திருவசன வகைகள்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.

S.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை
கத்தோலிக்க
திருவிவிலியம்
அவர் பலியாகப் படைத்த இரத்தம் வெள்ளாட்டுக் கிடாய்கள், கன்றுக்குட்டிகள் ஆகியவற்றின் இரத்தம் அல்ல, அவரது சொந்த இரத்தமே. அவர் ஒரே ஒருமுறை தூயகத்திற்குள் சென்று எக்காலத்திற்குமென அதைப் படைத்து நமக்கு என்றுமுள்ள மீட்பு கிடைக்கும்படி செய்தார்.

எபிரேயர் 9:12

பிரிவினைச்
சபை பைபிள்
வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்.

எபிரெயர் 9:12

Catholic
Bible
He entered once for all into the sanctuary, not with the blood of goats and calves but with his own blood, thus obtaining eternal redemption.

Hebrews 9:12

Protestant
Bible
Neither by the blood of goats and calves, but by his own blood he entered in once into the holy place, having obtained eternal redemption for us

Hebrews 9:12

திருவசன
கருத்து
ஆலயம், மீட்பு
Verse
Category
Church, Redemption

கத்தோலிக்க
திருவிவிலியம்
'இந்தக் கோவிலின் முன்னைய மாட்சியைவிடப் பின்னைய மாட்சி மிகுதியாய் இருக்கும்', என்கிறார் படைகளின் ஆண்டவர். 'இந்த இடத்தில் நான் நலம் நல்குவேன்', என்கிறார் படைகளின் ஆண்டவர்."

ஆகாய் 2:9

பிரிவினைச்
சபை பைபிள்
முந்தின ஆலயத்தின் மகிமையைப் பார்க்கிலும், இந்தப் பிந்தின ஆலயத்தின் மகிமை பெரிதாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; இவ்விடத்திலே சமாதானத்தைக் கட்டளையிடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

ஆகாய் 2:9

Catholic
Bible
Greater will be the glory of this housed the latter more than the former—says the LORD of hosts; And in this place I will give you peace—* oracle of the LORD of hosts.

Haggai 2:9

Protestant
Bible
The glory of this latter house shall be greater than of the former, saith the LORD of hosts: and in this place will I give peace, saith the LORD of hosts.

Haggai 2:9

திருவசன
கருத்து
ஆலயம், ஆறுதல், துணிவு, ஆசீர்வாதம்
Verse
Category
Church, Comfort, Confident, Blessings

கத்தோலிக்க
திருவிவிலியம்
எனவே, மலைக்குச் சென்று மரம் கொண்டு வாருங்கள்; என் இல்லத்தை மீண்டும் கட்டியெழுப்புங்கள்; அது எனக்கு உகந்ததாய் இருக்கும்; அங்கே நான் மாட்சியுடன் விளங்குவேன்' என்று சொல்கிறார் ஆண்டவர். மிகுதியான அறுவடைக்காகக் காத்திருந்தீர்கள்.

ஆகாய் 1:8

பிரிவினைச்
சபை பைபிள்
நீங்கள் மலையின்மேல் ஏறிப்போய், மரங்களை கொண்டுவந்து, ஆலயத்தைக் கட்டுங்கள்; அதின்பேரில் நான் பிரியமாயிருப்பேன், அதில் என் மகிமை விளங்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஆகாய் 1:8

Catholic
Bible
Go up into the hill country; bring timber, and build the house that I may be pleased with it, and that I may be glorified,* says the LORD.

Haggai 1:8

Protestant
Bible
Go up to the mountain, and bring wood, and build the house; and I will take pleasure in it, and I will be glorified, saith the LORD.

Haggai 1:8

திருவசன
கருத்து
ஆலயம், ஆசீர்வாதம், ஆறுதல்
Verse
Category
Church, Blessings, Comfort

கத்தோலிக்க
திருவிவிலியம்
அவர்கள், திருத்தூதர் கற்பித்தவற்றிலும் நட்புறவிலும் அப்பம் பிடுவதலும் இறைவேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருந்தார்கள். மக்கள் அனைவரிடமும் அச்சம் நிலவியது.

திருத்தூதர் பணிகள் 2:42

பிரிவினைச்
சபை பைபிள்
அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகைகள் 2:42

Catholic
Bible
They devoted themselves to the teaching of the apostles and to the communal life, to the breaking of the bread and to the prayers

Acts of Apostles 2:42

Protestant
Bible
And they continued stedfastly in the apostles' doctrine and fellowship, and in breaking of bread, and in prayers.

Acts of Apostles 2:42

திருவசன
கருத்து
கடவுளின் மக்கள், ஆசீர்வாதம், ஆலயம்
Verse
Category
Chosen People, Blessings, Church

கத்தோலிக்க
திருவிவிலியம்
தமது சொந்த இரத்தத்தால் தமதாக்கிக் கொண்ட கடவுளின் திருச்சபையை மேய்ப்பதற்கு தூய ஆவியார் உங்களைக் கண்காணிப்பாளராக ஏற்படுத்தியுள்ளதால் உங்களையும், மந்தை முழுவதையும் கவனமுடன் காத்துக்கொள்ளுங்கள்.

திருத்தூதர் பணிகள் 20:28

பிரிவினைச்
சபை பைபிள்
ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகைகள் 20:28

Catholic
Bible
Keep watch over yourselves and over the whole flock of which the holy Spirit has appointed you overseers,* in which you tend the church of God that he acquired with his own blood

Acts of Apostles 20:28

Protestant
Bible
Take heed therefore unto yourselves, and to all the flock, over the which the Holy Ghost hath made you overseers, to feed the church of God, which he hath purchased with his own blood.

Acts of Apostles 20:28

திருவசன
கருத்து
ஆலயம், கடவுளின் மக்கள், பரிசுத்த ஆவி
Verse
Category
Church, Chosen People, Holy Sprit