தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்

தமிழ் கிறிஸ்தவ பாடல்கள் இணையத்தளம் உங்களை வரவேற்கிறது !

இயேசுவே என் நேசரே


இயேசுவே என் நேசரே - உந்தன்
அன்பை சொல்லி சொல்லி பாடுவேன்
மீட்பரே நெஞ்சின் நேசரே - உந்தன்
நேசம் என்னை கொள்ளை கொள்ளுதே
எங்கும் பரிசுத்தமே
எல்லையில்லா பெலமே
என்னில் வாழும் உண்மை தெய்வமே (2)


1. கர்த்தரே தங்குமிடம் எந்தன் தேகமானதே
கர்த்தரே செல்லுமிடம் எந்தன் நோக்கமானதே
வாழ்வெல்லாம் அவர் துதி சொல்லியே
நாளெல்லாம் அவர் புகழ்பாடியே
மகிழ்ந்து மகிழ்ந்து அவர் அன்பில் மகிழ்ந்து
புகழ்ந்து புகழ்ந்து அவர் அன்பில் புகழ்ந்து
ஸ்தோத்திரம் சாற்றியே துதிப்பேன்


2. இதயம் தங்கிவிட்ட இன்ப ஜீவ ஒளியே
உதயம் ஆகிவிட்ட உன்னதத்தின் ஆவியே
வெற்றியின் மேல் வெற்றி சூடுமே
வேந்தனின் வல்ல கரம் என்றுமே
மகிமை மகிமை இயேசு நாமம் மகிமை
இனிமை இனிமை அவர் நாமம் இனிமை
ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம்