திருவசன வகைகள்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.

S.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை
கத்தோலிக்க
திருவிவிலியம்
அவர் பலியாகப் படைத்த இரத்தம் வெள்ளாட்டுக் கிடாய்கள், கன்றுக்குட்டிகள் ஆகியவற்றின் இரத்தம் அல்ல, அவரது சொந்த இரத்தமே. அவர் ஒரே ஒருமுறை தூயகத்திற்குள் சென்று எக்காலத்திற்குமென அதைப் படைத்து நமக்கு என்றுமுள்ள மீட்பு கிடைக்கும்படி செய்தார்.

எபிரேயர் 9:12

பிரிவினைச்
சபை பைபிள்
வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்.

எபிரெயர் 9:12

Catholic
Bible
He entered once for all into the sanctuary, not with the blood of goats and calves but with his own blood, thus obtaining eternal redemption.

Hebrews 9:12

Protestant
Bible
Neither by the blood of goats and calves, but by his own blood he entered in once into the holy place, having obtained eternal redemption for us

Hebrews 9:12

திருவசன
கருத்து
ஆலயம், மீட்பு
Verse
Category
Church, Redemption

கத்தோலிக்க
திருவிவிலியம்
ஏனெனில், தீர்ப்புக்கான காலம் கடவுளின் வீட்டாரிடத்தில் தொடங்கிவிட்டது. நம்மிடையே அது முதலில் தொடங்குகிறதென்றால், கடவுளின் நற்செய்தியை ஏற்காதவர்களின் முடிவு என்னவாகும்

1 பேதுரு 4:17

பிரிவினைச்
சபை பைபிள்
நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது; முந்தி நம்மிடத்திலே அது துவக்கினால் தேவனுடைய சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னமாயிருக்கும்

1 பேதுரு 4:17

Catholic
Bible
For it is time for the judgment to begin with the household of God; if it begins with us, how will it end for those who fail to obey the gospel of God

1 Peter 4:17

Protestant
Bible
For the time is come that judgment must begin at the house of God: and if it first begin at us, what shall the end be of them that obey not the gospel of God

1 Peter 4:17

திருவசன
கருத்து
மீட்பு, இறுதி தீர்ப்பு
Verse
Category
Redemption, Judgement