தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்

தமிழ் கிறிஸ்தவ பாடல்கள் இணையத்தளம் உங்களை வரவேற்கிறது !

அல்லேலுயா அல்லேலுயா


அல்லேலுயா அல்லேலுயா
நம் இயேசுவுக்கு அல்லேலுயா
நம் பிதாவுக்கு அல்லேலுயா
ஆவியானவருக்கல்லேலுயா


1. துய உள்ளம் துதிகளினாலே
தேவ ஆலயம் அல்லேலுயா (2)
துதி பிறந்திடுதே என் நாவினிலே
களி கூர்ந்திடுதே என் இருதயமே
பேரானந்தம் ஆனந்தம் ----- (2)


2. தோல்வியெல்லாம் துதிகளினாலே
ஜெயமானது அல்லேலுயா (2)
இனி பயமுமில்லை ஒரு கலக்கமில்லை
என் வாழ்வினிலே இனி தோல்வியில்லை
எந்த நேரமும் ஜெயம் ஜெயமே ---- (2)


3. இயேசுவின் நாமம் துதியாலே
மகிமையான அல்லேலுயா (2)
ஓ! துதி மகிமை அவர் ஒருவருக்கே
முழு இருதயமும் என் நேசருக்கே
பேர் புகமெல்லாம் இயேசுவுக்கே --- (2)