திருவசன வகைகள்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.

S.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை
கத்தோலிக்க
திருவிவிலியம்
மோசே மக்களை நோக்கி, அஞ்சாதீர்கள்! நிலைகுலையாதீர்கள்! இன்று ஆண்டவர்தாமே உங்களுக்காக ஆற்றும் விடுதலைச் செயலைப் பாருங்கள். இன்று நீங்கள் காணும் எகிப்தியரை இனிமேல் என்றுமே காணப்போவதில்லை.

விடுதலைப்பயணம் 14:13

பிரிவினைச்
சபை பைபிள்
அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள்.

யாத்திராகமம் 14:13

Catholic
Bible
But Moses answered the people, "Fear not! Stand your ground, and you will see the victory the LORD will win for you today. These Egyptians whom you see today you will never see again.

Exodus 14:13

Protestant
Bible
And Moses said unto the people, Fear ye not, stand still, and see the salvation of the LORD, which he will show to you to day: for the Egyptians whom ye have seen to day, ye shall see them again no more for ever.

Exodus 14:13

திருவசன
கருத்து
பயம், ஆறுதல், மீட்பு
Verse
Category
Fear, Comfort, Salvation

கத்தோலிக்க
திருவிவிலியம்
அவர் நம் செயல்களை முன்னிட்டு அல்ல, காலங்களுக்கு முந்திய தமது தீர்மானத்தின்படி, கிறிஸ்து இயேசு வழியாக நமக்கு அளிக்கப்பட்ட அருளின்படி நம்மை மீட்டுள்ளார்: நமக்குத் தூய அழைப்பு விடுத்துள்ளார்.

2 திமொத்தேயு 1:9

பிரிவினைச்
சபை பைபிள்
அவர் நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்.

2 தீமோத்தேயு 1:9

Catholic
Bible
Who hath saved us, and called us with an holy calling, not according to our works, but according to his own purpose and grace, which was given us in Christ Jesus before the world began,

2 Timothy 1:9

Protestant
Bible
He saved us and called us to a holy life, not according to our works but according to his own design and the grace bestowed on us in Christ Jesus before time began,

2 Timothy 1:9

திருவசன
கருத்து
அறிவுரை, மீட்பு
Verse
Category
Advice, Salvation

கத்தோலிக்க
திருவிவிலியம்
நீ குழந்தைப் பருவம் முதல் திருமறைநூலைக் கற்று அறிந்திருக்கிறாய். அது இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையால் உன்னை மீட்புக்கு வழி நடத்தும் ஞானத்தை அளிக்க வல்லது.

2 திமொத்தேயு 3:15

பிரிவினைச்
சபை பைபிள்
கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும்.

2 தீமோத்தேயு 3:15

Catholic
Bible
and that from infancy you have known (the) sacred scriptures, which are capable of giving you wisdom for salvation through faith in Christ Jesus.

2 Timothy 3:15

Protestant
Bible
And that from a child thou hast known the holy scriptures, which are able to make thee wise unto salvation through faith which is in Christ Jesus.

2 Timothy 3:15

திருவசன
கருத்து
ஞானம், மீட்பு, நம்பிக்கை, இறை வார்த்தை
Verse
Category
Wisdom, Salvation, Trust, Gods Words

கத்தோலிக்க
திருவிவிலியம்
ஆண்டவர் என் கற்பாறை: என் கோட்டை: என் மீட்பர்: என் இறைவன்: நான் புகலிடம் தேடும் மலை அவரே: என் கேடயம், எனக்கு மீட்பளிக்கும் வல்லமை, என் அரண்.

திருப்பாடல்கள் 18:2

பிரிவினைச்
சபை பைபிள்
கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்.

சங்கீதம் 18:2

Catholic
Bible
LORD, my rock, my fortress, my deliverer, My God, my rock of refuge, my shield, my saving horn, my stronghold!

Psalms 18:2

Protestant
Bible
The LORD is my rock, and my fortress, and my deliverer; my God, my strength, in whom I will trust; my buckler, and the horn of my salvation, and my high tower.

Psalms 18:2

திருவசன
கருத்து
அறிவுரை, மீட்பு
Verse
Category
Advice, Salvation

கத்தோலிக்க
திருவிவிலியம்
ஆண்டவருக்கு ஊழியம் புரிவது தீயது என்று உங்கள் பார்வைக்குத் தோன்றினால், உங்கள் மூதாதையர் நதிக்கு அப்பால் பணிந்து வந்த தெய்வங்களுக்கோ, உங்கள் நாட்டில் உங்களுடன் வாழும் எமோரியரின் தெய்வங்களுக்கோ இவர்களுள் யாருக்கு ஊழியம் செய்வீர்கள் என்பதை நீங்களே இப்போது முடிவு செய்யுங்கள். நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம் என்றான்.

யோசுவா 24:15

பிரிவினைச்
சபை பைபிள்
கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்து கொள்ளுங்கள்; நதிக்கு அப்புறத்தில் உங்கள் பிதாக்கள் சேவித்த தேவர்களைச் சேவிப்பீர்களோ நீங்கள் வாசம்பண்ணுகிற தேசத்துக் குடிகளாகிய எமோரியரின் தேவர்களைச் சேவிப்பீர்களோ நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம் என்றான்.

யோசுவா 24:15

Catholic
Bible
If it does not please you to serve the LORD, decide today whom you will serve, the gods your fathers served beyond the River or the gods of the Amorites in whose country you are dwelling. As for me and my household, we will serve the LORD."

Joshua 24:15

Protestant
Bible
And if it seem evil unto you to serve the LORD, choose you this day whom ye will serve; whether the gods which your fathers served that were on the other side of the flood, or the gods of the Amorites, in whose land ye dwell: but as for me and my house, we will serve the LORD.

Joshua 24:15

திருவசன
கருத்து
அறிவுரை, கடவுளுடைய மனிதர்கள், மீட்பு
Verse
Category
Advice, Gods Men, Salvation