திருவசன வகைகள்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.

S.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை
கத்தோலிக்க
திருவிவிலியம்
இதனால், நாம் துணிவோடு, ஆண்டவரே எனக்குத் துணை, நான் அஞ்சமாட்டேன்: மனிதர் எனக்கு எதிராக என்ன செய்யமுடியும் என்று கூறலாம்

எபிரேயர் 13:6

பிரிவினைச்
சபை பைபிள்
அதினாலே நாம் தைரியங்கொண்டு: கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்னசெய்வான் என்று சொல்லலாமே.

எபிரெயர் 13:6

Catholic
Bible
Thus we may say with confidence: "The Lord is my helper, (and) I will not be afraid. What can anyone do to me"

Hebrews 13:6

Protestant
Bible
So that we may boldly say, The Lord is my helper, and I will not fear what man shall do unto me.

Hebrews 13:6

திருவசன
கருத்து
பயம், துணிவு
Verse
Category
Fear, Confident

கத்தோலிக்க
திருவிவிலியம்
அஞ்சாதே, நீ அவமானத்திற்குள்ளாகமாட்டாய்: வெட்கி நாணாதே, இனி நீ இழிவாக நடத்தப்படமாட்டாய்: உன் இளமையின் மானக்கேட்டை நீ மறந்துவிடுவாய்: உன் கைம்மையின் இழிநிலையை இனி நினைக்கமாட்டாய்.

எசாயா 54:4

பிரிவினைச்
சபை பைபிள்
பயப்படாதே, நீ வெட்கப்படுவதில்லை; நாணாதே, நீ இலச்சையடைவதில்லை; உன் வாலிபத்தின் வெட்கத்தை நீ மறந்து, உன் விதவையிருப்பின் நிந்தையை இனி நினையாதிருப்பாய்

ஏசாயா 54:4

Catholic
Bible
Fear not, you shall not be put to shame; you need not blush, for you shall not be disgraced. The shame of your youth you shall forget, the reproach of your widowhood no longer remember.

Isaiah 54:4

Protestant
Bible
Fear not; for thou shalt not be ashamed: neither be thou confounded; for thou shalt not be put to shame: for thou shalt forget the shame of thy youth, and shalt not remember the reproach of thy widowhood any more.

Isaiah 54:4

திருவசன
கருத்து
பயம், ஆறுதல், துணிவு
Verse
Category
Fear, Comfort, Confident

கத்தோலிக்க
திருவிவிலியம்
என் தலைவர் கட்டளையிடாமல், யார் தாம் சொல்லியரை நிறைவேற்றக்கூடும்

புலம்பல் 3:37

பிரிவினைச்
சபை பைபிள்
ஆண்டவர் கட்டளையிடாதிருக்கக் காரியம் சம்பவிக்கும் என்று சொல்லுகிறவன் யார்

புலம்பல் 3:37

Catholic
Bible
Who commands so that it comes to pass, except the Lord ordains it;

Lamentations 3:37

Protestant
Bible
Who is he that saith, and it cometh to pass, when the Lord commandeth it not

Lamentations 3:37

திருவசன
கருத்து
துணிவு, கர்த்தருக்கு பயப்படுகிற பயம்
Verse
Category
Confident, God Fearing

கத்தோலிக்க
திருவிவிலியம்
திடமும் உறுதியும் கொண்டு என் ஊழியன் மோசே கட்டளையிட்ட எல்லாச் சட்டங்களையும் கடைப்பிடிப்பதில் கவனமாயிரு. நீ அதனின்று வலப்புறமோ இடப்புறமோ திரும்பாதே. அப்பொழுதுதான் நீசெல்லும் வழியெல்லாம் வெற்றி பெறுவாய்.

யோசுவா 1:7

பிரிவினைச்
சபை பைபிள்
என் தாசனாகிய மோசே உனக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கமாத்திரம் மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு; நீ போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்துகொள்ளும்படிக்கு, அதை விட்டு வலது இடதுபுறம் விலகாதிருப்பாயாக.

யோசுவா 1:7

Catholic
Bible
Above all, be firm and steadfast, taking care to observe the entire law which my servant Moses enjoined on you. Do not swerve from it either to the right or to the left, that you may succeed wherever you go.

Joshua 1:7

Protestant
Bible
Only be thou strong and very courageous, that thou mayest observe to do according to all the law, which Moses my servant commanded thee: turn not from it to the right hand or to the left, that thou mayest prosper whithersoever thou goest.

Joshua 1:7

திருவசன
கருத்து
அறிவுரை, ஆசீர்வாதம், துணிவு, இறை வார்த்தை
Verse
Category
Advice, Blessings, Confident, Gods Words

கத்தோலிக்க
திருவிவிலியம்
ஆண்டவரே, நீர் என் விளக்குக்கு ஒளியேற்றுகின்றீர். என் கடவுளே, நீர் என் இருளை ஒளிமயமாக்குகின்றீர்.

திருப்பாடல்கள் 18:28

பிரிவினைச்
சபை பைபிள்
தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்; என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார்.

சங்கீதம் 18:28

Catholic
Bible
You, LORD, give light to my lamp; my God brightens the darkness about me.

Psalms 18:28

Protestant
Bible
For thou wilt light my candle: the LORD my God will enlighten my darkness.

Psalms 18:28

திருவசன
கருத்து
அறிவுரை, துணிவு
Verse
Category
Advice, Confident