தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்

தமிழ் கிறிஸ்தவ பாடல்கள் இணையத்தளம் உங்களை வரவேற்கிறது !

இறங்கிடுதே இறங்கிடுதே


இறங்கிடுதே இறங்கிடுதே
ஆவியின் வல்லமை இறங்கிடுதே
பாய்ந்திடுதே பாய்ந்திடுதே
அக்கினியாக பாய்ந்திடுதே
இயேசுவின் நாமம் உயர்ந்திடுதே
சாத்தான் கிரியை அழிந்திடுதே


1. தண்ணீரை கடந்தாலும் வெள்ளம் மோதிடாதே
அக்கினியில் நடந்தாலும் வேகாமல் காக்கின்றாரே
சர்வ வல்ல தேவனே
நம்மோடிருக்கின்றாரே
ஆவியானவரே
நம்மோடுலாவுகின்றார்


2. வெண்கல கதவெல்லாம் உடைந்து நொறுங்குதே
இரும்பு தாழ்பாள்கள் முறிந்து விழுந்திடுதே
தடைகள் உடைக்கின்றாரே
மதிலும் தகர்க்கின்றாரே
பலத்த கரமே இங்கு ஜெயத்தை கொண்டு வருதே


3. கட்டுகள் எல்லாம் அந்ககாரமெல்லாம்
கண்ணீர் கவலையெல்லாம் தீராத வியாதியெல்லாம்
சுட்டெரிக்கின்றாரே
சுகமாக்குகின்றாரே
அக்கினி நதியாய் - இப்போ
பாய்ந்து இங்கு வருதே


4. கனிகள் தந்திட சாட்சியாக வாழ
தேவ பெலனடைய நாம் அபிசேகத்தில் நிரம்ப
ஊற்று தண்ணீராக - ஒர்
ஜீவநதியாக
வல்லமை பலமாய் - இப்போ
இறங்கி இங்கு வருதே