திருவசன வகைகள்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.

S.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை
கத்தோலிக்க
திருவிவிலியம்
நீங்கள் வேண்டியமட்டும் உண்டு நிறைவடைவீர்கள்: உங்களை வியத்தகு முறையில் நடத்தி வந்த உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் பெயரைப் போற்றுவீர்கள்: இனிமேல் என் மக்கள் ஒருபோதும் நிந்தைக்கு உள்ளாகமாட்டார்கள்

யோவேல் 2:26

பிரிவினைச்
சபை பைபிள்
நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை.

யோவேல் 2:26

Catholic
Bible
You shall eat and be filled, and shall praise the name of the LORD, your God, Because he has dealt wondrously with you; my people shall nevermore be put to shame.

Joel 2:26

Protestant
Bible
And ye shall eat in plenty, and be satisfied, and praise the name of the LORD your God, that hath dealt wondrously with you: and my people shall never be ashamed.

Joel 2:26

திருவசன
கருத்து
ஆசீர்வாதம், ஆறுதல், போற்றுதல்
Verse
Category
Blessings, Comfort, Praise

கத்தோலிக்க
திருவிவிலியம்
எளியோர் உணவு உண்டு நிறைவு பெறுவர்: ஆண்டவரை நாடுவோர் அவரைப் புகழ்வராக! அவர்கள் இதயம் என்றென்றும் வாழ்வதாக!

திருப்பாடல்கள் 22:26

பிரிவினைச்
சபை பைபிள்
சாந்தகுணமுள்ளவர்கள் புசித்துத்திருப்தியடைவார்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்கள் அவரைத் துதிப்பார்கள்; உங்கள் இருதயம் என்றென்றைக்கும் வாழும்

சங்கீதம் 22:26

Catholic
Bible
The poor will eat their fill; those who seek the LORD will offer praise. May your hearts enjoy life forever!"

Psalms 22:26

Protestant
Bible
The meek shall eat and be satisfied: they shall praise the LORD that seek him: your heart shall live for ever.

Psalms 22:26

திருவசன
கருத்து
ஆசீர்வாதம், ஆறுதல், போற்றுதல்
Verse
Category
Blessings, Comfort, Praise

கத்தோலிக்க
திருவிவிலியம்
தூதர்களே, நீங்கள் யாவரும் அவரைப் போற்றுங்கள்: அவருடைய படைகளே, நீங்கள் யாவரும் அவரைப் போற்றுங்கள்.

திருப்பாடல்கள் 148:2

பிரிவினைச்
சபை பைபிள்
அவருடைய தூதர்களே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள்; அவருடைய சேனைகளே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள்.

சங்கீதம் 148:2

Catholic
Bible
Praise him, all you angels; give praise, all you hosts.

Psalms 148:2

Protestant
Bible
Praise ye him, all his angels: praise ye him, all his hosts.

Psalms 148:2

திருவசன
கருத்து
போற்றுதல், வழிபாடு
Verse
Category
Praise, Worship

கத்தோலிக்க
திருவிவிலியம்
அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்

திருப்பாடல்கள் 100:1

பிரிவினைச்
சபை பைபிள்
பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடுங்கள்

சங்கீதம் 100:1

Catholic
Bible
Shout joyfully to the LORD, all you lands

Psalms 100:1

Protestant
Bible
Make a joyful noise unto the LORD, all ye lands

Psalms 100:1

திருவசன
கருத்து
போற்றுதல்
Verse
Category
Praise

கத்தோலிக்க
திருவிவிலியம்
நன்றியோடு அவர்தம் திருவாயில்களில் நுழையுங்கள்! புகழ்ப்பாடலோடு அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள்! அவருக்கு நன்றி செலுத்தி, அவர் பெயரைப் போற்றுங்கள்

திருப்பாடல்கள் 100:4

பிரிவினைச்
சபை பைபிள்
நன்றியோடு அவர்தம் திருவாயில்களில் நுழையுங்கள்! புகழ்ப்பாடலோடு அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள்! அவருக்கு நன்றி செலுத்தி, அவர் பெயரைப் போற்றுங்கள்

சங்கீதம் 100:4

Catholic
Bible
Enter the temple gates with praise, its courts with thanksgiving. Give thanks to God, bless his name

Psalms 100:4

Protestant
Bible
Enter the temple gates with praise, its courts with thanksgiving. Give thanks to God, bless his name;

Psalms 100:4

திருவசன
கருத்து
நன்றி, போற்றுதல்
Verse
Category
Thanksgiving, Praise