திருவசன வகைகள்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.

S.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை
கத்தோலிக்க
திருவிவிலியம்
நீங்கள் மனம் மாறுவதற்காக நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். எனக்குப் பின் ஒருவர் வருகிறார். அவர் என்னைவிட வலிமை மிக்கவர். அவருடைய மிதியடிகளைத் தூக்கிச் செல்லக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்.

மத்தேயு நற்செய்தி 3:11

பிரிவினைச்
சபை பைபிள்
மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; எனக்குப்பின் வருகிறவர் என்னிலும் வல்லவராயிருக்கிறார், அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுப்பார்.

மத்தேயு 3:11

Catholic
Bible
I am baptizing you with water, for repentance, but the one who is coming after me is mightier than I. I am not worthy to carry his sandals. He will baptize you with the holy Spirit and fire

Matthew 3:11

Protestant
Bible
I indeed baptize you with water unto repentance: but he that cometh after me is mightier than I, whose shoes I am not worthy to bear: he shall baptize you with the Holy Ghost, and with fire:

Matthew 3:11

திருவசன
கருத்து
ஞானஸ்நானம்
Verse
Category
Baptism

கத்தோலிக்க
திருவிவிலியம்
அப்பொழுது, ' என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன் ' என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.

மத்தேயு நற்செய்தி 3:17

பிரிவினைச்
சபை பைபிள்
அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி, இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.

மத்தேயு 3:17

Catholic
Bible
And a voice came from the heavens, saying, "This is my beloved Son, 13 with whom I am well pleased."

Matthew 3:17

Protestant
Bible
And lo a voice from heaven, saying, This is my beloved Son, in whom I am well pleased.

Matthew 3:17

திருவசன
கருத்து
ஞானஸ்நானம்
Verse
Category
Baptism

கத்தோலிக்க
திருவிவிலியம்
உன்னை நான் பெரிய இனமாக்குவேன்: உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்: நீயே ஆசியாக விளங்குவாய்.

தொடக்கநூல் 12:2

பிரிவினைச்
சபை பைபிள்
நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.

ஆதியாகமம் 12:2

Catholic
Bible
"I will make of you a great nation, and I will bless you; I will make your name great, so that you will be a blessing.

Genesis 12:2

Protestant
Bible
And I will make of thee a great nation, and I will bless thee, and make thy name great; and thou shalt be a blessing:

Genesis 12:2

திருவசன
கருத்து
ஞானஸ்நானம், உடன்படிக்கை
Verse
Category
Baptism, Covenant

கத்தோலிக்க
திருவிவிலியம்
நம்முள் வல்லமையோடு செயல்படுபவரும் நாம் வேண்டுவதற்கும் நினைப்பதற்கும் மிகவும் மேலாக அனைத்தையும் செய்ய வல்லவருமான கடவுளுக்கே

எபேசியர் 3:20

பிரிவினைச்
சபை பைபிள்
நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,

எபேசியர் 3:20

Catholic
Bible
Now to him who is able to accomplish far more than all we ask or imagine, by the power at work within us,

Ephesians 3:20

Protestant
Bible
Now unto him that is able to do exceeding abundantly above all that we ask or think, according to the power that worketh in us,

Ephesians 3:20

திருவசன
கருத்து
ஞானஸ்நானம்
Verse
Category
Baptism

கத்தோலிக்க
திருவிவிலியம்
யோசுவா மக்களிடம், உங்களைத் தூய்மையாக்கிக்கொள்ளுங்கள். நாளை ஆண்டவர் உங்களிடையே வியத்தகு செயல்கள் புரிவார் என்றார்.

யோசுவா 3:5

பிரிவினைச்
சபை பைபிள்
யோசுவா ஜனங்களை நோக்கி: உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள்; நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார் என்றான்.

யோசுவா 3:5

Catholic
Bible
Joshua also said to the people, “Sanctify yourselves, for tomorrow the LORD will perform wonders among you.”

Joshua 3:5

Protestant
Bible
And Joshua said unto the people, Sanctify yourselves: for tomorrow the LORD will do wonders among you.

Joshua 3:5

திருவசன
கருத்து
ஞானஸ்நானம், அறிவுரை
Verse
Category
Baptism, Advice