திருவசன வகைகள்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.

S.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை
கத்தோலிக்க
திருவிவிலியம்
நன்றியோடு அவர்தம் திருவாயில்களில் நுழையுங்கள்! புகழ்ப்பாடலோடு அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள்! அவருக்கு நன்றி செலுத்தி, அவர் பெயரைப் போற்றுங்கள்

திருப்பாடல்கள் 100:4

பிரிவினைச்
சபை பைபிள்
நன்றியோடு அவர்தம் திருவாயில்களில் நுழையுங்கள்! புகழ்ப்பாடலோடு அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள்! அவருக்கு நன்றி செலுத்தி, அவர் பெயரைப் போற்றுங்கள்

சங்கீதம் 100:4

Catholic
Bible
Enter the temple gates with praise, its courts with thanksgiving. Give thanks to God, bless his name

Psalms 100:4

Protestant
Bible
Enter the temple gates with praise, its courts with thanksgiving. Give thanks to God, bless his name;

Psalms 100:4

திருவசன
கருத்து
நன்றி, போற்றுதல்
Verse
Category
Thanksgiving, Praise

கத்தோலிக்க
திருவிவிலியம்
ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்: உலகின் எல்லையெங்கும் அவர் புகழ்ப் பாடுங்கள்: கடலில் பயணம் செய்வோரே, கடல்வாழ் உயிரினங்களே, தீவு நாடுகளே, அவற்றில் குடியிருப்போரே, அவரைப் போற்றுங்கள்.

எசாயா 42:10

பிரிவினைச்
சபை பைபிள்
சமுத்திரத்தில் யாத்திரைபண்ணுகிறவர்களே, அதிலுள்ளவைகளே, தீவுகளே அவைகளின் குடிகளே, கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பூமியின் கடையாந்தரத்திலிருந்து அவருடைய துதியைப் பாடுங்கள்.

ஏசாயா 42:10

Catholic
Bible
Sing to the LORD a new song, his praise from the end of the earth: Let the sea and what fills it resound, the coastlands, and those who dwell in them.

Isaiah 42:10

Protestant
Bible
Sing unto the LORD a new song, and his praise from the end of the earth, ye that go down to the sea, and all that is therein; the isles, and the inhabitants thereof.

Isaiah 42:10

திருவசன
கருத்து
தீர்க்கதரிசிசன திருவசனம், வழிபாடு, நன்றி
Verse
Category
Prophetic Words, Worship, Thanksgiving

கத்தோலிக்க
திருவிவிலியம்
உன் செல்வத்தைக்கொண்டு அவரைப் போற்று: உன் விளைச்சல்கள் எல்லாவற்றின் முதற்பலனையும் ஆண்டவருக்குக் காணிக்கையாக்கு

நீதி மொழிகள் 3:9

பிரிவினைச்
சபை பைபிள்
உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு.

நீதி மொழிகள் 3:9

Catholic
Bible
Honor the LORD with your wealth, with first fruits of all your produce;

The Proverbs 3:9

Protestant
Bible
Honour the LORD with thy substance, and with the firstfruits of all thine increase:

The Proverbs 3:9

திருவசன
கருத்து
அறிவுரை, ஆசீர்வாதம், கர்த்தருக்கு பயப்படுகிற பயம் , நன்றி
Verse
Category
Advice, Blessings, God Fearing, Thanksgiving

கத்தோலிக்க
திருவிவிலியம்
ஆண்டவருக்கு நன்றி செலுத்திப் பாடுங்கள்; நம் கடவுளை யாழ்கொண்டு புகழ்ந்து பாடுங்கள்.

திருப்பாடல்கள் 147:7

பிரிவினைச்
சபை பைபிள்
கர்த்தரைத் துதியுடன் பாடிக்கொண்டாடுங்கள்; நம்முடைய தேவனைச் சுரமண்டலத்தால் கீர்த்தனம் பண்ணுங்கள்.

சங்கீதம் 147:7

Catholic
Bible
Sing to the LORD with thanksgiving; with the lyre celebrate our God

Psalms 147:7

Protestant
Bible
Sing unto the LORD with thanksgiving; sing praise upon the harp unto our God

Psalms 147:7

திருவசன
கருத்து
நன்றி, வழிபாடு
Verse
Category
Thanksgiving, Worship

கத்தோலிக்க
திருவிவிலியம்
என் நெஞ்சே! நீ நம்பிக்கை இழப்பது ஏன் நீ கலக்கமுறுவது ஏன் கடவுளையே நம்பியிரு. என் மீட்பராம் கடவுளை இன்னும் நான் போற்றுவேன். என் கடவுளின் மீட்புச் செயல்களை முன்னிட்டு இன்னும் நான் அவருக்கு நன்றி செலுத்துவேன்.

திருப்பாடல்கள் 42:11

பிரிவினைச்
சபை பைபிள்
என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய் ஏன் எனக்குள் தியங்குகிறாய் தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்.

சங்கீதம் 42:11

Catholic
Bible
Why are you downcast, my soul, why do you groan within me Wait for God, whom I shall praise again, my savior and my God.

Psalms 42:11

Protestant
Bible
Why art thou cast down, O my soul and why art thou disquieted within me hope thou in God: for I shall yet praise him, who is the health of my countenance, and my God.

Psalms 42:11

திருவசன
கருத்து
நம்பிக்கை, நன்றி, போற்றுதல்
Verse
Category
Hope, Thanksgiving, Praise