திருவசன வகைகள்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.

S.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை
கத்தோலிக்க
திருவிவிலியம்
நீங்கள் பிள்ளைகளாய் இருப்பதால் கடவுள் தம் மகனின் ஆவியை உங்கள் உள்ளங்களுக்குள் அனுப்பியுள்ளார்: அந்த ஆவி 'அப்பா, தந்தையே', எனக் கூப்பிடுகிறது.

கலாத்தியர் 4:6

பிரிவினைச்
சபை பைபிள்
மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்.

கலாத்தியர் 4:6

Catholic
Bible
As proof that you are children, 4 God sent the spirit of his Son into our hearts, crying out, "Abba, Father!"

Galatians 4:6

Protestant
Bible
And because ye are sons, God hath sent forth the Spirit of his Son into your hearts, crying, Abba, Father.

Galatians 4:6

திருவசன
கருத்து
ஆறுதல், பரிசுத்த ஆவி
Verse
Category
Comfort, Holy Sprit

கத்தோலிக்க
திருவிவிலியம்
அமைதி அருளும் கடவுள்தாமே உங்களை முற்றிலும் தூய்மையாக்குவாராக. அவரே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வரும்போது உங்களுடைய உள்ளம், ஆன்மா, உடல் அனைத்தையும் குற்றமின்றி முழமையாகக் காப்பாராக!

1 தெசலோனிக்கர் 5:23

பிரிவினைச்
சபை பைபிள்
சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக, உங்கள் ஆவி ஆத்துமா சரீரம்முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.

1 தெசலோனிக்கேயர் 5:23

Catholic
Bible
May the God of peace himself make you perfectly holy and may you entirely, spirit, soul, and body, be preserved blameless for the coming of our Lord Jesus Christ.

1 Thessalonians 5:23

Protestant
Bible
And the very God of peace sanctify you wholly; and I pray God your whole spirit and soul and body be preserved blameless unto the coming of our Lord Jesus Christ.

1 Thessalonians 5:23

திருவசன
கருத்து
அறிவுரை, ஆசீர்வாதம், ஆறுதல், மன அமைதி, பரிசுத்த ஆவி
Verse
Category
Advice, Blessings, Comfort, Peace of Mind, Holy Sprit

கத்தோலிக்க
திருவிவிலியம்
தந்தையிடமிருந்து நான் உங்களுக்கு அனுப்பப் போகிற துணையாளர் வருவார். அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். அவர் வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார்.

யோவான் நற்செய்தி 15:26

பிரிவினைச்
சபை பைபிள்
பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சிகொடுப்பார்.

யோவான் 15:26

Catholic
Bible
When the Advocate comes whom I will send 12 you from the Father, the Spirit of truth that proceeds from the Father, he will testify to me.

John 15:26

Protestant
Bible
But when the Comforter is come, whom I will send unto you from the Father, even the Spirit of truth, which proceedeth from the Father, he shall testify of me:

John 15:26

திருவசன
கருத்து
ஆறுதல், பரிசுத்த ஆவி
Verse
Category
Comfort, Holy Sprit

கத்தோலிக்க
திருவிவிலியம்
பொது நன்மைக்காகவே தூய ஆவியாரின் செயல்பாடுகள் ஒவ்வொருவரிலும் வெளிப்படுகிறது.

1 கொரிந்தியர் 12:7

பிரிவினைச்
சபை பைபிள்
ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது.

1 கொரிந்தியர் 12:7

Catholic
Bible
To each individual the manifestation of the Spirit is given for some benefit.

1 Corinthians 12:7

Protestant
Bible
But the manifestation of the Spirit is given to every man to profit withal.

1 Corinthians 12:7

திருவசன
கருத்து
பரிசுத்த ஆவி
Verse
Category
Holy Sprit

கத்தோலிக்க
திருவிவிலியம்
உங்களோடு என்றும் இருக்கும் படி மற்றொரு துணையாளரை உங்களுக்கத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார்.

யோவான் நற்செய்தி 14:16

பிரிவினைச்
சபை பைபிள்
நான் பிதாவை வேண்டிக்கொள்வேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.

யோவான் 14:16

Catholic
Bible
And I will ask the Father, and he will give you another Advocate 8 to be with you always,

John 14:16

Protestant
Bible
And I will pray the Father, and he shall give you another Comforter, that he may abide with you for ever;

John 14:16

திருவசன
கருத்து
ஆறுதல், பரிசுத்த ஆவி
Verse
Category
Comfort, Holy Sprit