திருவசன வகைகள்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.

S.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை
கத்தோலிக்க
திருவிவிலியம்
எங்கள் மூதாதையர் உம்மில் நம்பிக்கை வைத்தனர்; அவர்கள் நம்பியதால் நீர் அவர்களை விடுவித்தீர்.

திருப்பாடல்கள் 22:4

பிரிவினைச்
சபை பைபிள்
எங்கள் பிதாக்கள் உம்மிடத்தில் நம்பிக்கைவைத்தார்கள், நம்பின அவர்களை நீர் விடுவித்தீர்.

சங்கீதம் 22:4

Catholic
Bible
Our fathers trusted in thee: they trusted, and thou didst deliver them.

Psalms 22:4

Protestant
Bible
in you our ancestors put their trust, they trusted and you set them free.

Psalms 22:4

திருவசன
கருத்து
போற்றுதல், ஆறுதல், நம்பிக்கை
Verse
Category
Praise, Comfort, Faith

கத்தோலிக்க
திருவிவிலியம்
என்னைக் கருப்பையினின்று வெளிக்கொணர்ந்தவர் நீரே; என் தாயிடம் பால்குடிக்கையிலேயே என்னைப் பாதுகாத்துவரும் நீரே!

திருப்பாடல்கள் 22:9

பிரிவினைச்
சபை பைபிள்
நீரே என்னைக் கர்ப்பத்திலிருந்து எடுத்தவர், என் தாயின் முலைப்பாலை நான் உண்கையில் என்னை உம்முடையபேரில் நம்பிக்கையாயிருக்கப்பண்ணினீர்.

சங்கீதம் 22:9

Catholic
Bible
It was you who drew me from the womb and soothed me on my mother's breast.

Psalms 22:9

Protestant
Bible
But thou art he that took me out of the womb: thou didst make me hope when I was upon my mother's breasts.

Psalms 22:9

திருவசன
கருத்து
ஆறுதல், பாதுகப்பு, நம்பிக்கை
Verse
Category
Comfort, Safe, Faith

கத்தோலிக்க
திருவிவிலியம்
ஏனெனில் நேர்மையுடையோர் தம் நம்பிக்கையால் வாழ்வு அடைவர் என மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா! இவ்வாறு மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்கும் கடவுளின் செயல் நற்செய்தியில் வெளிப்படுகிறது. தொடக்கமுதல் இறுதிவரை இந்தச் செயல் நம்பிக்கையின் அடிப்படையில்தான் நிகழ்கிறது.

உரோமையர் 1:17

பிரிவினைச்
சபை பைபிள்
விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது

ரோமர் 1:17

Catholic
Bible
For in it is revealed the righteousness of God from faith to faith;* as it is written, “The one who is righteous by faith will live.”

Romans 1:17

Protestant
Bible
For therein is the righteousness of God revealed from faith to faith: as it is written, The just shall live by faith.

Romans 1:17

திருவசன
கருத்து
அறிவுரை, ஆசீர்வாதம், நம்பிக்கை
Verse
Category
Advice, Blessings, Faith

கத்தோலிக்க
திருவிவிலியம்
நாம் காண்பவற்றின் அடிப்படையில் அல்ல, நம்பிக்கையின் அடிப்படையிலேயே வாழ்கிறோம்.

2 கொரிந்தியர் 5:7

பிரிவினைச்
சபை பைபிள்
இந்தத் தேகத்தில் குடியிருக்கையில் கர்த்தரிடத்தில் குடியிராதவர்களாயிருக்கிறோமென்று அறிந்தும், எப்பொழுதும் தைரியமாயிருக்கிறோம்.

2 கொரிந்தியர் 5:7

Catholic
Bible
for we walk by faith, not by sight.

2 Corinthians 5:7

Protestant
Bible
For we walk by faith, not by sight:

2 Corinthians 5:7

திருவசன
கருத்து
நம்பிக்கை
Verse
Category
Faith