திருவசன வகைகள்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.

S.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை
கத்தோலிக்க
திருவிவிலியம்
யாக்கோபின் இறைவனைத் தம் துணையாகக் கொண்டிருப்போர் பேறுபெற்றோர்: தம் கடவுளாகிய ஆண்டவரையே நம்பியிருப்போர் பேறுபெற்றோர்.

திருப்பாடல்கள் 146:5

பிரிவினைச்
சபை பைபிள்
யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான்.

சங்கீதம் 146:5

Catholic
Bible
Happy those whose help is Jacob's God, whose hope is in the LORD, their God,

Psalms 146:5

Protestant
Bible
Happy is he that hath the God of Jacob for his help, whose hope is in the LORD his God:

Psalms 146:5

திருவசன
கருத்து
நம்பிக்கை, மகிழ்ச்சி
Verse
Category
Hope, Happy

கத்தோலிக்க
திருவிவிலியம்
நீதியின்பொருட்டுத் துன்புற வேண்டியிருப்பினும் நீங்கள் பேறு பெற்றவர்களே. யாருக்கும் நீங்கள் அஞ்சி நடுங்கவோ மனங்கலங்கவோ வேண்டாம்.

1 பேதுரு 3:14

பிரிவினைச்
சபை பைபிள்
நீதியினிமித்தமாக நீங்கள் பாடுபட்டால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்; அவர்களுடைய பயமுறுத்தலுக்கு நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் இருந்து,

1 பேதுரு 3:14

Catholic
Bible
But even if you should suffer because of righteousness, blessed are you. Do not be afraid or terrified with fear of them,

1 Peter 3:14

Protestant
Bible
But and if ye suffer for righteousness' sake, happy are ye: and be not afraid of their terror, neither be troubled;

1 Peter 3:14

திருவசன
கருத்து
பயம், மகிழ்ச்சி, நீதி
Verse
Category
Fear, Happy, Righteous

கத்தோலிக்க
திருவிவிலியம்
நான் உம் சொற்களைக் கண்டடைந்தேன்: அவற்றை உட்கொண்டேன்: உன் சொற்கள் எனக்கு மகிழ்ச்சி தந்தன: என் உள்ளத்திற்கு உவகை அளித்தன. ஏனெனில் படைகளின் ஆண்டவரே, உம் பெயரே எனக்கு வழங்கலாயிற்று.

எரேமியா 15:16

பிரிவினைச்
சபை பைபிள்
உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது; சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் எனக்குத் தரிக்கப்பட்டிருக்கிறது.

எரேமியா 15:16

Catholic
Bible
When I found your words, I devoured them; they became my joy and the happiness of my heart, Because I bore your name, O LORD, God of hosts.

Jeremiah 15:16

Protestant
Bible
Thy words were found, and I did eat them; and thy word was unto me the joy and rejoicing of mine heart: for I am called by thy name, O LORD God of hosts.

Jeremiah 15:16

திருவசன
கருத்து
அறிவுரை, இறை வார்த்தை, மகிழ்ச்சி
Verse
Category
Advice, Gods Words, Happy

கத்தோலிக்க
திருவிவிலியம்
எதிர்நோக்கி இருப்பதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள்: துன்பத்தில் தளரா மனத்துடன் இருங்கள்: இறைவேண்டலில் நிலைத்திருங்கள்.

உரோமையர் 12:12

பிரிவினைச்
சபை பைபிள்
நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்.

ரோமர் 12:12

Catholic
Bible
Rejoice in hope, endure in affliction, persevere in prayer.

Romans 12:12

Protestant
Bible
Rejoicing in hope; patient in tribulation; continuing instant in prayer;

Romans 12:12

திருவசன
கருத்து
அறிவுரை, நம்பிக்கை, மகிழ்ச்சி
Verse
Category
Advice, Hope, Happy

கத்தோலிக்க
திருவிவிலியம்
பெருஞ்செல்வத்தில் மகிழ்ச்சி அடைவதுபோல், நான் உம் ஒழுங்குமுறைகளின்படி நடப்பதில் மகிழ்ச்சியுறுகின்றேன்.

திருப்பாடல்கள் 119:14

பிரிவினைச்
சபை பைபிள்
திரளான செல்வத்தில் களிகூருவதுபோல, நான் உமது சாட்சிகளின் வழியில் களிகூருகிறேன்

சங்கீதம் 119:14

Catholic
Bible
I find joy in the way of your decrees more than in all riches.

Psalms 119:14

Protestant
Bible
I have rejoiced in the way of thy testimonies, as much as in all riches.

Psalms 119:14

திருவசன
கருத்து
மகிழ்ச்சி
Verse
Category
Happy