தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்

தமிழ் கிறிஸ்தவ பாடல்கள் இணையத்தளம் உங்களை வரவேற்கிறது !

இயேசு நாமம் சொல்ல


இயேசு நாமம் சொல்ல சொல்ல
எங்கும் எதிலும் ஜெயமே ஜெயமே
அல்லேலுயா அல்லேலுயா


1. இயேசுவின் நாமத்தில் புது பெலன் உண்டு
உலர்ந்த எலும்பும் உயிர்பெறும் இன்று
பெலவீனம் சுகவீனம் நீங்கிடும் இன்று
உன்னத வல்லமை இறங்கிடும் இன்று
தெய்வீக சுகமுண்டு - நம்
இயேசுவின் நாமத்திலே (2)


2. இயேசுவின் பேர் சொல்ல பேய் நடு நடுங்கும்
அசுத்த ஆவிகள் அகன்றே ஓடும்
அந்தகார வல்லமை அழிந்தே போகும்
சாத்தானின் கோட்டைகள் தகர்ந்தே நொறுங்கும்
பிசாசை ஜெயித்திடுவோம் - நம்
இயேசுவின் நாமத்திலே


3. இயேசுவின் நாமத்தில் கேட்பது கிடைக்கும்
அற்புதம் அதிசயம் எதுவும் நடக்கும்
இருளும் விலகி வெளிச்சம் தோன்றும்
துக்கம் எல்லாம் சந்தோஷமாகும்
வாழ்வே புதிதாகும் - நம்
இயேசுவின் நாமத்திலே


4. இயேசுவின் பெயரை சொல்லி அழைத்தாலே
ஆர்வமாக ஓடி வருவாரே
அன்பின் கரத்தால் அள்ளி அணைப்பாரே
கண்களில் வழியும் கண்ணீர் துடைப்பாரே
துக்கி சுமந்திடுவார் - நம்
துன்பம் நீக்கிடுவார்