தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்

தமிழ் கிறிஸ்தவ பாடல்கள் இணையத்தளம் உங்களை வரவேற்கிறது !

உலகம் பொய்யம்மா


உலகம்பொய்யம்மா இந்த
உறவும் பொய்யம்மா
இயேசுவின் அன்பு அதுமட்டும் இன்று
உலகினில் உண்மையம்மா (2)


1. மனித வாழ்வு மாயையம்மா
மறையும்நிழலம்மா அது கருகும் புல்லம்மா
புூத்து குலுங்கும் காட்டுப் புூக்கள்
காற்றில் உதிருமம்மா உன் வாழ்வும் புூவம்மா
மரங்கள் கூட சாய்ந்த பின்பு
துளிர்த்து தழைக்குமம்மா
மனித ஜீவன் மாய்ந்த பின்பு
திரும்ப வாராதம்மா
ஜீவன் போகும் முன் ஜீவனை தந்த உன்
தேவன் இயேசுவை தேடம்மா


2. பிறக்கும் போது கையில் நீயும்
கொண்டுவந்ததென்ன உன் கூட வந்ததென்ன
இறக்கும் போதும் கையில் நீயும்
கொண்டு போவதென்ன உன் கூட வருவதென்ன
இடையில் ஏனோ சேர்த்து வைக்க
ஆசை வந்ததென்ன
பட்ட பாடுபோட்ட திட்டம்
பொசுங்கி போவதென்ன
பாரலோகத்தில் நீ சேர்த்த சொத்துதான்
அது ஒன்றே நிலையம்மா