திருவசன வகைகள்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.

S.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை
கத்தோலிக்க
திருவிவிலியம்
ஆகவே உலகப்போக்கிலான உங்கள் இயல்புக்குரிய பரத்தைமை, ஒழுக்கக்கேடு, கட்டுக்கடங்காத பாலுணர்வு, தீய நாட்டம், சிலைவழிபாடான பேராசை ஆகியவற்றை ஒழித்துவிடுங்கள்.

கொலோசையர் 3:5

பிரிவினைச்
சபை பைபிள்
ஆகையால், விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்.

கொலோசெயர் 3:5

Catholic
Bible
Put to death, then, the parts of you that are earthly:c immorality, impurity, passion, evil desire, and the greed that is idolatry.*

Colossians 3:5

Protestant
Bible
Mortify therefore your members which are upon the earth; fornication, uncleanness, inordinate affection, evil concupiscence, and covetousness, which is idolatry:

Colossians 3:5

திருவசன
கருத்து
அறிவுரை, கட்டளைகள்
Verse
Category
Advice, Rules

கத்தோலிக்க
திருவிவிலியம்
இகழ்வாரைத் திருத்த முயல்வோர் அடைவது ஏளனமே: பொல்லாரைக் கண்டிப்போர் பெறுவது வசைமொழியே

நீதி மொழிகள் 9:7

பிரிவினைச்
சபை பைபிள்
பரியாசக்காரனைக் கண்டிக்கிறவன் இலச்சையடைகிறான்; துன்மார்க்கனைக் கண்டிக்கிறவன் தன்னைக் கறைப்படுத்திக்கொள்ளுகிறான்.

நீதி மொழிகள் 9:7

Catholic
Bible
Whoever corrects the arrogant earns insults; and whoever reproves the wicked incurs opprobrium.

The Proverbs 9:7

Protestant
Bible
He that reproveth a scorner getteth to himself shame: and he that rebuketh a wicked man getteth himself a blot.

The Proverbs 9:7

திருவசன
கருத்து
அறிவுரை, கட்டளைகள்
Verse
Category
Advice, Rules

கத்தோலிக்க
திருவிவிலியம்
உடலின் மதிப்புக் குறைவான உறுப்புகள் என நமக்குத் தோன்றுபவற்றிற்கே நாம் மிகுந்த மதிப்புக் கொடுக்கிறோம். நம் மறைவான உறுப்புகளே மிகுந்த மதிப்புப் பெறுகின்றன.

1 கொரிந்தியர் 12:23

பிரிவினைச்
சபை பைபிள்
மேலும், சரீர அவயவங்களில் கனவீனமாய்க் காணப்படுகிறவைகளுக்கே அதிக கனத்தைக் கொடுக்கிறோம்; நம்மில் இலட்சணமில்லாதவைகளே அதிக அலங்காரம் பெறும்;

1 கொரிந்தியர் 12:23

Catholic
Bible
and those parts of the body that we consider less honorable we surround with greater honor, and our less presentable parts are treated with greater propriety,

1 Corinthians 12:23

Protestant
Bible
And those members of the body, which we think to be less honourable, upon these we bestow more abundant honour; and our uncomely parts have more abundant comeliness.

1 Corinthians 12:23

திருவசன
கருத்து
ஆரோக்கியம் , ஆறுதல், கட்டளைகள்
Verse
Category
Health, Comfort, Rules

கத்தோலிக்க
திருவிவிலியம்
வழிவழிச் சொத்தின் எல்லையை மாற்றி அமைக்காதே: உன் நிலத்தின் எல்லையைத் தள்ளித் தள்ளி, திக்கற்றவர்களின் நிலத்தை எடுத்துக்கொள்ள முயலாதே.

நீதி மொழிகள் 23:10

பிரிவினைச்
சபை பைபிள்
பூர்வ எல்லைக்குறியை மாற்றாதே; திக்கற்ற பிள்ளைகளுடைய நிலங்களை அபகரித்துக்கொள்ளாதே.

நீதி மொழிகள் 23:10

Catholic
Bible
Do not remove the ancient landmark, nor invade the fields of the fatherless;

The Proverbs 23:10

Protestant
Bible
Remove not the old landmark; and enter not into the fields of the fatherless:

The Proverbs 23:10

திருவசன
கருத்து
அறிவுரை, பாதுகப்பு, கட்டளைகள்
Verse
Category
Advice, Safe, Rules

கத்தோலிக்க
திருவிவிலியம்
நல்லவரது சொத்து அவருடைய மரபினரைச் சேரும்: பாவி சேர்த்த செல்வமோ கடவுளுக்கு அஞ்சி நடப்போரை வந்தடையும்.

நீதி மொழிகள் 13:22

பிரிவினைச்
சபை பைபிள்
நல்லவன் தன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்குச் சுதந்தரம் வைத்துப்போகிறான்: பாவியின் ஆஸ்தியோ நீதிமானுக்காக சேர்த்துவைக்கப்படும்.

நீதி மொழிகள் 13:22

Catholic
Bible
The good leave an inheritance to their children’s children, but the wealth of the sinner is stored up for the just.

The Proverbs 13:22

Protestant
Bible
A good man leaveth an inheritance to his children's children: and the wealth of the sinner is laid up for the just.

The Proverbs 13:22

திருவசன
கருத்து
அறிவுரை, உடன்படிக்கை , ஆசீர்வாதம், கட்டளைகள், நீதி
Verse
Category
Advice, Covenant, Blessings, Rules, Righteous