திருவசன வகைகள்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.

S.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை
கத்தோலிக்க
திருவிவிலியம்
நன்மை செய்வதில் நீங்கள் ஆர்வமுடையவர்களாய் இருந்தால், உங்களுக்குத் தீமை செய்யப்போகிறவர் யார்

1 பேதுரு 3:13

பிரிவினைச்
சபை பைபிள்
நீங்கள் நன்மையைப் பின்பற்றுகிறவர்களானால், உங்களுக்குத் தீமைசெய்கிறவன் யார்

1 பேதுரு 3:13

Catholic
Bible
Now who is going to harm you if you are enthusiastic for what is good

1 Peter 3:13

Protestant
Bible
And who is he that will harm you, if ye be followers of that which is good

1 Peter 3:13

திருவசன
கருத்து
பயம், நன்மை
Verse
Category
Fear, Good

கத்தோலிக்க
திருவிவிலியம்
கடவுள் உங்களை எல்லா நலன்களாலும் நிரப்ப வல்லவர். எந்தச் சூழ்நிலையிலும் எப்போதும் தேவையானதெல்லாம் உங்களுக்குத் தருவார்: அனைத்து நற்செயல்களையும் செய்வதற்குத் தேவையானதெல்லாம் உங்களுக்கு மிகுதியாகவே தருவார்.

2 கொரிந்தியர் 9:8

பிரிவினைச்
சபை பைபிள்
மேலும், நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்.

2 கொரிந்தியர் 9:8

Catholic
Bible
Moreover, God is able to make every grace abundant for you, so that in all things, always having all you need, you may have an abundance for every good work.

2 Corinthians 9:8

Protestant
Bible
And God is able to make all grace abound toward you; that ye, always having all sufficiency in all things, may abound to every good work:

2 Corinthians 9:8

திருவசன
கருத்து
அறிவுரை, ஆசீர்வாதம், நன்மை, ஆறுதல்
Verse
Category
Advice, Blessings, Good, Comfort

கத்தோலிக்க
திருவிவிலியம்
ஆண்டவரை நம்பு; நலமானதைச் செய்; நாட்டிலேயே குடியிரு; நம்பத் தக்கவராய் வாழ்.

திருப்பாடல்கள் 37:3

பிரிவினைச்
சபை பைபிள்
கர்த்தரை நம்பி நன்மை செய்; தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள்.

சங்கீதம் 37:3

Catholic
Bible
Trust in the LORD and do good that you may dwell in the land* and live secure.

Psalms 37:3

Protestant
Bible
Trust in the LORD, and do good; so shalt thou dwell in the land, and verily thou shalt be fed.

Psalms 37:3

திருவசன
கருத்து
ஆசீர்வாதம், நன்மை, நம்பிக்கை
Verse
Category
Blessings, Good, Trust

கத்தோலிக்க
திருவிவிலியம்
இந்த உலகத்தின் போக்கின்படி ஒழுகாதீர்கள். மாறாக, உங்கள் உள்ளம் புதுப்பிக்கப் பெற்று மாற்றம் அடைவதாக! அப்போது கடவுளின் திருவுளம் எது எனத் தேர்ந்து தெளிவீர்கள். எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது என்பதும் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்

உரோமையர் 12:2

பிரிவினைச்
சபை பைபிள்
நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.

ரோமர் 12:2

Catholic
Bible
Do not conform yourselves to this age but be transformed by the renewal of your mind, that you may discern what is the will of God, what is good and pleasing and perfect

Romans 12:2

Protestant
Bible
And be not conformed to this world: but be ye transformed by the renewing of your mind, that ye may prove what is that good, and acceptable, and perfect, will of God.

Romans 12:2

திருவசன
கருத்து
அறிவுரை, ஆசீர்வாதம், ஆறுதல், துணிவு, நன்மை
Verse
Category
Advice, Blessings, Comfort, Confident, Good

கத்தோலிக்க
திருவிவிலியம்
தீமையை விட்டு விலகி நன்மை செய்க! நல்வாழ்வை நாடி, அதை அடைவதிலே கருத்துக் கொள்க!1

1 பேதுரு 3:11

பிரிவினைச்
சபை பைபிள்
பொல்லாப்பைவிட்டு நீங்கி, நன்மைசெய்து, சமாதானத்தைத் தேடி, அதைப் பின்தொடரக்கடவன்.

1 பேதுரு 3:11

Catholic
Bible
must turn from evil and do good, seek peace and follow after it.

1 Peter 3:11

Protestant
Bible
Let him eschew evil, and do good; let him seek peace, and ensue it.

1 Peter 3:11

திருவசன
கருத்து
துணிவு, ஆறுதல், நன்மை
Verse
Category
Confident, Comfort, Good