோலிக்க
திருவிவிலியம்
உன் செல்வத்தைக்கொண்டு அவரைப் போற்று: உன் விளைச்சல்கள் எல்லாவற்றின் முதற்பலனையும் ஆண்டவருக்குக் காணிக்கையாக்கு

நீதி மொழிகள் 3:9

பிரிவினைச்
சபை பைபிள்
உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு.

நீதி மொழிகள் 3:9

Catholic
Bible
Honor the LORD with your wealth, with first fruits of all your produce;

The Proverbs 3:9

Protestant
Bible
Honour the LORD with thy substance, and with the firstfruits of all thine increase:

The Proverbs 3:9

திருவசன
கருத்து
அறிவுரை, ஆசீர்வாதம், கர்த்தருக்கு பயப்படுகிற பயம் , நன்றி
Verse
Category
Advice, Blessings, God Fearing, Thanksgiving

கத்தோலிக்க
திருவிவிலியம்
நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல: அவை அனைத்தினின்றும் ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார்

திருப்பாடல்கள் 34:19

பிரிவினைச்
சபை பைபிள்
நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்.

சங்கீதம் 34:19

Catholic
Bible
Many are the troubles of the just, but the LORD delivers from them all.

Psalms 34:19

Protestant
Bible
Many are the afflictions of the righteous: but the LORD delivereth him out of them all.

Psalms 34:19

திருவசன
கருத்து
கடவுளின் மக்கள், கர்த்தருக்கு பயப்படுகிற பயம்
Verse
Category
Chosen People, God Fearing

கத்தோலிக்க
திருவிவிலியம்
என் தலைவர் கட்டளையிடாமல், யார் தாம் சொல்லியரை நிறைவேற்றக்கூடும்

புலம்பல் 3:37

பிரிவினைச்
சபை பைபிள்
ஆண்டவர் கட்டளையிடாதிருக்கக் காரியம் சம்பவிக்கும் என்று சொல்லுகிறவன் யார்

புலம்பல் 3:37

Catholic
Bible
Who commands so that it comes to pass, except the Lord ordains it;

Lamentations 3:37

Protestant
Bible
Who is he that saith, and it cometh to pass, when the Lord commandeth it not

Lamentations 3:37

திருவசன
கருத்து
துணிவு, கர்த்தருக்கு பயப்படுகிற பயம்
Verse
Category
Confident, God Fearing

கத்தோலிக்க
திருவிவிலியம்
அவர் மானிடர்க்குக் கூறினார்: ஆண்டவர்க்கு அஞ்சுங்கள்: அதுவே ஞானம்: தீமையை விட்டு விலகுங்கள்: அதுவே அறிவு.

யோபு 28:28

பிரிவினைச்
சபை பைபிள்
மனுஷனை நோக்கி: இதோ, ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம்; பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி என்றார் என்று சொன்னான்.

யோபு 28:28

Catholic
Bible
And to man he said: Behold, the fear of the LORD is wisdom; and avoiding evil is understanding.

Job 28:28

Protestant
Bible
And unto man he said, Behold, the fear of the Lord, that is wisdom; and to depart from evil is understanding.

Job 28:28

திருவசன
கருத்து
அறிவுரை, கர்த்தருக்கு பயப்படுகிற பயம் , ஞானம்
Verse
Category
Advice, God Fearing, Wisdom