தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்

தமிழ் கிறிஸ்தவ பாடல்கள் இணையத்தளம் உங்களை வரவேற்கிறது !

ஆவியோடும் உண்மையோடும்


ஆவியோடும் உண்மையோடும்
ஆண்டவரை தொழுதிடுவோம்
பரிசுத்த அலங்காரத்துடனே நாமும்
பரிசுத்தரை தொழுவோமே


1. நடுக்கத்தோடும் பயபக்தியோடும்
கர்த்தரில் களிகூறுவோம்
பனிந்து குனிந்து தலைகள் தாழ்த்தி
பாதம் பணிந்திடுவோம் - அவர்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
பரிசுத்தரிடம் பாவமில்லையே - அவர்
பரிசுத்தம் எல்லையில்லையே


2. ஆர்வத்தோடும் ஆனந்தத்தோடும்
சந்நிதி வாருங்களே
கர்த்தரே தேவன் மகாராஜன்
என்றே சொல்லுங்களே-அவர்
வாசலில் துதியோடும் புகழ்ச்சியோடும்
வந்து கீர்த்தனம் பண்ணுங்களே -துதி
பலிகளை செலுத்துங்களே


3. உதட்டிலல்ல உள்ளத்திலிருந்து
ஸ்தோத்திர பலியிடுவோம்
ஒன்று கூடி ஒருமனமாய்
பாடி புகழ்ந்திடுவோம்-அவரே
தேவன் நாம் அவர் ஆடுகளே
அவர் சத்தியம் மேய்ந்திடுவோம்-அதில்
என்றென்றும் நிலைத்திருப்போம்