தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்

தமிழ் கிறிஸ்தவ பாடல்கள் இணையத்தளம் உங்களை வரவேற்கிறது !

இயேசு ராஜா


இயேசு ராஜா
நன்றி என்று சொல்லுகிறேன்
செய்த நன்மை நினைத்து
துதி சொல்லி பாடுகிறேன்
காலையும் மாலையும் எந்த வேளையிலும்
துதி பாடல் ஓய்வதில்லை
காலமே மாறினும் சூழ்நிலை மாறினும்
நாவில் துதி ஓய்வதில்லை


1. வானம் புூமி யாவும் ஆளுகின்றவரே
ராஜ்யம் எல்லையில்லையே - உம்
என்னை யாளும் ராஜாவே - உம்
அன்பினில் எல்லையில்லையே


2. வாக்கு மாறா தேவன் வாக்குத்ததம் தந்து
சொன்னதெல்லாம் செய்தீரே - நீர்
பொய்யுரையா என் தேவனே - நீர்
மனம் மாறுவதில்லையே


3. வாக்குகடங்காத பெருமுச்சோடு
வேண்டுதல் செய்கின்றீர் - எனக்காகவே செய்கின்றீர்
எனக்காக யாவையுமே - நீர்
செய்து முடிக்கின்றீர்


4. பாவங்களுக்கேற்ற தண்டனை தராமல்
மன்னிப்பையும் தந்தீரே - நீர்
இரக்கத்தில் ஐஸ்வர்யமே - உம்
இரக்கத்தில் முடிவில்லையே


5. பாதாளத்தில் நானும் போய் சேர்ந்திடாமல்
பாதுகாத்து கொண்டீரே - நீர்
என் நீதியால் இல்லையே - உம்
சுத்த கிருபையினாலே