தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்

தமிழ் கிறிஸ்தவ பாடல்கள் இணையத்தளம் உங்களை வரவேற்கிறது !

இராஜாதி இயேசு ராஜா


இராஜாதி இயேசு ராஜா
இணையில்லா இயேசு ராஜா
இயேசுவோடு என்றென்றும் வாழ
இதயமெல்லாம் தினம் ஏங்குதே
தினம்தோறும் தேடி பாடிட என் மனம்
அவரிடம் வந்திடுதே


1. பெலப்படுத்திடும் கிறிஸ்துவினாலே
எதையும் செய்ய பெலனுண்டு - எனக்குண்டு
ஜெயங்கொடுத்திடும் கிறிஸ்துவினாலே
எதிலும் ஜெயம் எனக்குண்டு - எனக்குண்டு
எனக்குள்ளே அவர் வாழ்வதினாலே
எதற்கும் பயம் இனி இல்லையே
எனக்காக யாவையும் செய்து முடிப்பாரே
எல்லாமே பார்த்துக் கொள்வார் - அவர் (2)


2. போகும் இடமே எதுவானாலும்
கூட அவர் வருவாரே - வருவாரே
கால்கள் சறுக்கி விழுந்து விடாமல்
தோளில் சுமந்திடுவாரே - சுமப்பாரே
என்னைவிட்டு விலகுவதில்லை
என்னையே கை விடுவதுமில்லை
பலவீனம் நீங்கியே கலக்கங்கள் நீங்கியே
பலங்கொண்டு திடமானேன் - நான் (2)


3. கர்த்தர் எனக்கு செய்திட்ட உதவி
கணக்கிலே அடங்காது - அடங்காது
என்ன ஈடாய் செய்திடுவேனோ
எதுவும் இணையாகாது - ஆகாது
இரட்சிப்பின் பாத்திரம் கையில் எந்தி
இரட்கரை துதி பாடுவேன்
சந்தோஷம் என்னிலே தானாக பொங்குதே
அவரோடு மகிழ்ந்திருப்பேன் - நான் (2)