திருவசன வகைகள்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.

S.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை
கத்தோலிக்க
திருவிவிலியம்
ஏனெனில் ஞானத்தை அளிப்பவர் ஆண்டவரே, அறிவிற்கும் விவேகத்திற்கும் ஊற்றானவர் அவரே.

நீதி மொழிகள் 2:6

பிரிவினைச்
சபை பைபிள்
கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும்.

நீதி மொழிகள் 2:6

Catholic
Bible
For the LORD gives wisdom, from his mouth come knowledge and understanding;

The Proverbs 2:6

Protestant
Bible
For the LORD giveth wisdom: out of his mouth cometh knowledge and understanding.

The Proverbs 2:6

திருவசன
கருத்து
கடவுளின் பண்புகள், ஞானம்
Verse
Category
God Attributes, Wisdom

கத்தோலிக்க
திருவிவிலியம்
தன் சொந்தக் கருத்தையே நம்பி வாழ்பவன் முட்டாள்: ஞானிகளின் நெறியில் நடப்பவரோ தீங்கினின்று விடுவிக்கப்படுவர்.

நீதி மொழிகள் 28:26

பிரிவினைச்
சபை பைபிள்
தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்; ஞானமாய் நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான்.

நீதி மொழிகள் 28:26

Catholic
Bible
He who trusts in himself is a fool, but he who walks in wisdom is safe.

The Proverbs 28:26

Protestant
Bible
He that trusteth in his own heart is a fool: but whoso walketh wisely, he shall be delivered.

The Proverbs 28:26

திருவசன
கருத்து
அறிவுரை, ஞானம், இரட்சிப்பு
Verse
Category
Advice, Wisdom, Deliver

கத்தோலிக்க
திருவிவிலியம்
ஞானமுள்ளோர் இவற்றைக் கேட்டு அறிவில் இன்னும் தேர்ச்சியடைவர்: விவேகிகள் அறிவுரை கூறும் திறமை பெறுவர்

நீதி மொழிகள் 1:5

பிரிவினைச்
சபை பைபிள்
புத்திமான் இவைகளைக் கேட்டு, அறிவில் தேறுவான்; விவேகி நல்லாலோசனைகளை அடைந்து;

நீதி மொழிகள் 1:5

Catholic
Bible
A wise man by hearing them will advance in learning, an intelligent man will gain sound guidance,

The Proverbs 1:5

Protestant
Bible
A wise man will hear, and will increase learning; and a man of understanding shall attain unto wise counsels:

The Proverbs 1:5

திருவசன
கருத்து
அறிவுரை, ஞானம்
Verse
Category
Advice, Wisdom

கத்தோலிக்க
திருவிவிலியம்
ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம்: ஞானத்தையும் நற்பயிற்சியையும் மூடரே அவமதிப்பர்

நீதி மொழிகள் 1:7

பிரிவினைச்
சபை பைபிள்
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள்

நீதி மொழிகள் 1:7

Catholic
Bible
The fear of the LORD is the beginning of knowledge; wisdom and instruction fools despise.

The Proverbs 1:7

Protestant
Bible
The fear of the LORD is the beginning of knowledge: but fools despise wisdom and instruction.

The Proverbs 1:7

திருவசன
கருத்து
அறிவுரை, ஆசீர்வாதம், ஞானம்
Verse
Category
Advice, Blessings, Wisdom

கத்தோலிக்க
திருவிவிலியம்
ஞானத்தை தேடி அடைந்தோர் நற்பேறு பெற்றோர்: மெய்யறிவை அடைந்தோர் நற்பேறு பெற்றோர்:

நீதி மொழிகள் 3:13

பிரிவினைச்
சபை பைபிள்
ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள்.

நீதி மொழிகள் 3:13

Catholic
Bible
Happy the man who finds wisdom, the man who gains understanding!

The Proverbs 3:13

Protestant
Bible
Happy is the man that findeth wisdom, and the man that getteth understanding.

The Proverbs 3:13

திருவசன
கருத்து
அறிவுரை, ஆசீர்வாதம், வாக்குறுதி, ஞானம்
Verse
Category
Advice, Blessings, Promise, Wisdom