தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்

தமிழ் கிறிஸ்தவ பாடல்கள் இணையத்தளம் உங்களை வரவேற்கிறது !

அல்லேலுயா அல்லேலுயா


அல்லேலுயா அல்லேலுயா
ஜீவனுள்ள தேவன் நீரே
ஆராதிக்கின்றோம் ஆர்ப்பரிக்கின்றோம்
உயிரோடிருப்பவரை


1. மரணமே உன் கூர் எங்கே
பாதாளமே உன் ஜெயம் எங்கே
என்றே முழங்கி ஜெயித்தெழுந்தீர்
சாவை வென்றுவிட்டீர்


2. சாவாமையுள்ள தேவன் நீரே
சதாகாலமும் ஜீவிக்கின்றீரே
நீண்ட ஆயுள் உள்ளவரே
நிரந்தரமானவரே


3. முதலும் முடிவும் இல்லாதவரே
ஆதி அந்தம் எல்லாம் நீரே
அநாதி தேவனாய் இருப்பவரே
அழிவில்லாதவரே


4. கல்லுமல்ல மண்ணும் அல்ல
ஆவியான தேவன் நீரே
மகிமையின் ராஜா ஜீவிக்கின்றீர்
என்னோடு இருக்கின்றீர்


5. உயிர்த்தெழுதலும் ஜீவனும் நீரே
உமக்குள் மரிப்போர் உயிர்த்தெழுவாரே
இயேசுவின் பின்னே வருவோருக்கு
மரணம் என்றும் இல்லையே