தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்

தமிழ் கிறிஸ்தவ பாடல்கள் இணையத்தளம் உங்களை வரவேற்கிறது !

ஆவியானவரே அனலாய்


ஆவியானவரே அலைாய் இறங்கிடுமே
எல்லா ஆவியின் வரங்களோடு
பலமாய் இங்கு இறங்கும் இன்று


1. வானங்கள் இன்று திறக்கட்டுமே
அபிஷேக மழையே பெய்யட்டுமே
உன்தை ஆவியை ஊற்றிடுமே
மறுரூபமாய் என்னை மாற்றிடுமே


2. பெந்தெகொஸ்தே நாளின் அனுவங்கள்
அப்படியே இன்று நடக்கட்டுமே
பலத்த காற்றின் முழுக்கம்போல் - ஒரு
வல்லமை இங்கு வீசட்டுமே


3. அக்கினி மயமான நாவுகள்
எங்கள் மேல் வந்து அமரட்டுமே
ஆவியின் வரங்கள் யாவையுமே
வெளிப்படுத்தணுமே செயல்படுத்தணுமே


4. கண்ணீர் கவலைகள் மறையணுமே
கட்டுகள் யாவும் உடையணுமே
அற்புதம் அதிசயம் நடக்கணுமே - நீர்
யார் என்று ஜனம் அறியணுமே


5. பெலத்தின் ஆவியால் நிரம்பணுமே
சாட்சிகளாய் எங்கும் வாழணுமே
எங்கள் சித்தம் மறையணுமே
தேவ சித்தம் நிறைவேறணுமே