திருவசன வகைகள்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.

S.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை
கத்தோலிக்க
திருவிவிலியம்
நீதியின்பொருட்டுத் துன்புற வேண்டியிருப்பினும் நீங்கள் பேறு பெற்றவர்களே. யாருக்கும் நீங்கள் அஞ்சி நடுங்கவோ மனங்கலங்கவோ வேண்டாம்.

1 பேதுரு 3:14

பிரிவினைச்
சபை பைபிள்
நீதியினிமித்தமாக நீங்கள் பாடுபட்டால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்; அவர்களுடைய பயமுறுத்தலுக்கு நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் இருந்து,

1 பேதுரு 3:14

Catholic
Bible
But even if you should suffer because of righteousness, blessed are you. Do not be afraid or terrified with fear of them,

1 Peter 3:14

Protestant
Bible
But and if ye suffer for righteousness' sake, happy are ye: and be not afraid of their terror, neither be troubled;

1 Peter 3:14

திருவசன
கருத்து
பயம், மகிழ்ச்சி, நீதி
Verse
Category
Fear, Happy, Righteous

கத்தோலிக்க
திருவிவிலியம்
கட்சிமனப்பான்மைக்கும் வீண் பெருமைக்கும் இடம் தர வேண்டாம். மனத் தாழ்மையோடு மற்றவர்களை உங்களிலும் உயர்ந்தவராகக் கருதுங்கள்

பிலிப்பியர் 2:3

பிரிவினைச்
சபை பைபிள்
ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்.

பிலிப்பியர் 2:3

Catholic
Bible
Do nothing out of selfishness or out of vainglory; rather, humbly regard others as more important than yourselves

Philippians 2:3

Protestant
Bible
Let nothing be done through strife or vainglory; but in lowliness of mind let each esteem other better than themselves.

Philippians 2:3

திருவசன
கருத்து
அறிவுரை, நீதி
Verse
Category
Advice, Righteous

கத்தோலிக்க
திருவிவிலியம்
இறைமகன் வந்து உண்மையான இறைவனை அறிந்து கொள்ளும் ஆற்றலை நமக்குத் தந்துள்ளார். இது நமக்குத் தெரியும். நாம் உண்மையான இறைவனோடும் அவர் மகன் இயேசுகிறிஸ்துவோடும் இணைந்து வாழ்கிறோம். இவரே உண்மைக் கடவுள். இவரே நிலைவாழ்வு.

1 யோவான் 5:20

பிரிவினைச்
சபை பைபிள்
அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்கு தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார்.

1 யோவான் 5:20

Catholic
Bible
We also know that the Son of God has come and has given us discernment to know the one who is true. And we are in the one who is true, in his Son Jesus Christ. He is the true God and eternal life.

1 John 5:20

Protestant
Bible
And we know that the Son of God is come, and hath given us an understanding, that we may know him that is true, and we are in him that is true, even in his Son Jesus Christ. This is the true God, and eternal life.

1 John 5:20

திருவசன
கருத்து
உடன்படிக்கை , அறிவுரை, இறை வார்த்தை, நீதி
Verse
Category
Covenant, Advice, Gods Words, Righteous

கத்தோலிக்க
திருவிவிலியம்
ஆனால், நான் உம்மைப் புகழ்ந்து பாடி உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்: நான் செய்த பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். மீட்பு அளிப்பவர் ஆண்டவரே என்று வேண்டிக்கொண்டார்.

யோனா 2:9

பிரிவினைச்
சபை பைபிள்
நானோவெனில் துதியின் சத்தத்தோடே உமக்குப் பலியிடுவேன்; நான் பண்ணின பொருத்தனையைச் செலுத்துவேன்; இரட்சிப்பு கர்த்தருடையது என்றான்.

யோனா 2:9

Catholic
Bible
Those who worship worthless idols abandon their hope for mercy

Jonah 2:9

Protestant
Bible
But I will sacrifice unto thee with the voice of thanksgiving; I will pay that that I have vowed. Salvation is of the LORD.

Jonah 2:9

திருவசன
கருத்து
மீட்பு, நீதி, நன்றி
Verse
Category
Salvation, Righteous, Thanksgiving

கத்தோலிக்க
திருவிவிலியம்
இறைவாக்கு உரைக்கும் ஆற்றல் எனக்கு இருப்பினும், மறைபொருள்கள் அனைத்தையும் அறிந்தவனாய் இருப்பினும், அறிவெல்லாம் பெற்றிருப்பினும், மலைகளை இடம்பெயரச் செய்யும் அளவுக்கு நிறைந்த நம்பிக்கை கொண்டிருப்பினும் என்னிடம் அன்பு இல்லையேல் நான் ஒன்றுமில்லை

1 கொரிந்தியர் 13:2

பிரிவினைச்
சபை பைபிள்
நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாக சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை.

1 கொரிந்தியர் 13:2

Catholic
Bible
And if I have the gift of prophecy and comprehend all mysteries and all knowledge; if I have all faith so as to move mountains but do not have love, I am nothing.b

1 Corinthians 13:2

Protestant
Bible
And though I have the gift of prophecy, and understand all mysteries, and all knowledge; and though I have all faith, so that I could remove mountains, and have not charity, I am nothing.

1 Corinthians 13:2

திருவசன
கருத்து
அன்பு, தாழ்ச்சி, நீதி
Verse
Category
Love, Humble, Righteous